Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கும்ப ராசியில் சந்திரன் சனி சேர்க்கை.. புனர்ப்பு தோஷம்.. அசாத்திய திறமை யாருக்கு இருக்கும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனியும் சந்திரனும் கூட்டணி சேர்ந்தாலோ நேருக்கு நேர் பார்த்துக்கொண்டாலோ, சந்திரன் வீட்டில் சனியோ சனி வீட்டில் சந்திரனோ நிற்பது புனர்ப்பு தோஷமாகும். இது திருமண தடையை ஏற்படுத்தும் சில நேரங்களில் இதுவே ராஜயோகத்தையும் தருகிறது. இன்றைய தினம் கும்ப ராசியில் சனியும் சந்திரனும் சேர்ந்திருக்கும் நேரத்தில் எந்த ராசிக்காரர்களுக்கு புனர்ப்பு தோஷம் யோகமாக மாறும் என்று பார்க்கலாம்.

சனி சந்திரன் சேர்க்கை: ஒரு ஜாதகத்தில் சனியும் சந்திரனும் சேர்ந்து நின்றாலோ, பரிவர்தனை பெற்றாலோ சனியின் வீட்டில் சந்திரன் அல்லது சந்திரன் வீட்டில் சனி நின்றாலோ அல்லது சம சப்தம பார்வை பெற்றாலோ புனர்ப்பு தோஷம் ஏற்படுகிறது. இரண்டு ஆற்றல் மிக்க ஆக்கபூர்வமான கிரகங்களான சந்திரன் சனி இணைவை புணர்ப்பு யோகம் என ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படுகிறது. அரசியல் மற்றும் பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் ஆன்மீகத்தொண்டு செய்பவர்களுக்கும் பத்தில் எட்டு பேருக்கு இந்த சந்திர-சனி கிரக சேர்க்கை கட்டாயம் இருக்கும். இது புனர்ப்பு தோஷம் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

Sani Chandran conjunction on Kumbam Rasi Punarpu Dhosham remedies in astrology

புனர்ப்பு தோஷம்: ஜாதகத்தில் புனர்ப்பு தோஷம் உள்ளவர்களுக்கு எளிதில் திருமணம் நடைபெறுவதில்லை. அப்படியே நடந்துவிட்டாலும் பிரிவில் முடிகிறது. அல்லது நிம்மதியற்ற வாழ்கையை அனுபவிக்க நேருகிறது. மேலும் பலருடன் தொடர்பு கொள்ளும் நிலையும் ஏற்படுத்துகிறது. புனர்ப்பு தோஷம் கொண்டவர்கள் பொதுவாழ்விலும் ஆன்மீகத்திலும் அதிகம் ஈடுபடுவதால் அவர்களுக்கு தன்னைப்பற்றியும் தன் குடும்பத்தை பற்றியும் சிந்திக்க நேரமில்லாமல் கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள். அதுவே அவர்களுக்கு குடும்ப வாழ்வில் பல பிரச்சனைகளுக்கு காரணமாகிறது.

கும்பத்தில் சனி சந்திரன் கூட்டணி: இன்றைய தினம் சந்திரன் கும்ப ராசியில் பயணம் செய்கிறார். அந்த ராசிக்கு நேர் எதிரிலே சிம்ம ராசியில் இப்போது சூரியன் புதனோடு இணைந்து பயணம் செய்கிறார். சந்திரன் மனோகாரகன், மனதை ஆள்பவர். நமக்கு எந்தவிதமான கஷ்ட, நஷ்டங்கள் வந்தாலும் முதலில் பாதிப்பது மனம்தான். மதிநலம் மனநலம் என்று சொல்வார்கள். அதன்படி நாம் ஒரு தெளிவான சிந்தனை, முடிவு எடுப்பதற்கு காரணமாக விளங்குபவர் சந்திரன். ஆகையால்தான் இவர் இருக்கும் ராசி வீடு ஒருவரின் ஜனன ராசி என்ற சிறப்பை பெறுகிறது. தாய், தாய்வழி உறவுகள் பற்றி பிரதிபலிப்பவர் சந்திரன். சந்திரனுக்கு ராசிமண்டலத்தை சுற்றி வர 30 நாட்கள் ஆகும்.

சந்திரன் வேகமாக பயணம் செய்யும் கிரகம். சனி மந்தமான கிரகம். சனிக்கு ராசி மண்டலத்தை சுற்றி வர 30 வருடங்கள் ஆகும். சனி இருள், சந்திரன் ஒளி. இப்படி எல்லாமே எதிரும் புதிருமாக அமைந்துள்ளது. இவர்கள் இருவரும் ஒரே ராசியில் கூட்டணியாக இருந்தால் தோஷமாகி விடுகிறது. இந்த அமைப்பு உள்ளவர்களுக்கு எல்லாமே எதிர்பாராத விதமாக கூடிவரும். எதிர்பாராத விதமாக எல்லாமே நடக்கும். புனர்ப்பு தோஷம் சில நேரங்களில் யோகமாகிவிடும். இந்த அமைப்பு ஜாதகத்தில் இருக்கப் பெற்றவர்கள் ஏதாவது ஒரு துறையில் சாதனையாளர்களாகவோ புகழ் பெற்றவர்களாகவோ இருக்கிறார்கள்.

ராஜயோக அமைப்பு யாருக்கு: இன்றைய தினம் பௌர்ணமி நாளில் புனர்ப்பு தோஷம் கும்ப ராசியில் சேர்ந்துள்ளது. மேஷ ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானம் என்பதால் ராஜயோக அமைப்பு தேடி வரப்போகிறது. இன்றைய தினம் எடுக்கும் காரியம் ஜெயமாக முடியும். சிம்ம ராசிக்காரர்களுக்கு ஏழாவது வீடான களத்திர ஸ்தானத்தில் புனர்ப்பு யோகம் அமைந்துள்ளதால் தொழில் வியாபாரத்தில் அபரிமிதமான லாபம் கிடைக்கும்.

பரிகாரம்: சனி சந்திரன் சேர்க்கை சனி சந்திரன் கிரக பரிவர்த்தனை. சனி சந்திரன் சப்தாம்ச பார்வை. சனி சந்திரன் சார பரிவர்த்தனை ஆகிய எல்லாமே புனர்ப்பு அமைப்புதான். பிறந்த ஜாதகத்தில் புனர்ப்பு அமைப்பு இருப்பவர்கள் தூக்க குறைபாடு உள்ளவர்களாக இருப்பார்கள். பிறந்த ஜாதகத்தில் சனி சந்திரன் சேர்க்கை பெற்றவர்கள் எந்த ஒரு முடிவையும் தீர்க்கமாக எடுக்க மாட்டார். முடிவெடுத்த பிறகு சரியா? தவறா? என்று யோசிப்பார்கள். தன் விஷயத்தில் தடுமாற்றமும் பிறர் விஷயத்தில் தெளிவும் இருக்கும். எனவே, பலசமயம் சொந்த வாழ்க்கை குழப்பமும், முரண்பாடும் உள்ளதாக இருக்கும். மேலும், இவ்விரு கிரகங்கள் பகையோ, நீசமோ அடையும். எதிர்மறை பலன்கள் கிடைக்கும். அது நேர்மறையாக மாற வேண்டுமெனில் தஞ்சாவூர் மாமணிக்கோயிலில் அருளும் நீலமேகப்பெருமாளைத் தரிசித்து வர புனர்ப்பு தோஷம் நீங்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+