Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு 2025: சனி சுக்கிரன் சேர்க்கை.. குபேர யோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்

Subscribe to Oneindia Tamil

புத்தாண்டு பலன் 2025: புத்தாண்டு பிறக்கப் போகிறது. கிரகங்களின் மாற்றங்களினால் சில ராசிகள் அதிர்ஷ்டங்களைப் பெறவுள்ளன. புத்தாண்டின் தொடக்கத்தில் சனி மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் 3 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது. அந்த வகையில், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொட்டப் போகிறது என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலம்... (New year rasi palan)

புத்தாண்டில் புதுப் புது மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்பட வேண்டும் என்பது தான் அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருக்கும். வரும் ஆண்டு புதுமை தரும் ஆண்டாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருக்கும். 2025 புத்தாண்டின் தொடக்கத்தில் சனி மற்றும் சுக்கிரன் கிரகம் கும்ப ராசியில் சேர்ந்து சந்திக்கவுள்ளனர். சுக்கிரனும், சனியும் சேர்வதால் கேந்திர யோகத்தால் குபேர யோகத்தை சில ராசிக்காரர்கள் பெறவுள்ளனர்.

2025 newyear rasi palan astrology 2025

அந்த வகையில், இந்தப் புத்தாண்டில் தொழில், வியாபராம், கல்வி, நிதி நிலை போன்றவற்றில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்... (3 lucky zodiac signs get gubera yogam in 2025)

ரிஷபம் (New year rasi palan for rishabam): ரிஷப ராசியை சேர்ந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு அற்புதமான பலன்களைத் தரவுள்ளது. ஆன்மீகம், வழிபாடு தொடர்பான விஷயங்களில் ஈடுபடும் ஆர்வம் ஏற்படும். ஆன்மீக யாத்திரை, சுற்றுலா உள்ளிட்ட பயணங்களுக்கு செல்ல திட்டமிடுவீர்கள். உங்கள் வாழ்வில் வளர்ச்சியை ஏற்படுத்தும் விஷயங்களில் கவனம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். தொழில், வியாபராத்தில் லாபம் பெரும். பொருளாத சூழ்நிலை மேம்படும்.

வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்வதன் மூலம் நல்ல பல அனுபவங்களைப் பெறும் வாய்ப்புள்ளது. பண வரவு சூப்பராக இருக்கும். செல்வம் சேர்ப்பதில் கவனம் செலுத்துவீர்கள். உடல்நலனில் ஏற்பட்டு வந்த பல்வேறு பாதிப்புகள் நீங்கும். இதுவரை தடைபட்டு வந்த அனைத்து காரியங்களையும் செய்து முடித்து அதில் வெற்றியும் காண்பீர்கள்.

கன்னி (New year rasi palan for kanni): கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டு அதிர்ஷ்டங்களை அள்ளித் தரும் ஆண்டாக அமையும். தடைபட்டு வந்த, முடங்கிக் கிடந்த அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். நீங்கள் கொடுத்து வராமல் இருந்த பணங்கள் உங்களைத் தேடி வரும். பண வரவு உண்டாகும். வெளியூர், வெளிநாடு பயணங்கள் நல்ல பலன்களைத் தரும். லாட்டரி, பங்குச் சந்தை உள்ளிட்டவை மூலம் பெரிய அளவில் லாபம் பார்ப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் அருள் உள்ளதால் தொட்ட காரியங்கள் துலங்கும். அனைத்து துறைகளிலும் சிறப்பான வெற்றியைக் காண்பீர்கள். உங்களுடைய நிதிநிலையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு மற்றும் மகிழ்ச்சி பெருகும். உடல் நல பாதிப்புகள் அனைத்தும் தீரும். மகிழ்ச்சியான ஆண்டாக இருக்கும்.

துலாம் (New year rasi palan for thulam): துலாம் ராசிக்காரர்களுக்கு 2025 புத்தாண்டு மகத்தான மாற்றங்களைத் தரவுள்ளது. பல்வேறு நற்பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்ப உறவுகளுடன் நல்ல ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் அடைய நினைக்கும் அனைத்து இலக்குகளையும் அடையும் யோகம் உள்ளது. வேலை காரணமாக வெளியூர், வெளிநாடு செல்லும் பயணங்கள் வெற்றியைத் தரும். வியாபாரம், தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். பொருளாதார சூழல் மேம்படும். பண வரவு அதிகரிக்கும். உடல்நலனில் கவனம் செலுத்துவது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+