குருவை விட்டு பிரியும் ராகு.. முடிவுக்கு வரும் குரு சண்டாள யோகம்... குரு பார்வையால் யாருக்கு லக்?
சென்னை: மேஷ ராசியில் உள்ள ராகு குரு கூட்டணி பிரியப்போகிறது. ராகு கேது பெயர்ச்சியால் குரு சண்டள யோகம் முடிவுக்கு வரப்போகிறது. கடந்த ஆறு மாதகாலமாக குரு ராகு கூட்டணியால் பலவித பிரச்சினைகளை சந்தித்த ராசிக்காரர்கள் இனி நிம்மதியையும் மகிழ்ச்சியும் அடையப்போகிறார்கள். யாருக்கெல்லாம் ராஜயோகமும், கோடீஸ்வர யோகமும் தேடி வரப்போகிறது என்று பார்க்கலாம்,
குரு சண்டாள யோகம்: குருபகவான் நவகிரகங்களில் சுப கிரகம். செல்வம், செல்வாக்கு, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் என மனிதர்களுக்குத் தேவையான அததனை நன்மைகளையும் செய்பவர். எனவேதான் குரு ஒருவரின் ஜாதகத்தில் வலிமையாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். குரு ஒருவரின் ராசி அல்லது லக்னத்தைப் பார்த்தால் அது வலிமையானதாக இருக்கும். குருபகவான் வலிமையானவராக இருந்தால் அது கோடீஸ்வர யோகத்தை தரும். குரு பகவான் ராகு உடன் சேரும் போது குரு சண்டாள யோகத்தை ஏற்படுத்துவார் இது சிலருக்கு சாதகத்தையும் சிலருக்கு பாதகத்தையும் தரும். திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைப்பதில் தடையும் தாமதங்களும் ஏற்படும். எனவே குரு தோஷம் நீங்குவதற்கு பரிகாரம் செய்வதன் மூலம் பாதிப்புகள் குறையும்.

மேஷம்: குரு உங்கள் ராசியில் பயணம் செய்வதால் புது முயற்சிகள் கைகூடும். தொட்டது துலங்கும்.கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் இருந்த சூழ்நிலை மாறும். கடந்த காலங்களில் வருமானம் தடை கடுமையான செலவுகள் வீண் விரையம் ஆகியவை கடும் மனக் கஷ்டத்தைக் கொடுத்தது. குருவின் பார்வை படும் 5, 7, 9, ஆகிய ஸ்தானங்கள் வலுவடைய போகிறது. ஜந்தாம் பாவத்தை கோசார குரு பார்த்தால் உயர்பதவி கிடைக்கும், புது முயற்சிகள் கை கூடும், ஆண் பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு ஆண் குழந்தைகள் பிறக்கும் எல்லா கனவுகளும் பூர்த்தியாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும்.அதே போல் 7 ஆம் இடத்தை குரு பார்க்கப்போவதால்.கூட்டு தொழில் நண்பர்கள் ஆதரவு வெளிநாட்டு பயணம் தடைப்பட்ட திருமணம் ஆகியவை எல்லாம் இனிதே நடக்கும். ராகுவை விட்டு குரு பிரிந்தாலும் சனிபகவான் பார்வை குருவின் மீது விழுகிறது. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
ரிஷபம்: விரைய ஸ்தானத்தில் தனித்த குரு பயணம் செய்கிறது. குருவின் பார்வை நாலாம் வீட்டை பார்க்கிறது நாலாம் பாவம் சுக ஸ்தானம் என்று பெயர். வீடு மனை தாயார் வாகன சுகம் ஆகியவற்றை பார்ப்பதால் வீடு மனை வாங்கும் யோகம் அசையா சொத்துகளால் கோர்ட் வம்பு வழக்குகள் இருந்தால் அது உங்களுக்கு சாதகமாக தீர்ப்பாகும் வண்டி வாகனம் மாற்றம் வரும் வீடு விஸ்தரிப்பு செய்வதுடன் வீட்டை புதுப்பித்து கட்ட கூடிய வாய்ப்பு வரும். 6 ஆம் இடத்தை குரு பார்வையிடுவதால் இது வரை இருந்த நோய் பாதிப்புகள் மறையும். இதுவரை பகையாக இருந்தவர்கள் நட்பாக மாறுவார்கள். 8 ஆம் வீட்டை குருபார்ப்பதால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சிகரமாக இருக்கும் வெளிநாட்டு பயணம் ஏற்படும் நன்றாக சம்பாதித்து அசையா சொத்துகள் வாங்கும் நேரம். சுப விரைய செலவுகள் அதிகரிக்கும். பல வழிகளில் பணம் வந்தாலும் சேமிப்பே இல்லையே என்ற நிலைமாறி சேமிப்பு அதிகரிக்கும்.
