ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: விரைய ராகு.. சத்ரு கேது.. மேஷ ராசி அன்பர்களே.. இதோ பரிகாரம்
சென்னை: ராகு கேது பெயர்ச்சி இன்னும் சில தினங்களில் நிகழப்போகிறது. மேஷ ராசியில் உள்ள ராகு மீன ராசிக்கும் துலாம் ராசியில் உள்ள கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. தலைமேல் அமர்ந்த ராகு விரைய ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் மேஷ ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்ன பாதிப்பு வரும் பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
ராகு கேது பெயர்ச்சி: ராகுவும் கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள்.நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் இருப்பது நல்ல பலனை தரும். ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

அள்ளித்தரப்போகும் ராகு: ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். மீனம் ராசிக்கு வரப்போகும் ராகு குரு பகவானைப் போலவும் கன்னி ராசிக்கு வரப்போகும் கேது புதன் பகவானைப் போலவும் செயல்படப்போகின்றனர்.
மேஷம்: ராசிக்கு 12மிடத்தில் ராகுவும் 6ம் இடத்திற்கு கேதுவும் மாறுகிறார்கள். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலரது பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் காதல் திருமணம் அவர்கள் விருப்பபடி செய்து வைக்கும் சூழ்நிலை வரும்.
வீட்டில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கடந்த கால கசப்பு உணர்வுகள் நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையை தரப்போகிறது.
வீடு மாற்றம் தரும் ராகு: ராகு கேது பெயர்ச்சியால் சிலருக்கு வீடு மாற்றம் ஊர் மாற்றம் உண்டாகும். ஜென்ம ராசியில் அமர்ந்து அறிவாளியை முட்டாளாக்கி உட்கார வைத்த ராகு 12 ம் இடத்திற்கு செல்லப்போகிறார். ராகுவின் பிடியில் இருந்து குரு பகவான் விடுபடுகிறார். வெளிநாட்டு பயணம்,தொழில் வாய்ப்பு அமையும். புதிய வேலை வாய்ப்பை கொடுப்பார். வெளியூர், வெளிநாடு வியாபாரத் தொடர்பு ஏற்படும். வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கும். கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு செல்ல செய்யும் முயற்சி வெற்றியை தரும்.
வெளிநாடு வேலை வாய்ப்பு: மாணவர்களுக்கு படிப்போடு வேலையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு நிம்மதியும் மன மகிழ்ச்சியும் தரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கப்போகிறது. மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரப்போகிறார் ராகு பகவான். நரக வேதனை நீங்கப்போகிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
பயணங்களால் நன்மை: ராகு பகவான் யோக காரகன் என்பதால் ஆசைகளை தூண்டி விடக்கூடியவர். ஜென்ம ராகு விலகுவதால் பயம், பதற்றம் நீங்கும். தெளிவான முடிவு எடுப்பீர்கள். கவலைகள், மன சஞ்சலங்கள் முடிவுக்கு வரப்போகிறது. 12ஆம் வீட்டில் பயணம் செய்யும் ராகு திடீர் பயணங்களைத் தரப்போகிறார். புது வீடு வாங்கும் யோகம் வரப்போகிறது. வெளிநாடு சுற்றுலா செல்வதற்காக யோசிப்பீர்கள். புது முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கப்போகிறது.
கேது பெயர்ச்சி: ஆன்மீகத்தை தரக்கூடிய கேது பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நிறைய நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். ஆன்மீக வழிபாடு எண்ணங்கள் அதிகரிக்கும். ஆன்ம பலம் கூடி வரும். வேலையில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புது வேலை கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். தொழிலை பெருக்கி லாபம் சம்பாதித்து சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம்.

ஆரோக்கியமான மனநிலை: நோய்கள் நீங்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. உங்களை தொந்தரவு செய்த எதிரிகள் பலவீனமடைவார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகளால் நடந்து வந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். இழுபறியான பணிகள் முழுமையடையும். கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் நீங்கும். உங்களுடைய செயல்களில் காரியங்களில் வெற்றி உண்டாகும்.
பரிகாரம் என்ன: ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும். மலைபோல வரும் துன்பம் எல்லாம் பனிபோல விலகி ஓடும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும் காலம் வந்து விட்டது. ராகு கேது பெயர்ச்சியால் சின்ன சின்ன பாதிப்புகள் வந்தாலும் கவலைகள் நீங்க ராகு கேது பெயர்ச்சியால் கால சர்ப்ப தோஷம் விலகுவது நன்மையை ஏற்படுத்த போகிறது. உங்கள் வாழ்க்கையில் விடியலை தரப்போகிறது. கருப்பு உளுந்து தானம் கொடுப்பது நல்லது. கொள்ளு தானம் கொடுப்பதனால் கேதுவினால் ஏற்படப்போகும் பாதிப்புகள் நீங்கும். சிவ பெருமான் கோவிலுக்கு சென்று திங்கட்கிழமையன்று நந்தி பகவானுக்கு பாலபிஷேகம் செய்யலாம். புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று பால் அபிஷேகம் செய்து வழிபடலாம்.
-
Simmam: ஜூன் 15க்கு பிறகு சிம்மத்தின் வாழ்க்கையில் பெரிய மாற்றம்!.. குரு பார்வையால் வரும் அதிர்ஷ்டம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications