திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா - ஆன்லைனில் டிக்கெட் விற்பனை - ஆதார் எண் அவசியம்
திருவண்ணாமலை தீபத் திருவிழாவையொட்டி சிறப்பு தீப தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் விற்பனை தமிழக அரசின் இணையதளத்தில் தொடங்கியுள்ளது. ஆதார் எண், செல்போன் எண், இமெயில் முகவரி அவசியம்.
திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிறப்பு கட்டண தரிசன டிக்கெட்கள் பெற விரும்பும் பக்தர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். டிக்கெட்டுகளை புக் செய்ய ஆதார் எண், செல்போன் எண், இ மெயில் முகவரி அவசியமாகும்.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை சிவபெருமானின் பஞ்ச பூதத்தலங்களில் நெருப்புத்தலமாக போற்றப்படுகிறது. இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 14ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் நிறைவாக, வரும் 23ஆம் தேதியன்று அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், மாலை 6 மணிக்கு மகாதீபமும் ஏற்றப்படும்.

இதையொட்டி பரணி தீபம், மகா தீபம் தரிசனம் செய்வதற்கான சிறப்புக் கட்டண டிக்கெட் விற்பனை செய்யப்படுவது வழக்கம். புதன்கிழமையன்று காலை 11 மணிக்கு, இந்த டிக்கெட் விற்பனை ஆன்லைனில் தொடங்கியது.
பரணி தீப தரிசனத்துக்கு 500 ரூபாய் கட்டணத்தில் 500 டிக்கெட்டுகளும், மகா தீப தரிசனத்துக்கு 500 ரூபாய் கட்டணத்தில் 1,000 டிக்கெட்டுகளும், 600 ரூபாய் கட்டணத்தில் 100 டிக்கெட்டுகளும் வழங்கப்படும்.
முன்பதிவு செய்வதற்கு ஆதார் எண், செல்போன் எண், மின்னஞ்சல் முகவரி தேவை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட செல்போனுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும். கட்டணச் சீட்டு பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சலுக்கும் அனுப்பப்படும்.
தரிசன டிக்கெட்டுகள் பெற விரும்புபவர்கள் www.arunachaleswarartemple.tnhrce.in இந்த இணையதளத்திற்குச் சென்று ஆன்லைனில் பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications