சனிப்பெயர்ச்சி 2020-23: ரிஷப லக்னகாரர்களுக்கு பாக்ய சனி வெற்றி மீது வெற்றி
Recommended Video
சென்னை: சனிபகவான் தனுசு ராசியில் இருந்து தனது வீடான மகரம் ராசிக்கு ஜனவரி மாதம் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்கு எழுதியிருக்கிறோம். அது கோச்சார பலன்கள். இனி மேஷம் முதல் மீனம் வரை 12 லக்னங்களுக்கு சனிபகவான் என்ன பலன்களை தருவார் என்று பார்க்கலாம். ரிஷப லக்னகாரர்களுக்கு சனிபகவான் 9 மற்றும் 10ஆம் வீட்டு அதிபதி. பாக்ய ஸ்தானம், தொழில் ஸ்தான அதிபதி. பாக்ய ஸ்தான அதிபதி பாக்ய ஸ்தானத்தில் அமரப்போகிறார். ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கும் சனிபகவான் ரிஷப லக்னத்திற்கு லாப ஸ்தானம், முயற்சி ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானத்தின் மீது பார்வை விழுவதால் என்னென்ன நன்மைகள் பலன்கள் என்று பார்க்கலாம்.
ஜென்ம லக்னம் என்பது ஒருவர் பிறக்கும்போது சூரியன் எந்த ராசி மண்டலத்தில் சஞ்சாரம் செய்து வந்தாரோ அந்த ராசி மண்டலம் லக்னமாக அமையும். லக்னத்தை வைத்துதான் ஒரு ஜாதகத்தின் அடிப்படை பலனை அறிய முடியும். லக்னம் என்றால் முதல் வீடு. இதில் இருந்து பன்னிரண்டு வீடுகளும் ஒருவர் வாழ்வில் ஏற்படும் நிகழ்வுகளை கணிக்க பயன்படுகிறது. மேஷ லக்னகாரர்கள் கம்பீரமான தோற்றத்தை உடையவர்கள். முன்கோபமும், பிடிவாதமும் அதிகமாக இருக்கும். அறிவாளி என்று பெயர் எடுப்பீர்கள். உங்களுக்கு சனிபகவான் தனது வீடான மகர லக்னத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். இது ரிஷப லக்னத்திற்கு ஒன்பதாம் பாவகம்.

ராஜயோகம் தரும் சனிபகவான்
ரிஷப லக்னகாரர்களுக்கு சனி பாக்யாதிபதி கர்மாதிபதி. யோக காரகர் சனி, பெயர் புகழ் கீர்த்தி, தந்தை தர்மம், தொழில், ஜீவனம் ஆகியவற்றின் காரகர். சனிபகவான் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் முன்னேற்றங்களை தருவார். சனி தர்ம கர்மாதி யோகத்தை தருவார். சனி உங்க ராசிக்கு எங்கே இருக்கிறாரோ அதைப்பொருத்து அற்புதமான யோகங்களைத் தருவார். ரிஷப லக்னகாரர்களுக்கு செவ்வாய் சனி சேர்க்கை அற்புதமான பலன்களைத் தருவார். ரிஷப லக்ன காரர்களுக்கு ஜாதகத்தில் மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெற்று கூடவே சனி சேர்ந்திருப்பது மிகப்பெரிய ராஜயோகத்தை தரும்.

சனிபகவான் பாக்ய ஸ்தானம்
ரிஷபம் சுக்கிரன் ராசி. சுக்கிரன் சனி நண்பர்கள் என்பதால் சனி ரிஷப ராசிக்கு யோகங்களைத் தருவார். 2017ஆம் ஆண்டு முதல் சனி அஷ்ட ஸ்தானத்தில் அமர்ந்திருந்தார். நிறைய கெடுபலன்களை கொடுத்தார். எதிர்பாராத வேலையில் இடமாற்றம், சனி ராகு கேது நட்சத்திரங்களில் இருந்தாலோ பயன்கள் மாறும். இப்போது உங்க பாக்யாதிபதி பாக்ய வீட்டிற்கு மாறுவது நன்மை. ரிஷப லக்னத்திற்கு தொழில் தொடர்பாக நன்மைகள் நடக்கும். நிறைய தான தர்மங்கள் செய்யலாம். டிரஸ்ட்டில் இருப்பவர்கள் பணத்தை ஜாக்கிரதையாக கையாளவேண்டும்.

