அக்டோபர் மாத ராசி பலன் 2020: ரிஷபம் மிதுனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி
அக்டோபர் மாதத்தில் ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த மாதமாக அமையப்போகிறது.
சென்னை: அக்டோபர் மாதத்தில் ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதிர்ஷ்டமான காலம் இது. இந்த மாதம் நிறைய நல்ல செய்திகள் தேடி வரும். அக்டோபர் கன்னி மாதம் பாதி நாட்களும், துலாம் மாதம் பாதி நாட்களும் இணைந்தது. புரட்டாசி மாதம் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் சூரியன் ஐப்பசியில் துலாம் ராசிக்கு மாறுகிறார். சூரியன் துலாம் ராசியில் நீச்ச நிலையில் சஞ்சரிப்பார். இந்த மாதத்தில் ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி என்று பார்க்கலாம்.
அக்டோபர் மாதம் மற்ற கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால் சூரியன் கன்னி மற்றும் துலாம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். செவ்வாய் மேஷம் ராசியில் இருந்து வக்ரகதியில் மீனம் ராசிக்கு பயணம் செய்கிறார். ரிஷபத்தில் ராகு சஞ்சரிக்கிறார். சிம்ம ராசியில் சுக்கிரன் பயணம் செய்கிறார் 23ஆம் தேதி கன்னி ராசிக்கு வருகிறார்.
கன்னி ராசியில் உள்ள சூரியன் 17ஆம் தேதி வருகிறார். புதன் துலாம் ராசியில் இருந்து வக்ரகதியில் கன்னி ராசிக்கு வருகிறார். விருச்சிகத்தில் கேது இருக்க தனுசு ராசியில் குரு, மகரம் ராசியில் சனி என கிரகங்களின் சஞ்சாரம் உள்ளது. இந்த கிரகங்களின் மாற்றம் கூட்டணியால் ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

வருமானம் கூடும்
ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்த அக்டோபர் மாதத்தில் நல்ல வேலை கிடைக்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பு அதிகமாகும். அதிர்ஷ்டமான காலம் இது. இந்த மாதம் நிறைய நல்ல செய்திகள் தேடி வரும். சிம்ம ராசியில் உள்ள ராசி நாதன் சுக்கிரன் உங்க சுகத்தை அதிகரிப்பார். காரணம் சுக்கிரன் நான்காம் வீட்டில் அமர்கிறார். நிறைய சந்தோஷம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி
உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் அமர்ந்து மறைந்திருக்கிறார். மறைந்த புதன் நிறைந்த கல்விதான். கடன் பிரச்சினை நீங்கும். மாணவர்களுக்கு இது ரொம்ப நல்ல காலம். மனம் நிறைந்த காலம் இது மாத பிற்பகுதியில் 17ஆம் தேதி சூரியன் புதன் உடன் இணைகிறார், சூரியன் ஆறாம் வீட்டில் நீசமடைந்தாலும் பிரச்சினை இல்லை. குரு எட்டாம் வீட்டில் இருந்தாலும் குருவின் பார்வை சாதகமான இடங்களில் விழுவது சந்தோஷம். வாழ்க்கைத்துணையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.

புத்திக்கூர்மை கூடும்
மிதுனம் ராசிக்காரர்களுக்கு அக்டோபர் மாதத்தில் புதன் ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். ஆற்றல் அதிகரிக்கும். புத்தி கூர்மை ஏற்படும். உங்களின் சிந்தனை தெளிவாகும். புதன் பார்வை 11ஆம் வீட்டில் விழுவதால் லாபம் அதிகரிக்கும். வியாபார வர்த்தகத்தில் மேன்மை ஏற்படும். பேச்சில் தெளிவு ஏற்படும். குரு உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்ப்பதால் மனதில் உற்சாகம் ஏற்படும். மாணவர்களுக்கு நன்மைகள் நடைபெறும்.உயர்கல்வி யோகம் கிடைக்கும்.

சுப செலவுகள் அதிகரிக்கும்
வேலை செய்யும் இடத்தில் திறமை பளிச்சிடும். உயரதிகாரிகளால் பாரட்டப்படுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் கட்டுப்படும். தேவையில்லாத பேச்சுக்கள் சிந்தனைகளை தவிர்த்து விடுங்கள். இந்த கஷ்டம் தற்காலிகமானது என்பதை உணர்ந்து தெளிவான முடிவு எடுங்கள். உங்களின் மன ஆசைகள் நிறைவேறும். சுப செலவுகள் அதிகரிக்கும். சனி எட்டாம் வீட்டில் இருப்பதால் சின்னச் சின்ன தடை தாமதங்கள் ஏற்படும். திருமணம் பற்றிய சிந்தனைகள் வேண்டாம். பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications