Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன்: மீன ராசியில் ராகு.. கன்னி ராசியில் கேது.. 2024ல் கோடீஸ்வர யோகம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகு கேது தற்போது மூலை ராசிகளான மீன ராசியிலும் கன்னி ராசியிலும் பயணம் செய்கின்றனர். ராகுவின் பார்வை ரிஷபம், கன்னி மகரம் ராசிகளின் மீது விழுகிறது. கேதுவின் பார்வை விருச்சிகம், மீனம், கடகம் ராசிகளின் மீது விழுகிறது. ராகு கேதுவின் பயணம் பார்வையால் 2024 ஆம் ஆண்டு மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரும் காலம் வந்து விட்டது. விரைய ஸ்தானத்தில் உள்ள ராகு குரு பகவானைப் போல விபரீத ராஜயோகத்தை தரப்போகிறார். ஆறாம் இடத்தில் உள்ள கேதுவினால் நன்மைகள் அதிகம் நடைபெறப்போகிறது. கேதுவிற்கு குரு பகவானின் பார்வையும் கிடைப்பதால் உங்களுக்கு நீண்டநாளாக இருந்த உடல் உபாதைகள் நீங்கும். குரு பார்வையால் நிறைய பணவரவு வரும். அபரிமிதாக சம்பாதிக்கும் பணத்தினை முறையான வழியில் சேமிப்பது அவசியம். பண விஷயத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பணத்தை யோசித்து முதலீடு செய்யுங்கள்.

Rahu Ketu Peyarchi Palan: 2024 New year rasi palan for Mesham, Rishabam,Mithunam, Kadagam

கோடி கோடியாக பணம்: பத்திரமான இடத்தில் பணத்தை சேமிப்பது நன்மை தரும். அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஏமாற்றும் நிதி நிறுவனங்கள் சீட்டு கம்பெனிகளில் போட்டு விட்டு ஏமாந்து போய் விட வேண்டாம். உங்க உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். கேது பகவான் உங்களுடைய எதிரிகளை வெல்ல வைப்பார். பண வருமானத்தை குருவும் கேதுவும் அள்ளி கொடுப்பார்கள் கடன் பிரச்னைகள் குறையும். பொறுமையுடன் இருந்தால் நன்மைகள் அதிகம் நடைபெறும். ஆன்மீக யாத்திரைகள் புதிய அனுபவங்களை கொடுக்கும். இந்த ஆண்டு புதிய முதலீடுகளை தவிர்த்து விடுங்கள் செவ்வாய் கிழமைகளில் விநாயகரை வழிபட நன்மைகள் அதிகம் நடைபெறும்.

ரிஷபம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது கிரகங்கள் 2024ஆம் ஆண்டு வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறது. ராகு பகவான் லாப ஸ்தானமான 11வது வீட்டிலும் கேது பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாவது வீட்டிலும் அமர்ந்துள்ளதால் உங்கள் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். அசாத்தியமான வெற்றியைப் பெற்றுத் தருவார் ராகு. லாப ஸ்தானத்தில் உள்ள ராகுவின் மீது பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள கேதுவின் பார்வை விழுகிறது. நிறைய பண வருமானம் வரும். பணத்தை சேமிக்கும் அளவிற்கு செலவுகள் கட்டுப்படும்.

நினைத்தது நிறைவேறும்: மனதில் நினைத்ததை செயல்படுத்துவதில் வேகம் காட்டுவீர்கள். மனதில் நல்ல சிந்தனைகளையும், நல்லெண்ணங்களையும் கேது அருள்வார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள கேதுவினால் விவேகமும், ராகுவினால் வேகமும் கிடைக்கும். எல்லா விஷயங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். உங்களுடைய வருமானம் 2024ஆம் ஆண்டு அபரிமிதமாக உயரும். அதற்கான வேலைகளை ராகுவும் கேதுவும் செய்வார்கள். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதை கூடும் உயர்பதவிகள் தேடி வரும்.

மிதுனம்: 2024 ஆம் ஆண்டில் ராகு கேது கிரகங்களால் புதிய அனுபவங்களை பெறப்போகிறீர்கள். ராகு பகவான் பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திலும் கேது பகவான் நான்காம் வீடான சுக ஸ்தானத்திலும் அமர்ந்து உள்ளனர். இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்கு ராகு கேது அதே இடத்தில்தான் பயணம் செய்வார்கள். சொத்து, சுகம் சேருவதோடு உங்க வாழ்க்கையின் தரமும் உயரும். நீங்கள் எடுக்க போகும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். அம்மாவின் உடல் நலனில் அக்கறைக் காட்டுங்கள்.

சுகமான ஆண்டு: 2024ஆம் ஆண்டு மிதுன ராசிக்காரர்களுக்கு சுகமான ஆண்டாக அமையப்போகிறது. புதிய தொழில் முயற்சிகள் கை கொடுக்கும். குடும்பத்தோடு ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். புதிய வீடு நிலம் வாங்குவீர்கள் அதற்கான வேலையை ராகு செய்வார். உங்க வேலையில் முன்னேற்றமும், ஊதிய உயர்வும் கிடைக்கும். உங்களுடைய முன்கோபத்தை குறையுங்கள். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலில் விளக்கேற்றி வழிபடுங்கள். நன்மைகள் நிறைந்த ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது.

கடகம்: சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் வாழ்க்கையின் தரம் உயரும். ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திலும் கேது பகவான் தைரிய ஸ்தானத்திலும் 2024ஆம் ஆண்டு இறுதி வரைக்கும் பயணம் செய்யப்போகின்றனர். ராகு பகவான் மாணவர்களுக்கு வெளிநாட்டு பயணத்திற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவார். பதவி யோகம் தேடி வரும். ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். ஆலயங்களில் நடைபெறும் குடமுழுக்கு விழாவிற்கு தேவையான பணிகளை செய்வீர்கள்.

வீடு நிலம் வாங்கலாம்: முயற்சி ஸ்தானமான மூன்றாம் இடத்தில் பயணம் செய்யும் கேது பகவான் புதிய முயற்சிகளுக்கு வெற்றியைத் தேடித்தருவார். இளைய சகோதரர்களுடன் சிறு சலசலப்பை ஏற்படுத்துவார். கோபத்தை குறைத்து விட்டுக்கொடுத்து செல்லவும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதில் இருந்த தடைகள் விலகும். மறைமுக எதிரிகள் தொல்லைகள் நீங்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பிரச்னைகள் முடிவுக்கு வரப்போகிறது. புதிய சொத்துக்கள் வாங்க முயற்சி செய்பவர்களுக்கு நல்ல நேரம் கைகூடி வரப்போகிறது. அஷ்டம சனி தடைகளை ஏற்படுத்தினாலும் லாப ஸ்தானத்திற்கு வரப்போகும் குரு பகவான் தடைகளை விலக்குவார். புதன்கிழமை விநாயகரை வணங்க நன்மைகள் அதிகம் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+