மிதுனம்: குரு பகவான் லாப ஸ்தானத்தில் தனித்த குருவாக பயணம் செய்கிறார். 3, 5, 7, ஆகிய ஸ்தானங்களை பார்க்கிறார் ஜாதகத்தில் முன்றாம் பாவம் சகோதரம் சகாயம் தைரியம் வீரம் முயற்சி ஸ்தானம் என்று பெயர். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு அப்பா அம்மா இருந்து செய்ய வேண்டியதை சகோதரன் முன்னிலையில் இருந்து செய்வார்கள். சிலருக்கு சொத்து பரிமாற்றங்கள் நடக்கும். அது நல்ல மாற்றமாக இருக்கும் அடுத்து பூர்வபூண்ணிய ஸ்தானம் என்ற 5 ஆம் பாவத்தை குரு பார்க்கிறார் உங்களுக்கு பொறுப்புகள் கூடும் பதவிகள் தேடி வரும் கனவுகள் பூர்த்தியாகும். திருமணம் ஆகியும் பல ஆண்டு காலமாக புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். நல்ல வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு கை நிறைய சம்பளத்தில் வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை ஊதிய உயர்வு தலைமை பொறுப்பு தேடி வரலாம். ராசிக்கு ஏழாம் வீட்டை குரு பார்க்கிறார். களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் இது வரை தடைப்பட்ட திருமணம் நடக்கும். ஓரே நேரத்தில் பஞ்சம ஸ்தானம் களத்திர ஸ்தானத்தை குரு பார்ப்பதால் சிலருக்கு ரத்த வழி சம்பந்தபட்ட உறவில் திருமணம் நடக்கும். சொந்த தொழில் கூட்டு தொழில் லாபம் தரும். குலதெய்வ அனுகிரகம் கிட்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் தரும்.

கடகம்: கடக ராசிக்காரர்களுக்கு குரு பத்தில் பயணம் செய்கிறார். பத்தாம் வீட்டில் குரு வந்தால் பதவி நாசம் என்பார்கள். எல்லோருக்கும் பதவி போய் விடாது பதவியில் சுகமும் தேடி வரும். குருவின் பார்வை 2, 4, 6, ஆகிய ஸ்தானத்தை பார்க்கிறார்.குடும்ப ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதார அபிவிருத்தி ஏற்படும்.குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.சொல்லும் செயலும் நிறைவேறும். இது வரை கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றி விடலாம்.பணம் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும்.மனவருத்தங்களால் பிரிந்த தம்பதியினர் ஓன்று கூடுவார்கள். புது வீடு கட்டி குடிபோகலாம். வண்டி வாகனம் வாங்கும் யோகமும்,ரொம்ப நாளாக வாட்டி வதைத்த நோய் நொடிகள் நிங்கி நலமும் உண்டாகும். நீண்ட நாள் கனவுகள் பூர்த்தியாகும். தன்னுடைய 9 ஆம் பார்வையாக ஆறாம் பாவத்தை பார்ப்பதால் எதிரிகள் நண்பர்கள் ஆவார்கள்.கடன்கள் கோர்ட் வழக்குகள் முற்றிலும் அகலும். புது முயற்சிகள் கை கூடும்.
சிம்மம்: குரு பகவான் ஓன்பதாம் பாவமான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ஐந்தாம் பார்வையாக உங்கள் ராசியை பார்க்கிறார் ஜாதகத்தில் ராசி என்பது புகழ் கிர்த்தி அந்தஸ்து மதிப்பை தரும் ஸ்தானம். ஓடிப்போனவனுக்கு ஓன்பதுல குரு என்பது பழமொழி. எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் முழுமையாக விடுபடலாம். ஆரோக்கியத்தில் முன்னேற்றத்தை தரும். நீண்ட காலமாக வாட்டி வதைத்த நோய்கள் விலகும். குடும்பத்தில் மகிழ்ச்சி தாண்டவம் ஆடும். புது முயற்சிகள் கை கூடும். இதுவரை தடைப்பட்ட காரியங்கள் சித்தியாகும். மூன்றாம் வீட்டினை குரு பார்வையிடுவதால் குடும்பத்தில் அமைதி நிலவும். உடன்பிறப்புகளால் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும்.கூட்டு தொழில் பாக பிரிவினை சர்ச்சைகள் இருந்தால் விலகும். ஐந்தாம் வீடான பூர்வபூண்ணிய ஸ்தானத்தை குரு பார்ப்பதால் வாரிசுக்கு ஏங்கியவர்களுக்கு எல்லாம் குழந்தை யோகம் வரும். பணம் கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருக்கவும். சனிக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது.
