ராகு கேது பெயர்ச்சி 2022: யாருடைய குடும்பத்தில் கவலைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும் தெரியுமா
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.
சென்னை: மீன ராசிக்காரர்களே, ராகு பகவான் குடும்ப ஸ்தானமான இரண்டாவது வீட்டிற்கும் எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்தில் கேதுவும் பயணம் செய்கின்றனர். உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் உங்கள் குடும்ப வாழ்க்கையில் சில நன்மைகள் ஏற்படப்போகிறது. நிழல் கிரகங்களின் இடப்பெயர்ச்சி பார்வைகளால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. ரிஷப ராசியில் இருந்து ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் இருந்து கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்பதால் எதிர்திசையில் சுழலும். இந்த கிரகங்களுக்கு சொந்த வீடு இல்லை செவ்வாயைப் போல ராகுவும், சுக்கிரனைப் போல கேதுவும் பலன் தரப்போகின்றனர். திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஏப்ரல் 13ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது.
18 மாதங்கள் ராகுவும் கேதுவும் மேஷம் மற்றும் துலாம் ராசிகளில் பயணம் செய்கின்றனர். இந்த 18 மாதங்களில் ராகுவும், கேதுவும் மீன ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன யோகத்தைத் தரப்போகிறார்கள், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.

மீன ராசிக்கு உற்சாகம்
நேர்மையான எண்ணமும் சுறுசுறுப்பான செயல்பாடுகளும் கொண்ட மீன ராசி நேயர்களே, தானம் கொடுப்பதில் சிறந்தவர் நீங்கள்தான். குடும்ப ஸ்தானத்தில் வரும் ராகுவினால் வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். உங்கள் பேச்சில் கவனமும் நிதானமும் தேவை, தவறான புரிந்து கொண்டு சண்டைக்கு வர வாய்ப்பு உள்ளது.

திடீர் திருப்பங்கள் வரும்
சகோதர சகோதரிகள் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. கடன் வாங்கிய பணத்தை தராமல் ஏமாற்றியவர்கள் நேரில் வந்து கொடுத்து விட்டு செல்வார்கள். திடீர் திருப்பங்கள் நிகழப்போகிறது. காரியத்தடைகள் நீங்கும் வெற்றி கை கூடும். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம. எதிர்பாலினத்தவரிடம் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதாரவு கிடைக்கும். சிக்கல்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

கேது தரும் மன நிம்மதி
கேது பகவான் ராசிக்கு எட்டாவது வீட்டிற்கு மாறியுள்ளதால் அலைச்சல் அதிகரிக்கும். பயணங்களின் கவனம் தேவை. என்றாலும் இனி வரும் காலங்களில் சிக்கல்கள் நீங்கி மன நிம்மதி அதிகரிக்கும். திடீர் செலவுகளால் சேமித்த பணம் கரையும். ஒருவித பயமும் பதற்றமும் வந்து நீங்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கிடைக்கும்.

கவனமும் நிதானமும் தேவை
செப்டம்பர் மாதம் முதல் கவனமும் நிதானமும் தேவை. உடல் சோர்வும் அவ்வப்போது மன உளைச்சலும் ஏற்படலாம்.
அலுவலகத்தில் பணிச்சுமையும் உண்டாகும். மன தடுமாற்றம் இருந்தாலும் சில நேரங்களில் தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். அவசர முடிவுகள் எடுத்து விட்டு அவதிப்பட வேண்டாம். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் வந்து நீங்கும். பேச்சில் கனிவும் செயலில் துணிவும் தேவைப்படும் காலகட்டமாகும்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications