For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குடும்ப ஒற்றுமை தரும் கார்த்திகை மாத ராசி பலன்கள்

கார்த்திகை மாதம் முதல் நாள் அன்று சூரியன் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு இடம் மாறுகிறார். பல்வேறு பெருமைகள் நிறைந்த இந்த கார்த்திகை மாதத்தின் ராசி பலன்களை அறிந்து கொள்வோம்.

Google Oneindia Tamil News

-ஜோதிடர் பேராசிரியர் கே.ஆர். சுப்ரமணியன்

ஐப்பசி மாதத்தில் துலாம் ராசியில் தனது பலத்தினை முழுமையாக இழந்து நீசம் என்ற நிலையில் சஞ்சரித்து வந்த சூரியன், தான் முழுமையாக வலிமை பெற தனது பயணத்தைத் துவக்கும் காலமே கார்த்திகை மாதம்.

ஜோதிட சாஸ்திர ரீதியாக ஆராய்ந்தால், கார்த்திகை நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் காலத்தில் பௌர்ணமி தோன்றும் மாதத்தை கார்த்திகை மாதம் என்றழைக்கிறோம். ஜோதிடத்தில் சந்திரனை தாயாகவும், சூரியனைத் தந்தையாகவும் உருவகப்படுத்துவார்கள்.

சந்திரன் ஆகிய தாய், சூரியனின் நட்சத்திரம் ஆகிய கிருத்திகையில், உச்ச பலத்தோடு முழுநிலவு ஆக ஒளி வீசும் காலம் இந்த கார்த்திகை மாதம். அதாவது, அம்மை-அப்பனின் இணைவாக, அர்த்தநாரீஸ்வர வடிவாக சிவபெருமான் அருள்புரியும் காலம் இது என்பதால் உலகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் கார்த்திகை மாதம் மிக விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது.

பல்வேறு காரணங்களால் கணவரை விட்டுப் பிரிந்து வாழும் பெண்கள் கார்த்திகை மாதத்தில் சோமவார தினத்தில் ( திங்கட்கிழமை) அருகில் உள்ள சிவாலயத்தில் விளக்கேற்றி வழிபட்டு வர விரைவில் கருத்து வேறுபாடு நீங்கி கணவரோடு இணைந்து வாழ்வர்.

நம் உடம்பில் உள்ள நாடி, நரம்புகள் எல்லாம் கார்த்திகை மாதத்தில்தான் சீராக இயங்கும் என்று சொல்வார்கள். இந்த காலத்தில் தியானத்தில் ஈடுபடுவோர்க்கு நிச்சயம் ஞானம் சித்தியாகும் என்பது உண்மை.

கிரகங்களின் ராசி மாற்றம்

கிரகங்களின் ராசி மாற்றம்

சூரியன் - ராசி மாற்றம் இல்லை
செவ்வாய் - 26ம் தேதி கும்பம் ராசிக்கு மாறுகிறார்
புதன் - 13ம் தேதி தனுசு ராசிக்கு மாறுகிறார்
குரு - ராசி மாற்றம் இல்லை
சுக்கிரன் - 17ம் தேதி மகரம் ராசிக்கு மாறுகிறார்
சனி - ராசி மாற்றம் இல்லை
ராகு - ராசி மாற்றம் இல்லை
கேது - ராசி மாற்றம் இல்லை

மேஷம்

மேஷம்

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் கடுமையான வேலைப்பளு ஏற்படும் மனதில் பாரம் அதிகரிக்கலாம் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்த தொழில் மேன்மை பெறும் உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் புத்தியில் தடுமாற்றம் உண்டாகும் புனித யாத்திரை மேற்கொள்வீர்கள் குரு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் குழந்தைகளால் மனக் கஷ்டமும் பொருளாதாரத்தில் தட்டுபாடும் உண்டாகலாம் சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் வாழ்க்கைத் துணையால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் உடலில் அசதி அதிகரிக்கும் அலுவலக நண்பர்களுடன் கவனமாக பழகவும் ராகு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் உல்லாசப் பயணம் செல்வீர்கள் கேது உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் மனதில் நினைக்கும் எல்லா எண்ணங்களும் நிறைவேறும்.

ரிஷபம்

ரிஷபம்

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவு உண்டாகும் அரசாங்கம் சம்பந்தமாக வெளியூர் செல்லவேண்டிய நிலை உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பிதுரார்ஜித வகையில் நிலம் வீடு மனை போன்ற வகையில் சொத்துகள் கிடைக்கும் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியாகும் தொழில் கூட்டாளிகளால் மன சங்கடங்கள் உருவாகலாம் குரு உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் எட்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் மனக்கஷ்டம் உண்டாகும் ஆடம்பரப் பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் அபிவிருத்தியாகும் நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும் ராகு நான்காமிடத்தில் இருக்கிறார் அம்மாவின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் முயற்சிகள் வெற்றியடையும்.

மிதுனம்

மிதுனம்

சூரியன் ஆறாமிடத்தில் இருக்கிறார் அரசு தொடர்பான முயற்சிகள் வெற்றியடையும் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களுடன் சச்சரவை தவிர்க்கவும் ரியல் எஸ்டேட் தொழில் விருத்தியடையும் உங்கள் ராசிநாதன் புதன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கல்வியில் மந்த நிலை உண்டாகும் கமிஷன் தொழில் சிறப்படையும் குரு உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகன யோகம் உண்டாகும் சுகபோகப் பொருட்கள் சேர்க்கை உண்டாகும் சுக்கிரன் ஏழாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் விலையுயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை சனி உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உழைப்பினால் முன்னேற்றம் உண்டாகும் அப்பாவுடன் பிரச்சினை உண்டாகும் ராகு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும்

கடகம்

கடகம்

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் போட்டிகளில் வெற்றி கிடைக்கும் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்திலிருந்து பண வரவு கிடைக்கும் புதன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் ஷேர்மார்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும் தாய் மாமனுடன் கருத்து வேறுபாடு உண்டாகலாம் குரு உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்துடன் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள் அண்டை அயலாரால் நன்மை உண்டாகும் சுக்கிரன் ஆறாமிடத்தில் இருக்கிறார் சகோதரிகளுடன் பிரச்சினையை தவிர்க்கவும் கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் உல்லாசப் பயணம் செல்வீர்கள் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை

சிம்மம்

சிம்மம்

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் வாகன யோகம் உண்டாகும் செவ்வாய் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் கூர்மையான பொருட்களை கையாளும் பொழுது கவனமாக இருக்கவும் நிலம் வீடு மனை சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும் புதன் நான்காமிடத்தில் இருக்கிறார் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் தகவல் தொடர்பு சிறப்படையும் குரு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்ப வருமானம் அதிகரிக்கும் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும் சுக்கிரன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும் பெண்களால் தொல்லை உண்டாகும் சனி உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் வாகனங்களை பராமரிப்பு செய்யும் நிலை உண்டாகும் விவசாயம் விருத்தியடையும் ராகு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் நீண்ட தூரம் பயணம் செல்லும் நிலை உண்டாகும்.

கன்னி

கன்னி

சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு ஊழியர்களுக்கு பணியிடமாற்றம் உண்டாகும் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த சுப மங்கல தகவல் வந்து சேரும் செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் உதவி கிடைக்கும் வீடு மனை விற்பனை தொழிலில் இருப்பவர்களுக்கு நன்றாக கமிஷன் கிடைக்கும் உங்கள் ராசிநாதன் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் யோகம் உண்டாகும் கல்வியில் மேன்மை நிலை உருவாகும் குரு உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும் சுக்கிரன் நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் தேவையற்ற வீண் அலைச்சலை தவிர்க்கவும் மனதில் குழப்பம் உண்டாகும் ராகு பன்னிரெண்டாம் இடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் கேது உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்

துலாம்

துலாம்

சூரியன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் சம்பள உயர்வு உண்டாகும் மூத்த சகோதரர்களால் நன்மை உண்டாகும். செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் தொழிலுக்கு புதிதாக இயந்திரங்கள் வாங்குவீர்கள் உடலில் ரத்த அழுத்தம் சீராகும் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் பேச்சில் நகைச்சுவை அதிகரிக்கும் வியாபாரம் விருத்தியாகும் குரு உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் செலவுகள் அதிகரிக்கும் கோயில்களுக்கு தான தர்மங்கள் செய்வீர்கள் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் வீடு மாறும் நிலை உண்டாகும் புதிதாக வாகனம் வாங்குவீர்கள் சனி உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் எண்ணெய் வியாபாரம் சிறப்படையும் தொழிலுக்காக புதிதாக கிட்டங்கி கட்டுவீர்கள் ராகு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா முயற்சிகளும் வெற்றியடையும் கேது உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் இருக்கிறார் மனதில் நிம்மதி அதிகரிக்கும்

விருச்சிகம்

விருச்சிகம்

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் உத்தியோகத்தில் தலைமைப் பதவி கிடைக்கும் அரசாங்க அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும் உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி பயணம் செய்யும் நிலை உண்டாகும் மனதில் தைரியம் அதிகரிக்கும் புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும் பேச்சில் நகைச்சுவை தன்மை அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் பண வரவு அதிகரிக்கும் வயதில் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும் சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் சகோதரிகளின் வகையில் நன்மை உண்டாகும் சனி உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும் தகவல் தொடர்பு சீரடையும் ராகு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகம் சிறப்படையும் கேது உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு வாங்குவீர்கள்.

தனுசு

தனுசு

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தொழிலில் இடமாற்றம் உண்டாகும் பிரயாணங்களின் காரணமாக செலவுகள் அதிகரிக்கும் செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும் குடும்பத்தில் சச்சரவைத் தவிர்க்கவும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும் தரகு கமிஷன் வியாபாரத்தில் லாபம் கிடைக்கும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தத் தொழில் சிறப்படையும் எடுத்த காரியமெல்லாம் வெற்றியடையும் சுக்கிரன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் பொன்னகைகளின் சேர்க்கை அதிகரிக்கும் சனி உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் புதிய தொழிலில் முதலீடுகள் செய்வீர்கள் தொழிலை வெளி மாநிலங்களுக்கும் விரிவுபடுத்துவீர்கள் ராகு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் கேது உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் இருக்கிறார் உடன் பிறப்புகளின் உதவி கிடைக்கும்

மகரம்

மகரம்

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் செய்யும் தொழிலில் கவனம் தேவை அப்பாவுடன் மனஸ்தாபம் உண்டாகும் செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் காவல் துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் மனதில் உண்டாகும் கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ளவும் புதன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வியில் மேன்மை நிலை உண்டாகும் சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள் குரு உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது வாரிசுகளால் சந்தோஷம் அதிகரிக்கும் சுக்கிரன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் பெண்களால் செலவு அதிகரிக்கும் கணவன் மனைவி அன்னியோனியம் அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் எல்லா காரியங்களும் வெற்றியடையும் மனதில் அமைதி அதிகரிக்கும் ராகு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் போக்குவரத்தில் கவனம் தேவை கேது உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் குழப்பத்தை தவிர்க்கவும்.

கும்பம்

கும்பம்

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் வகையில் அரசு அதிகாரிகளின் உதவி கிடைக்கும் அரசாங்க வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் வகையில் முதலீடுகள் அதிகரிக்கும் அடிக்கடி வெளியூருக்கு செல்வீர்கள் புதன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் தொழில் சிறப்படையும் ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் குரு உங்கள் ராசிக்கு எட்டாமிடத்தில் இருக்கிறார் திடீர் பண வரவு உண்டாகும் குடும்ப மொத்த வருமானம் அதிகரிக்கும் சுக்கிரன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணை மூலம் பண வரவு கிடைக்கும் ஆடம்பர பொருட்களின் சேர்க்கை அதிகரிக்கும் உங்கள் ராசிநாதன் சனி உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் எண்ணியவை யாவும் எளிதில் நிறைவேறும் தொழில் நிலை மேன்மையடையும் ராகு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் வாடிக்கையாளர்களுடன் நல்லுறவு உண்டாகும் கேது உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் மனதில் நிம்மதி உண்டாகும்.

மீனம்

மீனம்

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் தந்தை வழி உறவுகளுடன் நெருக்கம் அதிகரிக்கும் சிவாலய வழிபாடு நன்மையைத் தரும் செவ்வாய் உங்கள் ராசிக்கு பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் புதிதாக வீடு கட்டும் யோகம் உண்டாகும் செலவுகள் அதிகரிக்கும் புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில்களுக்கு புனித யாத்திரை செல்வீர்கள் ஷேர் மார்கெட் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு தொழில் நிலை சிறப்படையும் உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு ஏழாமிடத்தில் இருக்கிறார் உறவினர்களின் உதவி கிடைக்கும் குழந்தைகளால் சந்தோஷம் அதிகரிக்கும் சுக்கிரன் பத்தாமிடத்தில் இருக்கிறார் பெண்கள் சம்பந்தப்பட்ட தொழில் சிறப்படையும் வாழ்க்கைத் துணையின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் சனி உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் வெளிநாட்டிற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும் பூர்வீக சொத்தான பழைய வீடு கிடைக்கும் ராகு உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் வாழ்க்கைத் துணையுடன் சச்சரவைத் தவிர்க்கவும் கேது உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் திருக்கோயில்களின் வழிபாட்டு வகையில் செலவுகல் செய்யும் நிலை உண்டாகும்.

English summary
Karthigai Month Rasi Palankal from 16 November 2016 to 15 December 2016.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X