Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அக்டோபர் மாத ராசி பலன் 2020: கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி

அக்டோபர் மாதத்தில் கடகம்,சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு செல்வம் பெருகும், செல்வாக்கு அதிகரிக்கும்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: அக்டோபர் மாதத்தில் கடகம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் தேடி வரும், சிம்மம் ராசிக்காரர்களுக்கு செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும், யோகமான மாதமாக அமைந்துள்ளது. அக்டோபர் கன்னி மாதம் பாதி நாட்களும், துலாம் மாதம் பாதி நாட்களும் இணைந்தது. புரட்டாசி மாதம் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் ஐப்பசியில் துலாம் ராசிக்கு மாறுகிறார். சூரியன் துலாம் ராசியில் நீச்ச நிலையில் சஞ்சரிப்பார். இந்த மாதத்தில் கடகம், சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.

அக்டோபர் மாதம் மற்ற கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் கன்னி மற்றும் துலாம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் மேஷம் ராசியில் இருந்து வக்ரகதியில் மீனம் ராசிக்கு பயணம் செய்கிறார். ரிஷபத்தில் ராகு சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் சுக்கிரன் பயணம் செய்கிறார் 23ஆம் தேதி கன்னி ராசிக்கு வந்து நீச்சமடைகிறார்.

கன்னி ராசியில் உள்ள சூரியன் 17ஆம் தேதி வருகிறார். புதன் துலாம் ராசியில் இருந்து வக்ரகதியில் கன்னி ராசிக்கு வருகிறார். விருச்சிகத்தில் கேது சஞ்சரிக்க தனுசு ராசியில் குரு, மகரம் ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. இந்த கிரகங்களின் மாற்றம் கூட்டணியால் கடகம்,சிம்மம், கன்னி ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

செல்வம் செல்வாக்கு கூடும்

செல்வம் செல்வாக்கு கூடும்

அக்டோபர் மாதத்தில் கடகம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும் செல்வம் பெருகும் செல்வாக்கு கூடும். லாப ஸ்தானத்தில் உள்ள ராகு உங்களுக்கு அள்ளிக்கொடுக்கப் போகிறார். பூமி யோகம் தேடி வரும். பதவி, அதிர்ஷ்டம் தேடி வரும். செவ்வாய் பகவான் நிறைய ஆதாயங்களை தரப்போகிறார். ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்க்கும் கண்ட சனியால் சின்னச் சின்ன உடல் உபாதைகள் ஏற்படும். சுக்கிரன் இரண்டாம் வீட்டிற்கு நகர்கிறார். இனிமையான சம்பவங்கள் நடைபெறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். தடைகள் நீங்கி நன்மைகள் நடைபெறும். திருமண சுப காரியங்கள் நடைபெறும்.

யோகமான மாதம்

யோகமான மாதம்

வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். புரமோசன் கிடைப்பதில் நீண்ட நாட்களாக இருந்த தடைகள் நீங்கும்.குரு ஆறாம் வீட்டில் இருப்பதால் வங்கிக் கடன் கிடைக்கும். பிசினஸ் செய்பவர்களுக்கு வியாபாரத்தை விருத்தி செய்ய கடன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். சொத்து வீடு வாங்க முயற்சி செய்யலாம். காதலிப்பவர்களுக்கு திருமண யோகம் கைகூடி வரும். குடும்பத்தில் உற்சாகம் அதிகமாகும். சுக்கிரன் இரண்டாம் இருக்கிறார். சூரியன் நல்ல நிலையில் சஞ்சரிக்கிறார். இந்த மாதம் நினைத்த காரியம் படிப்படியாக நிறைவேறும். வெளியூர் பயணங்கள் வெற்றிகரமாக முடியும். தேவையான பொருளாதார உதவிகள் கிடைக்கும். இந்த மாதம் யோகமான மாதமாகும்.

