ராகு கேது பெயர்ச்சி 2023: திடீர் திருப்புமுனைகளை தரும் ராகு.. இனி உங்களுக்கு ஜாக்பாட்தான்!
சென்னை: ஜென்ம கேது.. ஏழாம் வீட்டில் பயணம் செய்யப்போகும் ராகு கன்னி ராசிக்காரர்கள் வாழ்க்கையில் திடீர் திருப்புமுனைகளை தரப்போகின்றனர். எதிர்பார்க்காத பண வரவு வரப்போகிறது. திடீர் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது. கடன் பிரச்சினைகள் தீருவதால் உங்கள் கவலைகளும் முடிவுக்கு வரப்போகிறது. ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று விரிவாக பார்க்கலாம்.
கன்னி: புதன் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கன்னி ராசிக்காரர்களே.. தொழில், வியாபாரம் வருமானம், உறவுகள் என அனைத்தையும் இழந்து இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்ற நிலையில் வாழ்ந்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி இனி மன நிம்மதியை தரப்போகிறது.கடந்த காலங்களில் உங்களின் முயற்சிகளில் தடை தாமதங்கள் வந்து கொண்டு இருந்தது. சண்டை சச்சரவுகள் இருந்தது. நண்பர்கள் உறவினர்கள் கூட உங்களுக்கு எதிராக இருந்தனர். இதன் மூலம் உங்களுக்கு நல்ல படிப்பினை கிடைத்தது. கடனில் சிக்கித்தவிக்கும் உங்களுக்கு தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமை: திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் விலகப்போகிறது. விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறியவர்கள் இனி மனம் திருந்தி ஒன்று சேருவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளுக்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் தேடி வரும். ராகு ஏழாம் வீட்டில் இருந்தாலும் கவலைப்பட வேண்டாம் அஷ்டம குருவிடம் இருந்து விலகப்போகிறார். உங்களுக்கு நல்ல யோகம்தான். இனி வரும் காலங்களில் உங்களுக்கு நிறைய திருப்புமுனைகள் ஏற்படும். இனி வெற்றிகளை மட்டுமே ருசிக்கப் போகிறீர்கள்.
பதவி உயர்வு: பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். அரசு வேலை, அரசியல்வாதிகளுக்கு இதுநாள் வரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். பேர் புகழ் கிடைக்கும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். எதிர்பார்க்காத பண வரவு வரும். கடன் சுமைகள் நீங்கும். நீங்க கொடுத்து நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும்.

ஜென்ம கேது: விரைய ஸ்தானத்தில் பயணம் செய்யும் கேது அக்டோபர் மாதம் முதல் கன்னி ராசியில் வந்து அமரப்போகிறார். இனி நெருக்கடிகள் நீங்கும். உங்களுடைய வாழ்க்கை உச்சமடையப்போகிறது. கேது உங்க ராசிநாதன் போல உங்களுக்கு வெற்றிகளை தருவார். மனதில் சந்தோஷத்தையும் சிந்தனையில் தெளிவையும் தருவார் ஞானகாரகன் கேது.
பரிகாரம் என்ன: இதுநாள் வரை பல நெருக்கடிகளை கொடுத்து வந்தனர். இனி அந்த நெருக்கடிகள் எல்லாம் தீரப்போகிறது. இனி மன அழுத்தம் நீங்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். யோக காரகன் ராகு களத்திர ஸ்தானத்திற்கு வரப்போகிறார். ஞான காரகன் கேது உங்கள் ராசிக்கு வரப்போகிறார். உங்கள் ராசிக்கு இந்த ஆண்டு நினைப்பது ஒன்று நடப்பது ஒன்றுமாக இருக்கிறது. ஒரே சலிப்போடு வாழ்க்கையை நகர்த்திக்கொண்டு இருக்கிறீர்கள். எப்போது விடியும் வாழ்க்கை இப்படியே போய் விடுமோ என்று பயப்படவேண்டாம். ராகு கேது பெயர்ச்சி நன்மைகளைத் தரப்போகிறது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து பூஜை அறையில் விளக்கேற்றி தியானம் செய்யுங்கள் நல்லதே நடக்கும் மனக்குழப்பங்கள் தீரும். திருச்செந்தூர் முருகனை செவ்வரளி மாலை சாற்றி வணங்கி வரலாம். கீழப்பெரும்பள்ளம் சென்று கேது பகவானை வணங்கி வரலாம். வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் ராகு கேது பகவானை வணங்க நன்மைகள் நடைபெறும்.












Click it and Unblock the Notifications