Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி 2023: அக்டோபர் முதல் அடிக்கப்போகும் ஜாக்பாட்..யாருக்கு விடியல் விமோசனம் வரும்?

Subscribe to Oneindia Tamil

மதுரை: ராகுபகவான் அதிர்ஷ்டத்தை வருமானத்தை அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். நவ கிரகங்களில் ராகு கேது நிழல் கிரகங்கள். ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் அக்டோபர் மாத இறுதியில் இடபெயர்ச்சி அடைய உள்ளனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்களை தரப்போகிறது என்று பார்க்கலாம்.

ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.

Rahu Ketu Peyarchi Palan 2023: Kadagam Rasi Rahu Ketu Peyarchi Palan Tamil

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சி கடகம் ராசியில் பிறந்தவர்களுக்கு கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

கடகம்: உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்கு ராகுவும் மூன்றாம் வீட்டிற்கு கேதுவும் இடப்பெயர்ச்சி அடைவது யோகம்தான். ராகு கேதுவுக்கு 3, 6, 11,ஆகிய வீடுகள் நல்ல அம்சம்தான். இதுநாள் வரை தடைபட்டு வந்த காரியங்கள் மளமளவென முடியும். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளினால் வீடு களைகட்டும். தந்தையார் சொத்துக்கு சகோதரிகள் உரிமை கொண்டாடுவார்கள். பாக்கிய ஸ்தானத்திற்கு மாறும் ராகுவினால் படபடப்பு குறையும். தள்ளிப்போன பதவி உயர்வும் ஊதிய உயர்வும் தடையின்றி கிடைக்கும். வேலைச்சுமை குறையும். வேலை செய்யும் இடத்தில் உங்களின் நிர்வாகத்திறனை மேலதிகாரி பாராட்டுவார். சிலருக்கு பெரிய நிறுவனங்களில் தகுதி திறமைக்கேற்ற வேலை கிடைக்கும்.

இனி யோகம்தான்: சர்ப்ப கிரகங்களின் இடப்பெயர்ச்சி மிகப்பெரிய யோகத்தை தரப்போகிறது. விஐபிக்களின் நட்பு கிடைக்கும். பெரிய மனிதர்களின் உதவியோடு பல நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள். நீங்கள் கேட்ட இடத்தில் பண உதவிகள் கிடைக்கும். பொன் பொருள் சேர்க்கை அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த மேற்படிப்பை தொடர்வீர்கள். அம்மா உடன் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்பத்துடன் வெளிமாநில புண்ணியத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குல தெய்வ பிரார்த்தனை கோடி நன்மையை தரும்.

சங்கடம் தீர்க்கும் கேது: உங்கள் ராசிக்கு மூன்றாம் வீடான தைரியம், வீரியம், முயற்சி ஸ்தானத்தில் கேது அமர்வது நன்மை தரும் அமைப்பாகும். சங்கடங்கள் தீர்ந்து குடும்பத்தில் மகிழ்ச்சியான சம்பவங்கள் நடைபெறும். அதே நேரத்தில் ராசிக்கு ஒன்பதாம் இடமான தகப்பன் ஸ்தானத்தில் அமர்ந்துள்ள ராகு தனுசுவில் உள்ள சனியின் சனி பார்வை பெறுவதால் அப்பாவின் உடல் நிலை பாதிக்கலாம். யோக தசைகள் நடந்தால் தலைக்கு வரும் ஆபத்து தலை பாகையோடு போய்விடும்.

Rahu Ketu Peyarchi Palan 2023: Kadagam Rasi Rahu Ketu Peyarchi Palan Tamil

எதிர்ப்புகள் விலகும்: குடும்பத்தில் சுபகாரியம் புதுமுயற்சி,திருமணம்,புத்திர பாக்கியம் போன்ற சுபமங்கள நிகழ்ச்சிகள் நடக்கும்.நிர்வாக பொருப்புகள் தேடி வரும். நிண்ட நாட்களாக எதிர்பபார்த்த உதவிகள் வேலை வாய்ப்புகள்,வெளிநாட்டு பயணங்கள் அனுகூலம் ஆதாயத்தை தரும். வருமானம் திருப்தி தரும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இதுநாள் வரை இருந்த இடையூறு நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். மொத்தத்தில் இது வரை நீங்கள் நினைத்த காரியம் கை கூடும். மனைவிக்கு தங்க நகைகளை வாங்கிக் கொடுப்பீர்கள்.

புது வீடு யோகம்: வாடகை வீட்டில் வசித்தவர்கள் சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். சொந்த வீட்டில் வசிப்பவர்கள் மாடி வீடு கட்டி குடியேறுவீர்கள். சகோதரர்களிடம் வீண் பிரச்னைகள் வேண்டாம். அவர்களிடம் கொஞ்சம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். பூர்வீக சொத்துச் சம்பந்தப்பட்ட பிரச்னைகளைக் கவனமாகக் கையாளுங்கள். இழுபறியாக இருந்த வழக்குகள் சாதகமாக முடியும். இந்த ராகு கேது விடியலையும் விமோசனத்தை தந்து பண வருமானத்தையும் சேமிப்பையும் கொடுக்கப் போகிறார். மேலும் நன்மைகள் நடைபெற விநாயகப்பெருமானுக்கு செவ்வாய்கிழமையும் அனுமனுக்கு சனிக்கிழமையும் வெற்றிலை மாலை சாற்றி வணங்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+