Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புரட்டாசியில் சில ராசிக்காரர்களின் தலையெழுத்தை மாற்றப்போகும் நவ கிரகங்கள்..யாருக்கு சாதகம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். இந்த மாதம் புண்ணியம் நிறைந்த மாதம் இந்த மாதத்தில் சூரியன் ஆறாவது வீடான கன்னி ராசியில் சஞ்சரிப்பார். இந்த மாதம் முழுக்க விரத நாட்கள்தான். முன்னோர்களை வணங்கும் மாதம். அம்மனுக்காக நவராத்திரி பண்டிகை கொண்டாடும் மாதம். மேஷம் முதல் மீனம் 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு புரட்டாசி மாதம் எப்படி உள்ளது என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன என்று பார்க்கலாம்.

புரட்டாசி மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தை பார்த்தால் கன்னி ராசியில் சூரியன் புதனோடு இணைந்துள்ளார். சிம்ம ராசியில் உள்ள சுக்கிரன் சில நாட்களில் கன்னி ராசியில் இணைகிறார். மேஷம் ராசியில் ராகு, ரிஷப ராசியில் செவ்வாய், துலாம் ராசியில் கேது, மகரத்தில் சனி, மீன ராசியில் குரு என கிரக சஞ்சாரம் உள்ளது.

புரட்டாசி 7ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். 15ஆம்தேதி புதன் பகவான் வக்ர சஞ்சாரம் முடிகிறது. 29ஆம் தேதி செவ்வாய் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். நவகிரகங்களின் பயணம், கூட்டணி, பார்வையால் எந்த ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷம் ராசிக்காரர்களே..யோகமான மாதம். நிதி நிலை அற்புதமாக இருக்கும் பணவரவு வரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நல்ல வேலை கிடைக்கும். உயரதிகாரிகளிடம் பொறுமையாகவும் கவனமாகவும் நடந்து கொள்ளுங்கள். குடும்பத்தோடு ஆலய தரிசனம் செய்வீர்கள். மகிழ்ச்சி அதிகரிக்கும். செய்யும் தொழிலில் லாபம் வரும் பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். சூரியன் 6ஆம் வீட்டில் இருப்பதால் எதையும் எச்சரிக்கையோடு கையாளுங்கள். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பது அவசியம் வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும். ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் நீங்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். புரட்டாசி அமாவாசை நாளில் தானம் பண்ணுங்கள் நல்லது நடக்கும்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷபம் ராசிக்காரர்களே, புரட்டாசி மாதம் உங்க ராசிக்கு சாதகமான நிலையில் கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டில் சூரியன் புதன் இணைந்திருப்பதால் பிதுர்ராஜ்ஜித சொத்துக்கள் மூலம் லாபம் வரும். இந்த மாதம் நிம்மதியும் சந்தோஷமும் நிறைந்திருக்கும் மாதம். நிதி நிலைமை அற்புதமாக இருக்கும். கடன் பிரச்சினை நீங்கும். புதிய தொழில் தொடங்கலாம். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ராசிநாதன் சாதகமான இடத்தில் இருப்பதால் தொழில் லாபம் வரும். சிலருக்கு பதவி உயரும் சம்பள உயர்வும் கிடைக்கும். சகோதர சகோதரிகளால் நன்மைகள் நடைபெறும். சிலருக்கு இடமாற்றம் வரலாம். சிலருக்கு வீடு மனை மாற்றம் வரலாம். பெண்களுக்கு இது நல்ல மாதம் குடும்பத்திலும் பணியிடத்திலும் மதிப்பு மரியாதை கூடும். பிரதோஷம் நாளில் சிவபெருமானையும் நந்தியையும் வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்

மிதுனம்

புதன் பகவானை ராசி நாதனாகக் கொண்ட மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தின் படி சிறப்பான யோகங்கள் நடைபெறப்போகிறது. காரணம் உங்க ராசி நாதன் புதன் ஆட்சி உச்சம் பெற்று சூரியனோடு இணைந்து அமர்ந்திருக்கிறார். உங்களுடைய தன்னம்பிக்கை தைரியம் அதிகரிக்கும். உங்களின் சொல்வாக்கும் செல்வாக்கும் அதிகரிக்கும். வருமானம் கூடும். வங்கி சேமிப்பும் அதிகரிக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உத்யோக உயர்வும் வருமான உயர்வும் ஏற்படும் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும். வெளிநாடு யோகமும் ஏற்றுமதி இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு வருமானம் கூடும். சிலருக்கு திடீர் உடல் நலக்கோளாறுகள் வரலாம். இந்த நேரத்தில் கடன் வாங்க வேண்டாம் தவிர்த்து விடுங்கள்.

கடகம்

கடகம்

சந்திர பகவானை ராசி நாதனாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் சந்தோஷங்கள் நிறைந்த மாதம். குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். நிதி நெருக்கடிகள் நீங்கும். அப்பாவினால் நன்மைகள் நடைபெறும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். நிதித்துறையில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். பணவருமானம் அதிகரிக்கும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். குடும்பத்தில் சிலருக்கு சின்னச் சின்ன சண்டை சச்சரவு வரும். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை. சதுர்த்தி நாளில் விநாயகரை அருகம்புல் சாற்றி வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்மம்

சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே, இந்த மாதம் உங்க ராசி நாதன் குடும்ப ஸ்தானத்தில் ஆட்சி உச்சம் பெற்ற புதனுடன் இணைந்து சஞ்சரிப்பதால் நிறைய தன லாபம் கிடைக்கும். புகழ் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்கும். உங்க பேச்சிற்கு மதிப்பு கூடும் என்றாலும் ஒவ்வொரு சொல்லையும் யோசித்து பேசுவது நல்லது. கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். அப்பாவின் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். அப்பா வழி சொத்துக்கள் கிடைக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வும் இடமாற்றமும் ஏற்படும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வருமானம் கூடும் வங்கி சேமிப்பு உயரும். மாணவர்களுக்கு நல்ல மாதம், உயர்கல்வியில் தேர்வுகளை தைரியமாக எதிர்கொள்வீர்கள். இந்த மாதம் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

கன்னி

கன்னி

புதனை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசியில் பிறந்த ராசிக்காரர்களுக்கு இந்த புரட்டாசி மாதம் உங்களுக்கு அற்புதங்கள் நிகழப்போகிறது காரணம் உங்க ராசிநாதன் புதன் உங்க ராசியில் ஆட்சி பெற்று சூரியனோடு இணைந்திருக்கிறார். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு பணி நிரந்தரம் ஏற்படும். அரசு துறையில் வேலை செய்பவர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்கும். உங்களின் சுறுசுறுப்பும் உற்சாகமும் ஏற்படும். குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும். கல்வித்துறையில் வேலை செய்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறும். மாணவர்களுக்கு முன்னேற்றம் கிடைக்கும். பெண்களுக்கு நகை ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும்.
ஷேர் மார்க்கெட் லாபத்தை கொடுக்கும். உணவு விசயத்தில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும். கன்னி ராசிக்காரர்கள் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை கொடுத்து வணங்க நன்மைகள் நடைபெறும்.

துலாம்

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான மாதம். சூரியனும் புதனும் விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். வேலை தொழிலில் புதிய மாற்றங்கள் ஏற்படும். அலுவலகத்தில் உயரதிகாரிகள் சொல்வதை கேட்டு நடந்து கொண்டால் நன்மைகள் நடைபெறும். ராசி நாதன் சுக்கிரன் லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தொழிலில் நிறைய லாபமும் பண வருமானமும் வரும். வருமானம் இருமடங்காகும். எந்த அளவிற்கு பணவருமானம் வருகிறதோ அதே போல சுப செலவுகளும் வரும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிறைய நடைபெறும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். விட்டுக்கொடுத்து போங்க. தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு இந்த மாதம் பதவி உயர்வு பற்றிய அறிவிப்பு வரும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிகம்

செவ்வாயை ராசி அதிபதியாகக் கொண்ட விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு புரட்டாசி மாதம் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்படப்போகிறது. லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் சஞ்சரிப்பதால் உங்களுக்கு ராஜ சன்மானம் கிடைக்கும். புகழ் செல்வாக்கு அதிகரிக்கும். வேலையில் உற்சாகம் பிறக்கும். செய்யும் தொழிலில் லாபம் கூடும். அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அப்பா வழி சொத்துக்கள் கைக்கு வரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் கிடைக்கும். மருத்துவ செலவுகள் குறையும். புதிய வண்டி வாகன சேர்க்கை ஏற்படும். மாணவர்களுக்கு உற்சாகமான மாதம். புதிய வீடு வாங்க நினைப்பவர்கள் இந்த மாதம் அட்வான்ஸ் கொடுக்கலாம்.

