ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: கோடி கோடியாக அள்ளித்தரப்போகும் ராகு.. 18 மாதங்களுக்கு லக் யாருக்கு
சென்னை: ராகு பகவான் அள்ளித்தருவார்.. கேது பகவான் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துவார். ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாத இறுதியில் நிகழப்போகும் நிலையில் எந்த ராசிக்காரர்களுக்கு கோடி கோடியாக பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
மேஷம்: மேஷத்தை விட்டு ராகு விலகப்போகிறார். ஜென்ம ராகுவால் நிறைய எதிர்மறை எண்ணங்கள் கோபங்களை சந்தித்து வந்தீர்கள். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு 12ஆம் வீட்டில் விரைய ஸ்தானத்தில் ராகு செல்வது யோகம். ராகு பகவான் பயணத்தை தருவார். வேலையில் இடமாற்றம் ஏற்படும், சிலருக்கு ஊர்மாற்றம் ஏற்படும். மாணவர்களுக்கு வெளிநாடு, வெளியூர் செல்லும் யோகத்தை தரப்போகிறார். வெளிநாடு பயணம் செல்வீர்கள்.

மேஷ ராசிக்காரர்களுக்கு கேது தற்போது ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணம் செய்கிறார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு கேது ஆறாம் வீட்டிற்கு செல்கிறார். நோய்கள் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். உங்களின் பலம் அதிகரிக்கும். உங்களின் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சி கோடி கோடியாக அள்ளித்தரப்போகிறது மேஷ ராசிக்காரர்கள் அனுபவிக்கத் தயாராகுங்கள்.

ரிஷபம்: 12ஆம் வீட்டில் உள்ள ராகு லாப ஸ்தானத்திற்கு சென்று அமரப்போகிறார். எதிர்பார்க்காத தன லாபம் கிடைக்கும். திடீர் பண வரவு தேடி வரும். வீடு சொத்து வாங்குவீர்கள். யோகத்தை அள்ளித்தரப்போகிறார் ராகு பகவான். நிறைய தன வரவை தருவார். உச்சத்திற்கு செல்லப்போகிறீர்கள். குருபகவானின் வீட்டில் ராகு செல்வதால் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது.
ரிஷப ராசிக்காரர்கள் எதிர்பார்க்காத ஆதாயத்தை தேடித்தருவார் ராகு பகவான். வேலை பொருளாதார வளர்ச்சி, பேரதிர்ஷ்டத்தை தரப்போகிறார் ராகு பகவான். கேது உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். பூர்வநிறைய அதிர்ஷ்டம் வந்தாலும் அதை தடுப்பது கேது. கோவிலுக்கு சென்று ஏழைகளுக்கு தானம் கொடுப்பது நல்லது.












Click it and Unblock the Notifications