Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காதல் கல்யாணத்தில் நீங்க எப்படிப்பட்ட ஆளு... உங்க முக லட்சணம் சொல்லுமே சேதி -

மனிதர்களோட சாமுத்ரிகா லட்சணத்தை வைத்து அவர்களின் குணாதியங்களை கணிக்க முடியும். ஒருவரின் புருவ அமைப்பே அவரது நடத்தையை சொல்லிவிடுமாம். முக அமைப்பின் அடிப்படையிலும், முடி அமைப்பை வைத்தும் கண்கள், புரு

Subscribe to Oneindia Tamil

மதுரை: சாமுத்ரிகா லட்சணம் ஜோதிடத்தில் ஒரு பகுதிதான். ரதி மாதிரி பெண் வேண்டும் என்று விரும்பும் ஆண்கள் எல்லாம் மன்மதன் போல இருப்பதில்லை. இது பெண்களின் காலம். ஆணின் படிப்பு, வசதி, வேலை வாய்ப்பு எதிர்காலம் பற்றி தெளிவாக பேசிவிட்டுத்தான் இப்போது பெண்கள் திருமணத்திற்கு சம்மதிக்கின்றனர். ஆண்களின் சாமுத்திரிகா லட்சணத்தை பார்த்தே அவர் எப்படிப்பட்டவர் என்று கணித்து விடலாம். உங்க ஆளுக்கு இந்த மாதிரி அங்க லட்சணம் இருக்கா பாருங்க கண்ணை மூடிட்டு கல்யாணம் பண்ணலாம்.

உச்சி மூதல் உள்ளங்கால் வரைக்கும் ஒருவருடைய லட்சணம் எப்படி இருக்கிறது என்று பார்த்து நம்முடைய வாழ்க்கை துணையை முடிவு பண்ணலாம். ஆண்களின் முக லட்சணம் பார்த்து இவர் நமக்கு சரிப்பட்டு வருவாரா மாட்டாரா என்று பெண்கள் முடிவு செய்கின்றனர்.

ஆண்களின் தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம் உண்டு. அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் ஞானமும் செல்வமும் உண்டு. நெற்றியில் பல ரேகைகள் இருப்பதும் நெற்றியில் வியர்வை வருவதும் அதிர்ஷ்டம்.

புகழ் கொடுக்கும் கண்கள்

புகழ் கொடுக்கும் கண்கள்

ஆண்களின் கண்கள் சிவந்து, விசாலமாக யானைக்கண் போல் இருந்தால் உலகை ஆள்வான். மூக்கு உயரமாய், நீண்டு, கூரிய முனையோடு சிறிய நாசித் துவாரங்கள் கொண்ட மூக்கு உடையவர்கள் பணம், பதவி, புகழ் உடையவர்களாக இருப்பர். அழகான,சிறிய வாய் உடையவர்கள் புத்தி, சக்தி, கருணை உடையவர்களாக, அறிஞர்களாக,பெரும்பதவியில் இருப்பவர்களாக இருப்பார்கள்.

சொன்ன சொல் பலிக்கும்

சொன்ன சொல் பலிக்கும்

உதடு சிவந்திருப்பின் அந்தஸ்து, அதிகாரம் அதிர்ஷ்டம் நிலைத்திருக்கும். மெல்லிய ஒடுக்கமான பற்களை உடையவர்கள் கல்விமான் ஆவர். கூரிய பற்கள் இருப்பின் கோபம் அதிகம் வரும். உனக்கு நாக்கு ரொம்ப நீளம் என்பார்கள். ஆண்களுக்கு நீளமான நாக்கு இருந்தால் சிறந்த பேச்சாளர்களாக இருப்பார்கள். நாக்கு நுனியில் அழியாத கருப்புப்புள்ளிகள் இருப்பின் சொன்ன சொல் பலிக்கும். நாக்கு சிவந்திருப்பின் அதிர்ஷடம்.

செல்வம் அதிகம்

செல்வம் அதிகம்

ஆண்களின் கழுத்து பருத்தும், மத்திம உயரம் உடையதாகவும் இருப்பது அதிர்ஷ்டம். தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு. பானை போன்ற உருண்டையான வயிறு இருந்தால் செல்வம் இருக்கும். ஒட்டிய வயிற்றைப் பெற்றவர்கள் குபேரனாய் இருப்பர். ஆண்கள் கால் விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவான். பாதங்கள் சதைப்பிடிப்பின்றி அழகாக, அளவாக இருக்க வேண்டும். பாதங்களில் மேடு பள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணல்மாணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்.

அதிர்ஷ்டம் வரும்

அதிர்ஷ்டம் வரும்

நிலவு போன்ற அழகிய முக அமைப்பு கொண்டவர்கள் ஆழ்ந்த கடவுள் நம்பிக்கை கொண்டவர்களாகத் திகழ்வார்கள். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள். ஒரு பெண் இதுபோன்ற முக வடிவைப் பெற்றிருந்தால், அவள் லட்சியப் பெண்ணாகத் திகழ்வாள். உயர்ந்த மனோபாவத்துடனும், சிறந்த குணத்துடனும் இருப்பாள். சிலர் பார்ப்பதற்குச் சாதுவாகத் தோன்றினாலும், இக்கட்டான சூழலில் புலிப்பாய்ச்சலாக இவர்களுடைய செயல்பாடுகள் அமையும். இந்த முக வடிவமைப்புடைய பெண்களின் கணவனுக்கு அதிர்ஷ்டம் வந்து சேரும்.

வீரமான ஆண்கள்

வீரமான ஆண்கள்

இத்தகைய முக அமைப்புடைய ஆண்கள் வீரம் மிகுந்தவர்களாகத் திகழ்வார்கள். இவர்களுக்குக் காதல் திருமணம் ஏற்படும். உறவிலேயே திருமணம் கைகூடி வரவும் வாய்ப்பு உண்டு. எனினும், இவர்களது குடும்ப வாழ்வில் சலசலப்புகள் ஏற்படும். இவர்கள் எந்த விஷயத்திலும் எளிதில் பணிந்து போகமாட்டார்கள். மேலும், இந்த அன்பர்களுக்கு இசையில் ஆர்வமும், அதன் மூலம் பெரும்புகழும் கிடைக்கும்.

அமைதியானவர்கள்

அமைதியானவர்கள்

நீள் சதுர முக அமைப்பு பெற்றவர்கள் அடக்கமும், அமைதியும் நிறைந்தவர்களாக விளங்குவார்கள். எதிலும் மெதுவாகச் செயல்படுவார்கள். எந்த விஷயத்திலும் ஒரு தடவைக்குப் பல தடவை யோசித்தே செயல்படுவார்கள். மற்றவர்கள் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக்கொண்டாலும், இவர்கள் நிதானமாக யோசித்தே முடிவெடுப்பார்கள்.

சுயநலவாதிகள்

சுயநலவாதிகள்

இந்த முக அமைப்பு பெற்றவர்கள் நடுநிலை இயல்பு படைத்தவர்கள். வீண் பயமும், சுயநலமும் இவர்களிடம் இருக்கும். எல்லோரையும் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள். நீண்ட ஆயுள் உடையவர்கள். ஆனாலும், வாழ்நாள் முழுவதும் ஏதேனும் நோய்களுடன் வாழ்க்கையை நடத்துவர்.
நீங்க வரன் பார்க்கும் போது இது போன்ற அங்க லட்சணம் எல்லாம் இருக்கிறதா என்று பார்த்து முடிவு பண்ணுங்க.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+