தனுசு

தனுசு

குருவை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, புரட்டாசி மாதம் உங்க ராசிக்கு யோகாதிபதி சூரியன் 10ஆம் வீட்டில் சஞ்சரிக்கிறார். பத்தில் சூரியன் பதவி உயர்வை தரப்போகிறார். வாழ்க்கையில் புதிய மாற்றம் உண்டாகும். புதிய தொழில் தொடங்கலாம். வியாபாரத்தில் லாபம் வரும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பிரச்சினைகள் நீங்கும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உற்சாகம் அதிகரிக்கும். பிள்ளைகளின் உயர்கல்விக்காக செலவுகள் வரும். கடன் வாங்குவீர்கள். கடன் கிடைக்கிறதே என்று அதிகமாக கடன் வாங்கி கடனாளி ஆகி விட வேண்டாம். குடும்பத்தோடு ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். மகாளய அமாவாசை நாளில் தானம் செய்ய நன்மைகள் நடைபெறும்.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகரம் ராசிக்காரர்களே, சூரியன் இந்த மாதம் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். பாக்ய ஸ்தானத்தில் சூரியன் புதனோடு இணைந்து வலுவாக இருப்பதால் புதிய தொழில் தொடங்கலாம். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பணியில் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். பாராட்டுக்கள் கிடைக்கும். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வீடு வாங்க, தொழில் தொடங்க உங்களுக்கு குறைந்த வட்டிக்கு கடன் கிடைக்கும். புது வீடு மாறும் யோகம் வரும். வேலை தொழிலில் இடம் மாற்றம் ஏற்படும். சுக்கிரன் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் தடைகள் விலகும். அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பணம் கொடுக்கல் வாங்கல் விசயத்தில் கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள் கொடுத்த பணம் திரும்ப வராது.

கும்பம்

கும்பம்

சூரியன் இப்போது எட்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். கணவன் மனைவி இடையை சிறுசிறு கருத்து மோதல்கள் வந்து போகும். சுக்கிரன் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்வையிடுவதால் கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். இந்த மாதம் பொருளாதார வளர்ச்சி ஏற்படும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் கிடைக்கும். அம்மாவிற்கு உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். பணம் விசயத்தில் கவனமாக இருங்க. ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீர்கள். பொருளாதாரத்தில் எச்சரிக்கையும் கவனமும் தேவை. வேலை செய்பவர்கள் உயரதிகாரிகளிடம் கவனமாக இருப்பது நல்லது. சுய தொழில் செய்பவர்கள் இந்த மாதம் அதிக முதலீடுகள் செய்யாமல் தவிர்ப்பது நல்லது.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களே இந்த மாதம் உங்களுக்கு நிறைய சாதகமான சம்பவங்கள் நடைபெறும். உச்சம் பெற்ற புதன் பார்வை உங்கள் ராசிக்கு கிடைக்கிறது. சூரியன் ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்க ராசியை பார்வையிடுவதால் அரசு பதவியில் இருப்பவர்களுக்கு நல்ல யோகமான மாதம், பதவி உயர்வு தேடி வரும். யோகமான நேரம் கைகூடி வருகிறது. அரசியல்வாதிகள் வரும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். சூரியன் பார்வை நேரடியாக கிடைப்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை, உடல் உஷ்ணம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த எதிரிகள் பிரச்சினை நீங்கும். பணம் பல வழிகளில் இருந்தும் வரும். நோய் தொந்தரவுகள் நீங்கும். திருமண யோகம் கைகூடி வருகிறது. குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+