கன்னி: குரு பகவான் எட்டாம் வீட்டில் பயணம் செய்கிறார். மேஷ ராசியில் இருக்கும் குரு பகவான் உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12 ஆம் பாவத்தை பார்வையிடுவதால் இது வரை தடைப்பட்ட காரியங்கள் விரைந்து நடக்கும். பொருளாதார நிலை உயரும் வரவுகள் கூடும். சேமிப்புகள் கூடும் குடும்பத்தில் சுபகாரியம் நடக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த சிக்கல்கள் மறையும். வரவேண்டிய பணவரவுகள் கைக்கு வரும். பூர்விக சொத்துகள் விற்பதன் முலமாக அல்லது வாங்கிய சொத்துகள் நல்ல விலைக்கு விற்பதால் லாபம் வரும். பணத்தால் குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனகசப்புகள் அகலும்.கணவன் மனைவி உறவு பலப்படும். 4 ஆம் பாவத்தை குருபகவான் பார்ப்பதால் சிலர் அசையா சொத்து வாங்குவார்கள். புது வீடு கட்டி குடிபோவீர்கள். சிலருக்கு மனைவி வகையிலும் சொத்து வசதி வாய்ப்புகள் சேரும். அஷ்டம ஸ்தான குருவினால் உத்தியோகத்தில் அலைச்சல் வரும். அஷ்டம குரு சற்று உடல்நிலை பாதிப்பை தருவார் கவனம் தேவை.
துலாம்: குருபகவான் ராசிக்கு ஏழாம் வீட்டில் அமர்ந்து உங்கள் ராசியை பார்வையிடுகிறார். குரு தன்னுடைய ஜந்தாம் பார்வையால் லாப ஸ்தானத்தை பார்க்கிறார். குடும்பத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் தீரும். பல ஆண்டு காலமாக முயற்சி செய்த விசயங்களை எளிதில் முடிப்பிர்கள். வெளிநாடு தொடர்புடைய வேலைகள் அமையும் சம்பாதிக்கும் பணம் சொத்து வசதி வாய்ப்பு பெருக்கும்.பகைமைகள் மாறும். தனித்த குரு உங்களுக்கு கேந்திராதிபதி தோஷத்தை கொடுக்க மாட்டார் சுபகாரியம் திருமணம் கூட்டு தொழில் போன்ற நன்மைகளை செய்வார். முயற்சி ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பொருளாதார நிலையில் இருந்த முட்டுகட்டைகள் அகலும். வரவேண்டிய பாக்கிகள் வரும் கடன்கள் அடைப்படும். வியாழக்கிழமை குரு வழிபாடு செய்வது நல்லது.

விருச்சிகம்: குரு பகவான் 6ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். சுபகிரகம் ஆறில் வந்தால் அசுப பலன்கள் குறையும் என்பது ஜோதிட விதி. ஆறில் குரு ஊரேல்லாம் பகை என்பது பழமொழி. உங்களுடைய ராசிக்கு பாக்கியாதிபதியும் விரையாதிபதியுமான குரு 6 ல் வருவது ஒரு வகையில் நன்மையே. அவர் பார்வை தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் தொழிலில் மாற்றம் முன்னேற்றம் வரலாம். வெளிநாட்டு பயணம் செல்வீர்கள். இது வரை படித்து விட்டு வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சுபவிரயமும் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை. வெளியூர் பயணங்கள் அதிகரிக்கும் . பண வருமானம் அதிகரிக்கும். வருகின்ற வருமானம் எல்லாம் நல்ல விசயத்தில் செலவு செய்ய நேரிடும். அர்த்தாஷ்டம சனியால் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு நோய்கள் குணமடையும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். குடும்ப தேவைக்காக புதிய பொருட்கள் வாங்கவும் பிள்ளைகள் படிப்பு செலவுக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். பெருமாளும் முருகப்பெருமானும் சேர்ந்து அருள்பாவிக்கும் திருச்செந்தூருக்கு சென்று வியாழக்கிழமை சாமி தரிசனம் செய்வது பாதிப்புகளை குறைத்து பலன்களை அதிகரிக்கும்.
