குருவின் ஆசி நிறைந்த வியாழக்கிழமையில் அரசியல் நிலைப்பாட்டை ரஜினி அறிவித்த காரணம்
ரஜினிகாந்த் தனக்கு ராசியான எண்ணான 3ஆம் தேதியன்று தனது அரசியல் நிலைப்பாட்டினை அறிவித்துள்ளார்.
சென்னை: ரஜினிகாந்த் தனக்கு ராசியான நாளான வியாழக்கிழமை தினமான இன்று தனது அரசியல் நிலைப்பாட்டினை அறிவித்துள்ளார். நவம்பர் 30ஆம் தேதி ரசிகர்களுடன் ஆலோசனை நடத்திய ரஜினிகாந்த், டிசம்பர் 3ஆம் தேதியான இன்று கட்சி தொடங்கப்போவதாக கூறியுள்ளார். ரசிகர்களின் பல ஆண்டுகள் காத்திருப்புக்கு இப்போது பதில் கிடைத்திருக்கிறது.
இத்தனை ஆண்டுகள் இல்லாமல் ரஜினிகாந்த் இன்றைய தினத்தை தேர்வு செய்தது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. ரஜினிகாந்த் பிறந்த நாளை கொண்டாட ரசிகர்கள் தயாராக இருந்த நிலையில் இன்றைய தினம் கட்சி தொடங்கப்போவதாக கூறவே அவரது ரசிகர்கள் இன்றே பட்டாசு வெடித்து கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

2021 அதிசயம் நிகழும் என்று கூறிய ரஜினிகாந்த் தனது கட்சி அறிவிப்பை புத்தாண்டில் வெளியிடப்போகிறார். தமிழகத்தில் அரசியல் மாற்றம் வந்தாகணும். எல்லாத்தையும் மாத்துவோம். எல்லோருக்கும் தலையெழுத்து இருக்கும். அதே போல, தமிழ்நாட்டின் தலையெழுத்தை மாத்த வேண்டிய நேரம் வந்து விட்டது. எல்லோரும் சேர்ந்து மாத்துவோம். இப்ப இல்லேன்னா எப்பவும் இல்லே என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த்.
ரஜினிக்கும் 3ஆம் எண்ணிற்கும் 1ஆம் எண்ணிற்கும் மிக முக்கிய தொடர்பு உள்ளது. ரஜினிகாந்த் பிறந்த தேதி 12- 12-1950 கூட்டுத்தொகை 3. இது குருவின் எண். ரஜினிகாந்த் என்ற பெயரின் கூட்டுத்தொகை 28 மொத்தம் 1 வருகிறது.
ஆன்மீகத்தில் ஈடுபட்டிருந்த பலரும் 3 ஆம் எண்ணில் பிறந்தவர்கள்தான் அதனால்தான் அவர் சினிமாவில் பிரபலமாக இருந்தாலும் அவரது மனம் ஆன்மீகத்தை நாடியது. உடல் ரீதியாக மனரீதியாக பல போராட்டங்களை பெற்றிருக்கிறார் ரஜினிகாந்த்.
இன்றைய தினம் 3.12.2020 குருவின் ஆசி நிறைந்த எண் 3, கூட்டுத்தொகை 1 எண் கணிதப்படி இரண்டுமே ரஜினிக்கு உகந்த எண்கள்.
ரஜினிகாந்துக்கு தற்போது 69 வயதாகிறது. கூட்டுத்தொகை ஆறு. பிறந்த தேதி கூட்டுத்தொகை 3 ஆம் எண் இது குரு ஆதிக்கம் கொண்ட எண். 69 கூட்டுத்தொகை 6 அது சுக்கிரனின் எண் எனவேதான் ரஜினிகாந்த் இந்த ஆண்டு அரசியலுக்கு வராமல் தனது 70வது பிறந்த நாள் கொண்டாடிய பின்னர் அரசியல் கட்சி அறிவிப்பை வெளியிடப்போகிறார். 7ஆம் எண் கேதுவிற்கு உகந்தது. ஆன்மீக அரசியல் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றனர்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
மாணிக்கம் தாகூருக்கு தொடரும் சிக்கல்.. விஜய பிரபாகரன் தொடர்ந்த வழக்கை டிஸ்மிஸ் செய்தது ஐகோர்ட்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம்












Click it and Unblock the Notifications