ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: ஐப்பசிக்கு பின் 18 மாதங்கள் ராஜயோகம்.. வேலையில் யாருக்கு புரமோசன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாத இறுதியில் நிகழப்போகிறது. மேஷ ராசியில் இருக்கும் ராகு பகவான் மீன ராசிக்கும், துலாம் ராசியில் இருக்கும் கேது பகவான் கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். ராகுவும் கேதுவும் வரும் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை பயணம் செய்வார்கள். இந்த கிரகப்பெயர்ச்சியால் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ராகு கேது சாதகமாக இருந்தால் ஒருவருக்கு செல்வம் செல்வாக்கு தேடி வரும் ராகு கேது சாதகமாக இருப்பவர்களுக்குத்தான் லாட்டரியில் பணமும், திடீர் புதையலும் கிடைக்கும். ராகு செல்வம் செல்வாக்கை அள்ளிக்கொடுப்பார். கேது திடீர் ஞானத்தை கொடுத்து மோட்சத்திற்கு வழிகாட்டுவார்.
நவ கிரகங்களில் ராகுவும் கேது நிழல் கிரகங்கள். இந்த கிரகங்கள் எப்போதுமே நேருக்கு நேராக சந்தித்துக்கொள்ளும். சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி, சந்திரன், சுக்கிரன் ஆகிய ஏழு கிரகங்களும் முன்னோக்கி நகரும் போது ராகுவும் கேதுவும் பின்னோக்கி நகரும். இந்த ராகு கேது பெயர்ச்சிக்கு பிறகு குரு பகவானைப் போல ராகுவும் புதன் பகவானைப் போல கேதுவும் செயல்படுவார்கள்.

Rahu Ketu Peyarchi Palan 2023 : Rahu ketu peyarchi palangal Mesham to Kadagam

மேஷம்: பண வருமானம் அதிகரிக்கும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஓன்று சேருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் தேடி வரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் வரும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வீட்டில் சந்தோஷமும் மன மகிழ்ச்சியும் அதிகரிக்கும். கணவன் மனைவி உடல் நிலையில் சற்று கவனம் செலுத்தவும். சிலருக்கு வெளி நாடு செல்லும் யோகம் கிட்டும். வெளி நாட்டு தொடர்புகளால் உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்து அதில் லாபத்தையும் அடைவீர்கள்.

ரிஷபம்: லாப ஸ்தானதிற்கு வரப்போகும் ராகுபகவான் பண வரவை அதிகரிப்பார். மனதில் தைரியத்தையும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கணவன் மனைவிக்குள் பிரியம் அதிகரிக்கும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். ஒரு சிலருக்கு வெளி நாடு போகும் வாய்ப்பு கிடைக்கும். புது தொழில் தொடங்க வழி கிடைக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகளுடன் சுமூக போக்கு உண்டாகி சக ஊழியர்களிடம் இருந்து வந்த வேற்றுமை மாறும்.

Rahu Ketu Peyarchi Palan 2023 : Rahu ketu peyarchi palangal Mesham to Kadagam

மிதுனம்: பத்தாம் வீட்டிற்கு வரப்போகும் ராகு பதவியை தருவார். வேலை தேடுபவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். பண வரவை அதிகரிப்பார். ஒரு சிலருக்கு அரசியல் தொடர்புகள் ஏற்படும். இதன் பொருட்டு பிரபலமானவர்களின் நட்பு கிடைக்கும். தம்பதியருக்குள் இணக்கம் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கை தரமே மாற போகிறது. தொழில் செய்பவர்கள் தங்கள் இலக்கை அடைய கடுமையாக உழைக்க வேண்டி வரும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். வேலையில் சிலருக்கு இடமாற்றம் ஏற்படும்.

கடகம்: பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகும் ராகு பண தட்டுப்பாடுகளை நீக்குவார். பல வழிகளில் இருந்தும் பண மழை கொட்டும். கணவன் மனைவி உறவுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழப்பமான மனநிலை மாறி தெளிவான சிந்தனை உதயமாகும். உறவினர்கள் மத்தியில் பெரும் மதிப்பு அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். இழந்த செல்வங்களை திரும்ப பெறுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் உங்களை தேடி வரும். ஒரு சிலருக்கு வேலையில் பதவி உயர்வு கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+