ஊனமுற்றவர்களுக்கு உதவுங்கள்
இந்த சனி பெயர்ச்சி காலத்தில் அக்கம் பக்கம் அண்டை வீட்டுக்காரர்களுடன் ஜாக்கிரதையாக பழகவேண்டும். கணவரின் இளைய சகோதரர்கள், தொழில் செய்யும் இடத்திலும் கவனம். தொலை தூர பயணங்களிலும் கவனம் தேவை. எதிர்பாரத எதிரி நோய் கடன் ஸ்தானத்தை பார்க்கிறார். வேலை தொடர்பான சந்தோஷங்கள் கூடும். புதிய வீடுகள் வாங்கலாம். தான தர்மங்கள் பண்ணுங்க நல்லது நடைபெறும். ஆன்மீக காரியங்களில் தவறுகள் செய்பவர்களை சனிபகவான் கண்டிப்பாக மாட்டி விடுவார். சனிபகவானை குளிர்விக்க உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவி பண்ணுங்க. ஏழை எளிய மக்களை அவமரியாதை செய்யாதீர்கள். நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்க.

அதிர்ஷ்டம் கொடுப்பார்
அதிர்ஷ்டத்தை அள்ளிக்கொடுப்பார் சனிபகவான். கணவன் மனைவி பிரச்சினை தீரும். நோய் நொடிகள் குறையும், கடன் பிரச்சினைகள் தீரும்.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 9ம் இடமான மகரம் ராசியிலிருந்து 3ம் பார்வையாக 11ம் இடமான மீனம் ராசியையும் 7ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 3ம் இடமான கடகம் ராசியையும் 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 6ம் இடமான துலாம் ராசியை பார்வையிடுவார். சகோதரர்கள் உறவு வெளிநாடு பிசினஸ் எல்லாம் நன்றாக இருக்கும். வீடு வாங்கும் யோகத்தை தரப்போகிறார். அதிகமான லாபம் கிடைக்கும், தொழிலில் வெற்றி கிடைக்கும். திடீர் வருமானத்தை தருவார்.

கடன்கள் தீரும்
துலாம் ராசியில் சனியின் பார்வை விழுவதால் எதிரிகள், பிரச்சினைகள், கடன்கள், தடை தாமதங்கள் விலகும். இது ஆறாவது வீடு என்பதால் பிரச்சினைகள் மட மடவென குறையும். சனிபகவான் வசதி வாய்ப்புகள், வேலையில் மாற்றங்கள் நிம்மதிகளை கொடுப்பார். அரசு வேலைகளில் உயர்வுகளைத் தருவார். அரசாங்க வேலைகளில் இருப்பவர்களுக்கும் நன்மை நடக்கும்.

பயணங்களில் வெற்றி
சனிபகவான் சூரியன், சந்திரன், செவ்வாய் நட்சத்திரங்களான உத்திராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களில் பயணம் செய்யும் காலத்தில் பலவித மாற்றங்களைத் தருவார். பயணங்களை செய்ய வைப்பார். இல்லத்தரசிகளுக்கு அதிர்ஷ்டமும் வெற்றியும் கிடைக்கும். இனிமையான காலம். வாழ்க்கைத்துணை மூலம் உயர்வுகள் கிடைக்கும். செய்யும் முயற்சிகளில் வெற்றிகளை கொடுக்கும் காதல் இனிமையாக மாறும். நோய்கள் தீரும். வீடு, இடம் மாற்றங்கள் நன்மையில் முடியும். இளைய சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். ரிஷபத்திற்கு இந்த சனிப்பெயர்ச்சி பொற்காலம்.












Click it and Unblock the Notifications