மன அமைதி தரும் மாதம்

மன அமைதி தரும் மாதம்

அக்டோபர் மாதம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நெருக்கடிகள் நீங்கும் மாதமாகும். வேலையில் இருந்த பிரச்சினைகள் தீரும். குரு உங்க ராசியை பார்வையிடுவதால் பிரச்சினைகள் தவிடு பொடியாகும். எந்த காரியம் செய்வதற்கு முன்பும் பெரியவர்களின் ஆலோசனைகளை பெற்றுச் செல்வது நல்லது. உங்க ராசிநாதன் சூரியன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். மன நிறைவு மன மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமண சுப காரியங்கள் கைகூடி வரும். ராசியில் சுக்கிரன் இருப்பதால் முகப்பொலிவு கூடும். பண வரவு அதிகரிக்கும். குடும்ப தேவைகள் பூர்த்தியாகும்.

ஆரோக்கியத்தில் கவனம்

ஆரோக்கியத்தில் கவனம்

சனி ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார் எதிரிகள் வழியில் ஏற்பட்டு வந்த பிரச்சினை நீங்கும். பத்தில் ராகு பல தொழில் செய்ய வைக்கும். நான்காம் வீட்டில் கேது இருப்பதால் பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பயணங்கள் மூலம் அலைச்சல் அதிகமாகும். கோபத்தை கட்டுப்படுத்துங்கள். யாரை நம்பியும் எந்த ரகசியத்தையும் வெளியே சொல்லி விட வேண்டாம். செவ்வாய் வக்ரமடைந்து எட்டாம் வீட்டில் சஞ்சரிப்பதால் பயணங்களில் கவனம் தேவை. நிதானமாக செல்வது நல்லது. அமைதியாக இருந்தால் குடும்பம் அற்புதமாக இருக்கும். மாத பிற்பகுதியில் உங்க ராசிநாதன் மூன்றாம் வீட்டில் நீசமடைந்து சஞ்சரிப்பதால் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

சாமர்த்தியம் கூடும்

சாமர்த்தியம் கூடும்

ராசிக்கு மூன்றாம் வீட்டில் ராகு ஒன்பதாம் வீட்டில் கேது பயணிக்கிறார். சூரியன் இந்த மாதம் உங்க ராசியிலும் இரண்டாம் வீட்டிலும் பயணம் செய்கிறார். மாத முற்பகுதியில் உடல் உஷ்ணம் அதிகரிக்கும். எந்த வேலையையும் வேகமாக செய்து முடிப்பீர்கள். அரசு அதிகாரிகள் உயர் பதவியில் இருப்பவர்களுக்கு டிரான்ஸ்பர் கிடைக்கும். புதன் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் பயணம் செய்கிறார், பேச்சில் சாமர்த்தியம் அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். உங்களின் பேச்சிற்கு மதிப்பு கூடும். புதன் வக்ரமடைந்து சஞ்சரிக்கும் காலத்தில் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலையில் எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது.

கோபம் தவிர்க்கவும்

கோபம் தவிர்க்கவும்

நான்காம் வீட்டில் குரு சஞ்சரிக்கிறார் குருவின் பார்வை பத்தில் விழுவதால் வேலையில் மாற்றம் வரும். மாணவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும், படித்த படிப்பிற்கு ஏற்ப வேலை கிடைக்கும். தனித்த குரு பார்வை உங்க ராசிக்கு வேலையை கொடுப்பார். 12ஆம் வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார் குடும்பத்தோடு சிறு பயணங்கள் செல்வீர்கள். சுகமான பொழுது போக்கு ஏற்படும். கேது மூன்றாம் வீட்டில் இருப்பதால் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். மனக்குறைகள் நீங்கும். எந்த சூழ்நிலையிலும் ரகசியங்களை வெளியே கொட்டி விட வேண்டாம். செவ்வாய் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசியையும் இரண்டாம் வீட்டினையும் பார்க்கிறார். கோபத்தை கட்டுப்படுத்துங்கள், தியானம் செய்வது நல்லது. வேலை செய்யும் இடத்தில் கவனமும் எச்சரிக்கையும் தேவை.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+