தனுசு: உங்கள் ராசி நாதன் குரு பகவான் ஜந்தாம் இடமான புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியங்கள் காதல் என்ற ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குரு பகவான் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு ஒன்பதாம் பார்ப்பதால் கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்தது போல உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தியாகும்.கடைசி நேரத்தில் நின்று போன திருமணம்,திருமணத்தடை உண்டான ஜாதகருக்கு எல்லாம் திருமணம் நடக்கும். திருமணாமாகியும் புத்திர பாக்கியம் இல்லாதவர்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டும். 11 ஆம் பாவத்தை குரு பகவான் பார்வையிடுவதால் செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும். ராசியை 9 ஆம் பார்வையாக குரு உங்கள் ராசியை பார்ப்பதால் புகழ் கீர்த்தி அந்தஸ்து பெறலாம். வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புது வீடு கட்டி குடி போகலாம். பாதியிலே நின்று போன வீட்டு வேலைகள் பூர்த்தியாகி சுபகாரியம் நடக்கும். பிள்ளைகளால் பெருமை சேரும். இதுநாள் வரைக்கும் எதிர்பார்த்த பதவி உயர்வு இடமாற்றம் கிடைக்கும்.புது வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு வாய்ப்புகள் கை கூடிவரும். தனுசு ராசிக்காரர்களுக்கு கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது
மகரம்: குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் பயணம் செய்கிறார். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு 8, 10, 12, ஆகிய ஸ்தானங்களின் மீது விழுகிறது. அஷ்டம ஸ்தானத்தை குரு பார்ப்பதால் உங்களை அவதூறு செய்தவர்கள், உங்களை வைத்து பணமோசடி செய்தவர்கள் எல்லாம் தங்களை நாடி வரும் காலம். புது நண்பர்கள் ஆதரவு அனுகூலம் ஆதாயம் கிடைக்கும் மனைவி வகையில் சிறுசிறு வைத்திய செலவுகள் வரலாம். பத்தாம் வீட்டை குரு பார்வையிடுவதால் தொழில் வளர்ச்சி அடையும். வியாபாரத்தில் முடங்கிய லாபம் எல்லாம் வரும். உத்யோக உயர்வு பதவி முன்னேற்றம் வெளிநாட்டு தொடர்பு. வேலை கிடைக்கலாம். வேலையில் நல்ல மாற்றம் முன்னேற்றத்தை தரும். 12 ஆம் பாவத்தை குரு பார்ப்பதால் இதுவரை தூக்கம் இல்லாமல் நிம்மதியை இழந்து தவித்தவர்களுக்கு பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மொத்தத்தில் குருவை விட்டு ராகு விலகப்போவதால் இன்பத்தில் துன்பம்,துன்பத்தில் இன்பம் என்று மாறி மாறி வரும் நவகிரக சன்னதியில் உள்ள குருவுக்கு வியாழக்கிழமை அர்ச்சனை செய்வது நல்லது.

கும்பம்: குரு பகவான் முன்றாம் பாவமான தைரியம் சகோதரம் வீரம் எழுத்தறிவு விளையாட்டு துறை என்று சொல்லப்படும் பாவகத்தில் பயணம் செய்கிறார். குரு பகவான் உங்களுக்கு யோகத்தை மட்டுமே செய்வார். குருவின் பார்வை படும் 7, 9, 11, பாவங்களால் யோகத்தை அனுபவிக்க போகிறீர்கள். திருமணம் தாமதமாகிக்கொண்டு இருப்பவர்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் இனிதே நடைபெறும். பிரிந்தவர்கள் ஒன்று சேருவார்கள். லாப ஸ்தானத்தை இரண்டாம் அதிபதி பார்க்கப் போவதால் பொருளாதார நிலை திருப்தி தரும். சிலர் பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கியிருந்தால் அந்த பிரச்சனைகள் முடிவு பெற்று தனவரவு ஆதாயம் கிடைக்கும்.தொழில் வளர்ச்சி மாற்றம் முன்னேற்தை தரும். நோய் நொடி தொந்தரவுகள் நீங்கும் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். மாற்று மருந்தால் நோய் நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். மகிழ்ச்சி பொங்கும். புனித யாத்திரை செல்விர்கள். குடும்பத்தோடு ஒருமுறை கொல்லூர் மூகாம்பிகையை தரிசனம் செய்வது நல்லது.
மீனம்: குரு பகவான் உங்கள் ராசி அதிபதி. ராசி அதிபதி தனஸ்தானத்தில் பயணம் செய்வதால் பண வருமானம் அதிகரிக்கும். வருமானமும் பல வழிகளிலும் வந்து கொண்டே இருக்கும். குரு பகவானின் பார்வை 6, 8, 10 ஆகிய வீடுகளின் மீது விழுவதால் உங்களுக்கு வரப்போகும் பிரச்சினைகள் எல்லாம் சூரியனை கண்ட பனிபோல மறைந்து விடும். வாக்கு ஸ்தானத்தில் குரு பயணம் செய்வதால் குடும்பத்தில் வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை உயரும். பொருளாதார நிலை திருப்தி தரும். திருமணம் சுபகாரியம் புது முயற்சிகள் கைகூடும். தொழில் வேலை வெளிநாட்டு பயணங்கள் ஆதாயத்தை தரும். இது வரை படித்து தகுதிகேற்ற வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை உத்தியோகம் முன்னேற்றம் மாற்றமும் வரும். சிலருக்கு நீண்ட காலமாக இருந்த கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும், வியாழக்கிழமை தோறும் சிவனையும் குருவையும் தரிசனம் செய்வது நல்லது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications