சார்வரி தமிழ் புத்தாண்டு 2020 - 21: புதிய வைரஸ் நோய்கள் தாக்கும் என எச்சரிக்கை
விகாரி தமிழ் புத்தாண்டின் துவக்கத்தில் தண்ணீர் பஞ்சம் தலை விரித்தாடியது. வருண பகவானின் கருணையினால் பருவமழை பெய்து அணைகள் நிரம்பின. அதே போல பிறக்க இருக்கும் சார்வரி புத்தாண்டில் எப்படி இருக்கும் புதிய
மதுரை: சார்வரி தமிழ் புத்தாண்டு வரும் ஏப்ரல் 13 ஆம் தேதி 2020, பங்குனி 31ஆம் நாள் திங்கட்கிழமை இரவு 8.23 மணிக்கு துலா லக்கினம் தனுசு ராசியில் பிறக்கிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஆண்டு பிறக்கும் போது மேஷத்தில் சூரியன், ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் ராகு, மீனம் ராசியில் புதன், மகரத்தில் செவ்வாய்,குரு, சனி, தனுசு ராசியில் சந்திரன் கேது என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.
இந்த சார்வரி ஆண்டுக்கு தமிழில் வீறியெழல் என்று பெயர். இது 60 ஆண்டுகளில் 34வது வருடம் இந்த புத்தாண்டு எப்படி இருக்கும் என்று இடைக்காடர் சித்தர் தனது நூலில் வெண்பாவாக சொல்லியிருக்கிறார்.
"சாருவரி ஆண்டதனிற் சாதிபதினெட்டுமே
தீரமறு நோயால் திரிவார்கள் - மாரியில்லை
பூமி விளைவில்லாமற் புத்திரரும் மற்றவரும்
ஏமமின்றி சாவார் இயம்பு"

மழை பாதிப்பு
சார்வரி ஆண்டில் பதினெட்டு வகைச் சாதி மக்களும் வீரமிழந்து தீரம் அற்றுப்போய் நோயால் வெதும்பித் திரிவார்கள். மழையில்லை, நன்செய்ப் பயிர்கள் விளைச்சல் அறவே இருக்காது. பூமியில் நவதானியங்களும் விளைச்சல் பாதிக்கும். தானிய விளைச்சல் இன்றி மக்கள் பட்டினியால் மடிவர். மண்ணின் மைந்தர்களுக்கு பாதுகாப்பு இருக்காது என வெண்பா சொல்கிறது.

புதிய சட்டங்கள்
நவகிரகங்களின் சஞ்சாரத்தின் படி நல்ல பலன்கள் சொல்லப்பட்டுள்ளது. இந்த சார்வரி புத்தாண்டில் மழை குறைவாக இருக்கும் என்றாலும் சித்திரை வருடப்பிறப்பு புதன்கிழமை வருவதால் நல்ல மழை பெய்யும். நாட்டில் மத்திய மாநில அரசுகள் புதிய திட்டங்களை தீட்டுவார்கள். புதிய வைரஸ் நோயினால் மக்களுடம் கால்நடைகளும் பாதிக்கப்படுவார்கள். புதிய சட்டங்களினால் தங்கும் விடுதிகளில் தங்குபவர்களுக்கு கெடுபிடிகள் அதிகமாகும் என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

தொழில் லாபம்
ஆண்டின் முற்பகுதியில் உஷ்ணமும் பிற்பகுதியில் அதிக மழையும் பெய்யும். வெளிநாடு வர்த்தகம் அதிகமாகும். வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்வோர் எண்ணிக்கை அதிகமாகும். தொழில்துறை வளர்ச்சியடையும். ஏற்றுமதி தொழில் லாபம் அடையும்.

நோய்கள் மருந்துகள்
தடைபட்ட திருமணங்கள் நடைபெறும். காதல் திருமணங்கள் அதிகமாகும். பெண்களுக்கு தைராய்டு நோய்கள் அதிகமாகும் என பஞ்சாங்கம் கணித்துள்ளது. பல புதிய நோய்களுக்கு மருந்துகள் கண்டுபிடிப்பார்கள். பல மருந்துகள் மக்களுக்கு விலை குறைவாகவும், இலவசமாகவும் கிடைக்கும். போலி சாமியார்கள் அகப்படுவார்கள் என கணித்துள்ளது.

சார்வரியில் நோய்
விகாரி தமிழ் புத்தாண்டில் பஞ்சாங்கம் கணித்தது பல பலித்தது. நோய்கள் தாக்கியது. கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கி வருகிறது. அதே போல பிறக்கப் போகும் தமிழ் புத்தாண்டான சார்வரி ஆண்டிலும் புதிய நோய் தாக்கும் என பஞ்சாங்கம் எச்சரித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications