• search

மன வலிமை தரும் மாசி மாத ராசி பலன்கள்

Posted By:
FOLLOW ONEINDIA TAMIL ON
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    சென்னை: சூரியன் கும்பராசியில் ஒருமாதம் இருப்பார். தமிழ் மாதங்களில் இது 11வது மாதமாகும். இது கும்பமாதம் என்றும் போற்றப்படுகிறது.

    இந்தியாவில் உள்ள அனைத்து புண்ணியத் தீர்த்தங்களிலும், சமுத்திரக் கரையிலும், புனித நதிகளிலும் மாசி மாதத்தில் அமிர்தம் நிறைந்திருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. இதன் காரணமாகவே இந்த மாதத்தில் நீர்நிலைகளில் புனித நீராடுவதை இந்துக்கள் பழக்கமாகக் கொண்டுள்ளனர்.
    மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத்திருநாளில் தான். மாசிமாத அமாவாசை நாளில் கும்ப ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்து சஞ்சரிப்பர்.

    மாசி மாத அமாவாசை நாளில் மயானக் கொல்லை என்ற திருவிழா நடைபெறுகிறது. அங்காள பரமேஸ்வரி அம்மன், மயானத்திற்குச் சென்று சூறையாடுவதாக ஐதீகம். கதி இல்லாமல் மயானத்தில் பேயாய் அலைவோருக்கு அம்பாள் மோட்சகதி தரும் வகையில் இந்த மயானக்கொல்லை விழா கொண்டாடப்படுகிறது. மாசி மாதம் மகாசிவராத்திரி கொண்டாடப்படுகிறது.

    அதே போல மாசி மகம் திருவிழாவும் கொண்டாடப்படுகிறது. மாசிமகம் நாளன்று விருத்தாசலம், கடலூர், பவானி கூடுதுறை, ராமேஸ்வரம் என்று பல புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடி, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதை பழக்கமாகக் கொண்டுள்ளனர் தமிழக மக்கள். அதே போல பெரும்பான்மையான ஆலயங்களில் மாசிமக நாளன்று தீர்த்தவாரி திருவிழாவும் நடைபெறுவதைக் காணலாம்.

    கிரகங்களின் ராசி மாற்றம்

    கிரகங்களின் ராசி மாற்றம்

    சூரியன் - ராசி மாற்றம் இல்லை
    செவ்வாய் - 23ம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார்
    புதன் - 02ம் தேதி கும்பம் ராசிக்கும் 19ம் தேதி மீனம் ராசிக்கும் மாறுகிறார்
    குரு - ராசி மாற்றம் இல்லை
    சுக்கிரன் - 18ம் தேதி மீனம் ராசிக்கு மாறுகிறார்
    சனி - ராசி மாற்றம் இல்லை
    ராகு - ராசி மாற்றம் இல்லை
    கேது - ராசி மாற்றம் இல்லை

    மேஷம் :

    மேஷம் :

    சூரியன் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் மின் சாதனங்களை கையாளும் பொழுது கவனம் தேவை 23ம் தேதிக்குப் பிறகு குல தெய்வத்தின் அருள் கிடைக்கும். புதன் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும் 19ம் தேதிக்குப் பின்னர் தாய் மாமனுக்காக செலவுகள் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும், வெளியூரில் இருந்து நல்ல தகவல் கிடைக்கும். சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பெண்களினால் நன்மை உண்டாகும் 18ம் தேதிக்குப் பின்னர் ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் நிலை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அப்பாவின் ஆலோசனையை கடைபிடிப்பது நல்லது, பரம்பரையாக செய்துவரும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ராகு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டை ரிப்பேர் செய்யும் நிலை ஏற்படும். கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும்.

    ரிஷபம்

    ரிஷபம்

    சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா செயல்களும் சிறப்படையும், வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும் 23ம் தேதிக்குப் பின்னர் சகோதரர்களால் மனக் கஷ்டம் உண்டாகும். புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும் 19ம் தேதிக்குப் பின்னர் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் எதிரிகளால் தொல்லை உண்டாகும், கடன் வாங்குவதை தவிர்க்கவும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் நிலை சிறப்படையும், 18ம் தேதிக்குப் பின்னர் நகைகள் வாங்கி மகிழ்வீர்கள். சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் மனதில் பாரம் உண்டாகும், உடலில் அசதி அதிகரிக்கும். ராகு மூன்றாமிடத்தில் இருக்கிறார் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் சச்சரவு உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குல தெய்வ கோயிலுக்கு செல்வீர்கள்.

    மிதுனம்

    மிதுனம்

    சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளினால் நன்மை உண்டாகும், உத்தியோகம் நிமித்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும் 23ம் தேதிக்குப் பின்னர் ரியல் எஸ்டேட் தொழில் சிறப்படையும். உங்கள் ராசிநாதன் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் 19ம் தேதிக்குப் பின்னர் சொந்தமாக செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் வங்கியில் சேமிப்பு அதிகரிக்கும், சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் மனைவியினால் நன்மை உண்டாகும் 18ம் தேதிக்குப் பின்னர் செய் தொழிலில் சிறப்பு உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபார வாடிக்கையாளர்களினால் நன்மை உண்டாகும், நண்பர்களுடன் நல்லுறவு அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில்களுக்கு பிரயாணம் செல்வீர்கள்.

     கடகம்

    கடகம்

    சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அதிகாரிகளினால் தொல்லை உண்டாகும், அப்பாவினால் மனக் கஷ்டம் உண்டாகும். செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப்பயணம் செல்வீர்கள் 23ம் தேதிக்குப் பின்னர் சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் ஷேர் மார்க்கெட் முதலீடுகள் நஷ்டத்தைக் கொடுக்கும் 19ம் தேதி முதல் உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவினால் நன்மை உண்டாகும் புதிய சொத்துகளை வாங்குவீர்கள். சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் தொல்லை உண்டாகும் 18ம் தேதிக்குப் பின்னர் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும். சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் கவனம் தேவை, தொழில் கூட்டாளிகளுடன் தகராறு ஏற்படும். ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும்.

    சிம்மம்

    சிம்மம்

    உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழிலின் காரணமாக அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும், அப்பாவினால் நன்மை உண்டாகும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்குவீர்கள், 23ம் தேதிக்குப் பின்னர் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும். புதன் ஆறாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும் 19ம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் நீண்ட நாள் கனவு நனவாகும், நண்பர்களால் நன்மை உண்டாகும். சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் நன்மை உண்டாகும் 18ம் தேதிக்குப் பின்னர் நகை நட்டுகளை கவனமாக பார்த்துக் கொள்ளவும். சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் உல்லாசப் பிரயாணம் செல்வீர்கள், பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். ராகு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மருத்துவமனை செலவுகள் அதிகரிக்கும்.

    கன்னி

    கன்னி

    சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அப்பாவுடன் சச்சரவைத் தவிர்க்கவும், உத்தியோகத்தில் கவனம் தேவை. செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் நல்லுறவு உண்டாகும் 23ம் தேதிக்குப் பின்னர் வீடு, நிலம் வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும் 19ம் தேதிக்குப் பின்னர் வியாபாரம் விருத்தியாகும். குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் செல்வச் செழிப்பு அதிகரிக்கும், பேச்சில் இனிமை அதிகரிக்கும். சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் விஷயத்தில் கவனம் தேவை, 18ம் தேதிக்குப் பின்னர் மனைவியால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் விவசாயம் விருத்தியடையும், பழைய வீட்டை வாங்குவீர்கள். ராகு பதினொன்றாம் இடத்தில் இருக்கிறார் எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும். கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் நுண்கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும்.

    துலாம்

    துலாம்

    சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், மாணவர்களுக்கு தேர்வுகளில் அதிக மதிப்பெண் கிடைக்கும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் கோபமான பேச்சினை தவிர்க்கவும் 23ம் தேதிக்குப் பின்னர் சகோதர்களுடன் உறவு நிலை சிறப்படையும். புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் மேன்மை நிலை உண்டாகும் 19ம் தேதிக்குப் பின்னர் வியாபாரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும், உடல் ஆரோக்கியம் சிறப்படையும். உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள்18ம் தேதிக்குப் பின்னர் மனைவியுடன் கருத்து வேறுபாடு உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் தொழிலாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும், தொழில் சம்பந்தமான வெளியூர் பயணம் நன்மையைத் தரும். ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் சிறப்படையும். கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

    விருச்சிகம்

    விருச்சிகம்

    சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு மனை கிடைக்கும், புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உடலில் உஷ்ணம் அதிகரிக்கும் 23ம் தேதிக்குப் பின்னர் குடும்பத்தில் குழப்பம் உண்டாகும். புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும் 19ம் தேதிக்குப் பின்னர் நுண் கலைகளில் ஆர்வம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீண் செலவுகள் உண்டாகும், குழந்தைகளுக்கு நோயின் தாக்கம் ஏற்படும். சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் வீட்டிற்க்கு ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள் 18ம் தேதிக்குப் பின்னர் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். சனி இரண்டாமிடத்தில் இருக்கிறார் யாரிடமும் பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம், வீண் விதண்டவாதத்தை தவிர்க்கவும். ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தந்தை வர்க்கத்தாருடன் சச்சரவு உண்டாகும். கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் ம்னதில் குழப்பம் அதிகரிக்கும்.

    தனுசு

    தனுசு

    சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அலுவலகத்திலிருந்து நல்ல செய்தி கிடைக்கும், அரசாங்க ஊழியர்களுக்கு இடமாற்றம் உண்டாகும். செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் போன்ற வகைகளில் முதலீடுகள் அதிகரிக்கும் 23ம் தேதிக்குப் பின்னர் பூர்வீக சொத்துகள் கிடைக்கும். புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தகவல் தொடர்பு சிறப்படையும் 19ம் தேதிக்குப் பின்னர் புதிய வீடு கட்டும் யோகம் உண்டாகும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் தொழில் லாபம் அதிகரிக்கும், எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும். சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் மனைவியுடன் வெளியூர் செல்வீர்கள் 18ம் தேதிக்குப் பின்னர் புதிய வாகனம் வாங்குவீர்கள். சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும் உடலில் அசதி அதிகரிக்கும். ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் அலைச்சல் அதிகரிக்கும். கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு உயரும்.

    மகரம்

    மகரம்

    சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சம்பளம் அதிகரிக்கும், பேச்சில் அதிகாரத் தொனி உண்டாகும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வீட்டு வாடகை வருமானம் அதிகரிக்கும், 23ம் தேதிக்குப் பின்னர் வீட்டை பராமரிக்கும் செலவு உண்டாகும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வாக்கு வன்மை அதிகரிக்கும் 19ம் தேதிக்குப் பிறகு நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும். குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் செயல்கள் யாவும் சிறப்படையும், முயற்சிகள் எல்லாம் வெற்றியடையும். சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வங்கி சேமிப்பு அதிகரிக்கும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்காக முதலீடுகள் அதிகரிக்கும், தொழில் முறை வெளியூர் பயணம் வெற்றியடையும். ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் சிறப்படையும். கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் குழப்பம் உண்டாகும்.

    கும்பம்

    கும்பம்

    சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும், அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். செவ்வாய் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் விருத்தியடையும் 23ம் தேதிக்குப் பின்னர் லாபம் அதிகரிக்கும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் சமயோசிதமாக செயல்பட்டு வெற்றியடைவீர்கள் 19ம் தேதிக்குப் பின்னர் அடிக்கடி வெளியூர் பிரயாணம் உண்டாகும். குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அதிர்ஷ்டம் அதிகரிக்கும், குல தெய்வ அருள் கிடைக்கும். சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் 18ம் தேதிக்குப் பின்னர் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ஆசைகள் நிறைவேறும், மனதில் நினைப்பவை எல்லாம் நடக்கும். ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும். கேது உங்கள் ஜென்ம ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில் திருப்பணிகளுக்காக செலவுகள் அதிகரிக்கும்.

    மீனம்

    மீனம்

    சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்கத்திற்க்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்திவிடுவது நல்லது, அப்பாவுக்காக செலவுகள் அதிகரிக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுரார்ஜித சொத்துக்கள் கிடைக்கும் 23ம் தேதிக்குப் பின்னர் வீடு மனை வாங்கி விற்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் படிப்புக்காக செலவுகள் அதிகரிக்கும் அதிகரிக்கும் 19ம் தேதிக்குப் பின்னர் புத்திக் கூர்மை அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளுக்காக செலவுகள் அதிகரிக்கும், பண வரவும் அதிகரிக்கும். சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்கும் 18ம் தேதிக்குப் பின்னர் பெண்களால் நன்மை உண்டாகும். சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும், காரியங்கள் எல்லாம் சிறப்படையும். ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள். கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வருமானம் அதிகரிக்கும்.

    வரன் தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

    English summary
    Rasi Palangal for the Tamil Month of Masi from 13-02-2018 to14-03-2018.

    நாள் முழுவதும் oneindia
    செய்திகளை உடனுக்குடன் பெற

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more