வெனிசுலா கப்பலை பிடிக்க.. பெரும் படையை அனுப்பிய டிரம்ப்.. பாய்ந்து தடுத்த ரஷ்யா! உள்ளே என்ன இருக்கு?
நியூயார்க்: அட்லாண்டிக் கடலில் அமெரிக்கப் படைகளால் பின்தொடரப்படும் பெல்லா 1 என்ற ஒரு எண்ணெய் கப்பலுக்கு ரஷ்யா கடற்படைக் கப்பல்களை அனுப்பி பாதுகாப்பு கொடுத்து வருகிறது. பெல்லா 1 கப்பலை அமெரிக்கா பிடிக்காத வண்ணம், அல்லது தாக்காத வண்ணம் ரஷ்ய படைகள் பாதுகாப்பு கொடுத்து வருகிறது. பிபிசி வெரிஃபை மற்றும் சிபிஎஸ் நியூஸ் இதை உறுதிப்படுத்தியுள்ளன.
தற்போது இக்கப்பலில் எண்ணெய் இல்லை. முன்னர் வெனிசுலா கச்சா எண்ணெயை இது ஏற்றி இருந்தது. இக்கப்பல் செவ்வாய்க்கிழமை ஸ்காட்லாந்துக்கும் ஐஸ்லாந்துக்கும் இடையில் பயணிப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
கடந்த மாதம், டிரம்ப் வெனிசுலாவில் இருந்து வெளியே செல்லும் எண்ணெய் கப்பல்களைத் தடுத்து நிறுத்த உத்தரவிட்டார். அவை அமெரிக்கத் தடைகளை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட நிலையில், வெனிசுலா அரசு இதை திருட்டு என்றது.
வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் கைதுக்கு முன்பு, வெனிசுலா கப்பல்கள் மூலம் அமெரிக்காவிற்கு போதைப்பொருள் கடத்தப்படுவதாக டிரம்ப் பலமுறை குற்றம் சாட்டியிருந்தார்.

வெனிசுலா கப்பல்கள்
கடந்த மாதம், கரீபியன் பகுதியில் "பெல்லா 1" கப்பல் இருந்தபோது, அமெரிக்க கடலோர காவல்படை இக்கப்பலை ஆய்வு செய்ய முயன்றது. தடைகளை மீறியதற்கும், ஈரானிய எண்ணெயைக் கொண்டுசென்றதற்கும் அதைப் பறிமுதல் செய்ய அமெரிக்கா சட்ட ஆணை வைத்திருந்தது.
அதன் பிறகு, கப்பல் தனது திசையை மாற்றி, "மறினேரா" எனப் பெயர் மாற்றி உலவி வந்தது. மேலும் இது வெனிசுலா கப்பல் இல்லை என்ற நிலை மாறி, ரஷ்யக் கப்பலாக மறு பதிவு செய்யப்பட்டது. இக்கப்பல் ஐரோப்பாவை நெருங்க நெருங்க.. அதை தடுக்கும் விதமாக சுமார் 10 அமெரிக்க இராணுவ போக்குவரத்து விமானங்கள், ஹெலிகாப்டர்களும் அப்பகுதிக்கு வந்தன.
ரஷ்யா கண்காணிப்பு
ரஷ்யா இந்த நிலைமையை கவலையுடன் கண்காணிப்பதாகக் கூறியது. அமெரிக்கா கப்பலை மூழ்கடிப்பதைக் காட்டிலும் பறிமுதல் செய்யவே விரும்புவதாக சிபிஎஸ் நியூஸ் அதிகாரிகள் கூறினர். செவ்வாய்க்கிழமை, அமெரிக்க ராணுவத்தின் தெற்குப் படைப்பிரிவு, தடை செய்யப்பட்ட கப்பல்களுக்கு எதிராகச் செயல்படத் தயாராக இருப்பதாக அறிவித்தது. சந்தேகத்திற்குரிய கப்பல்களைக் கண்காணிப்பதாகவும் அது குறிப்பிட்டது.
அந்த கப்பல் வட அட்லாண்டிக் கடலில் நிலத்திலிருந்து வெகு தொலைவில் இருந்ததால், மோசமான வானிலை காரணமாக கப்பலில் ஏறுவது கடினமானது. பிரிட்டனில் இருந்து ராணுவ நடவடிக்கை திட்டமிட்டால், அமெரிக்கா பிரிட்டனுக்கு தெரிவிப்பது வழக்கம். ஆனால், பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் பிற நாட்டு ராணுவ நடவடிக்கைகள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்தது.
கப்பலின் பெயர்/கொடியை மாற்றுவது பாதுகாக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர் ஆனால் அமெரிக்க நடவடிக்கை கப்பலின் அடையாளம், உரிமை, தணிக்கை வரலாற்றைப் பொறுத்ததே தவிர, அதன் கொடியைப் பொறுத்ததல்ல என்று அமெரிக்க அரசு தரப்பு கூறுகிறது.
ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், இந்தக் கப்பல் ரஷ்யக் கொடியின் கீழ் சர்வதேச கடல் பகுதியில் சட்டப்பூர்வமாகப் பயணிப்பதாகத் தெரிவித்தது. அமைதியான கப்பலுக்கு அமெரிக்காவும் நேட்டோவும் நியாயமற்ற கவனம் செலுத்துவதாக குற்றம் சாட்டியது. இதையடுத்தே அட்லாண்டிக் கடலில் அமெரிக்கப் படைகளால் பின்தொடரப்படும் பெல்லா 1 என்ற அந்த எண்ணெய் கப்பலுக்கு ரஷ்யா கடற்படைக் கப்பல்களை அனுப்பி பாதுகாப்பு கொடுத்து வருகிறது.
நிக்கோலஸ் மடூரோவை அமெரிக்கா காரகாஸில் கைது செய்து உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சில நாட்களுக்குப் பிறகு இம்மை ஏற்பட்டது. அப்போது நகரில் வான்வழித் தாக்குதல்களை நடத்தி, மதுரோவையும் மனைவியையும் ஆயுதம்/போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications