Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏழரை எபெக்ட்... விரைய சனி..ஜென்ம சனி..பாத சனி.. ஈசியா தப்பிக்க பரிகாரம் இருக்கு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் சனி பகவான் கர்மகாரகன். சனி நீதிமான் என்பதால் ஒருவருக்கு சோதனைகளை கொடுத்து அதற்கான படிப்பினைகளை கற்றுக்கொடுப்பார். சனி பகவானின் பார்வைக்கு பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். சனியின் பிடியில் நாம் சிக்கியிருக்கிறோம் என்பதை சில அறிகுறிகள் மூலம் உணர்ந்து கொள்ளலாம். சனிபகவான் 12,1,2ஆம் வீட்டில் பயணம் செய்யும் காலத்தில் ஏழரை சனி காலமாகும். சனியினால் ஏற்படும் சங்கடங்களை தவிர்க்க சில பரிகாரங்களை செய்தால் போதும் பிரச்சினைகள் படிப்படியாக குறையும்.

சனி பகவான் ஒருவரின் ஜாதகத்தில் நான்காம் வீட்டில் இருந்தால் அர்த்தாஷ்டம சனியாகவும் ஏழாம் வீட்டில் இருக்கும் போது கண்டச்சனியாகவும் பாதிப்பை ஏற்படுத்துவார். எட்டாம் வீட்டில் சஞ்சரிக்கும் போது அஷ்டம சனியாகவும் பிரச்சினையை தருவார். விரைய சனி, ஜென்ம சனி, பாத சனி என ஏழரை ஆண்டுகாலம் படுத்தி எடுத்து பல படிப்பினைகளை கற்றுக்கொடுத்து விடுவார். சிலருக்கு சனியின் பாதிப்பு பற்றி தெரியாது. நமக்கு ஏழரை நடக்குதோ என்று அவர்களாகவே நினைத்துக்கொள்வார்கள். சனிபகவானின் பிடியில் நாம் சிக்கியிருக்கிறோம் என்பதை சில அறிகுறிகளை வைத்தே அறிந்து கொள்ளலாம்.

Sani peyarchi 2023-26: Elarasani Viraya sani Patha Sani effects and remedies

சனி பகவான் ஒருவரின் ராசிக்கு 12, 1, 2 ஆம் வீடுகளில் இருப்பது ஏழரை சனி காலமாகும். முதல் இரண்டரை ஆண்டுகள் விரைய சனி. 2023 ஆம் ஆண்டு முதல் மீனம் ராசிக்கு விரைய சனியாக ஏழரை சனி தொடங்குகிறது. இந்த கால கட்டத்தில் பணத்தை பணமாக வைத்திருக்காமல் சொத்துக்களில் முதலீடு செய்யலாம். விபரீத ராஜயோகத்தையும் தருகிறார் சனி. காரணம் சனி பகவான் உங்கள் ராசிக்கு 12ஆம் வீட்டிற்கு அதிபதி. சம்பாதித்த பணத்தை செலவு பண்ணும் காலம். சுப விரையத்திற்கு செலவு பண்ணுங்க. அப்படி செலவு செய்யாமல் சேர்த்து வைத்தால் தேவையில்லாத செலவு வரும் என்பதால் சொத்துக்களாக வாங்கி முதலீடு செய்வது நல்லது.

யாராவது சொந்த வீட்டிற்கு கெடுதல் செய்வார்களா? அதுபோலத்தான் சனிபகவானும் உங்களுக்கு ராசி அதிபதி. கும்பராசிக்காரர்கள் சனிபகவானுக்கு செல்லப்பிள்ளை. கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் ஜென்ம சனி ஆரம்பிக்கிறது. சனிபகவான் உங்கள் ராசிக்கு அதிபதி. அவர் நல்லதே செய்வார். சனி பகவான் 12ல் அமர்வதால் பணம் விரையங்கள் மருத்துவ செலவாக ஏற்படும் எனவே இதை தடுக்க சுப செலவாக மாற்றுங்கள். நோயாளிகளுக்கு உதவி செய்யலாம். கும்பம் ராசியில் அமர்ந்து உங்களின் தனம், குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி. வாயினால் வம்பு வழக்குகள் வரலாம். நாவடக்கம் தேவை.எதை பேசினாலும் பிரச்சினை வரலாம் என்பதால் வாயை மூடி பேசவும். ஈகோவை விட்டுக்கொடுங்க. குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிரச்சினைகள் வராமல் இருக்க விட்டுக்கொடுங்கள். விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.

Sani peyarchi 2023-26: Elarasani Viraya sani Patha Sani effects and remedies

சனிப்பெயர்ச்சியால் அதிகம் கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கும் மகரம் ராசிக்காரர்கள் கொஞ்சம் பெருமூச்சு விட்டுக்கொள்ளலாம். காரணம் ஜென்ம சனி விலகியுள்ளது. அதே நேரத்தில் ஏழரை சனியின் கடைசி இரண்டரை ஆண்டு காலம் பாத சனியாக தொடர்வதால் கொஞ்சம் கவனம் தேவை. தன வருமானமும் லாபமும் கிடைக்கும். சனியின் பார்வை ராசிக்கு நான்காம் வீடு, எட்டாம் வீடு,பதினொன்றாம் வீடுகளின் மீது விழுவதால் கஷ்டங்களை எளிதாக கடந்து விடலாம். எவ்வளவோ பாத்துட்டோம் இதையும் ஒரு கை பார்த்துடுவோமே என்ற தெம்பு வந்து விடும்.

சனிபகவான் வாகனமான காகம், சனியின் வசிப்பிடங்களாக கருதப்படும் இடங்களை நாம் கடக்க நேரிடும் போது சில பாதிப்புகள் ஏற்படும் அதை வைத்தே நமக்கு சனியால் சில சங்கடங்கள் வரப்போகிறது என்பதை அறியலாம். அதற்கான பரிகாரம் செய்தால் போதும் பாதிப்புகள் படிப்படியாக குறையும். சனியின் பிடியில் இருப்பவர்கள் சோம்பேறிகளாக இருப்பார்கள். லேட்டாக எழுந்திருப்பார்கள். அசுத்தமானவர்களாக இருப்பார்கள். சுத்தமாக இருக்கமாட்டார்கள். பல் கூட விளக்காமல் காபி குடிப்பார்கள். அடிக்கடி விழுந்து எலும்பில் அடிபடுவார்கள். இவர்கள் எல்லாம் சனியின் பிடியில் சிக்கியிருப்பவர்கள். இதற்கு எளிமையான பரிகாரம் உள்ளது.

காகம் ஒருவரை விடாமல் துரத்தும். சாதாரணமாக செல்லும் போதே எச்சம் போடும். சிலரை தலையில் உடம்பில் கொத்தும் அப்போது கோச்சாரப்படி சனி நமக்கும் சங்கடமான நிலையில் இருக்கிறார் என்பதை உணர்ந்து கொள்ளலாம். நம் வீட்டு முன்பு திடீரென குப்பைத் தொட்டி முளைக்கும். குப்பை லாரியில் இருக்கும் குப்பை திடீரென உங்கள் மீது விழும். தெரியாமல் மலத்தை மிதித்து விடுவீர்கள். சிலருக்கு ரயிலில் பயணம் செய்யும் போது பாத்ரூம் அருகில் சீட் கிடைக்கும். மூக்கை பிடித்தவாறே பயணிக்க வேண்டியிருக்கும்.

பச்சரிசியை ஒரு கையில் அள்ளி அதை நன்கு பொடி செய்து சூரிய நமஸ்காரம் செய்துவிட்டு விநாகரை வணங்க வேண்டும். பிறகு விநாயகரை மூன்று சுற்று சுற்ற வேண்டும். அப்போது கையில் உள்ள அரிசியை போட வேண்டும். அதை எறும்புகள் தூக்கி செல்லும். அப்படி தூக்கி சென்றால் நமது பாவங்களில் பெரும்பாலனவை நம்மை விட்டு போய்விடும். வன்னி மரத்தடி விநாயகர் கோவில் என்றால் அது இன்னும் விசேஷம். சனிக்கிழமைகளில் இதை செய்ய வேண்டும்.

Sani peyarchi 2023-26: Elarasani Viraya sani Patha Sani effects and remedies

பச்சரிசி மாவை எறும்புகள் தமது மழைக்காலத்துக்காக சேமித்து வைத்து கொள்ளும். இரண்டரை ஆண்டுகளுக்கு எறும்புக்கு அந்த உணவு போதும். இதை முப்பத்துமுக்கோடி தேவர்கள் பார்த்து கொண்டிருப்பார்கள். இரண்டரை ஆண்டுக்கு ஒரு முறை கிரக நிலை மாறும். அப்போது பரிகாரம் வலுவிழந்து விடும். எனவே நாம் அடிக்கடி பச்சரிசி மாவை எறும்புக்கு உணவாக போட வேண்டும். ஒரு எறும்பு சாப்பிட்டால் 108 ஏழைகள் சாப்பிட்டதற்கு சமம். இதன் மூலம் இந்த பரிகாரத்தின் மகத்துவத்தை உணர்ந்து கொள்ளலாம். இந்த பரிகாரத்தை அடிக்கடி செய்தால் சனிபகவான் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.

வீட்டில் விளக்கை ஏற்றி முதலில் முதற்கடவுள் கணேசனை வணங்கி வழிபாட்டை தொடங்கிய பின் கருப்பு எள்ளை சனி பகவானுக்கு படைக்க வேண்டும். பின் மலர்களை சமர்பித்து சிவன் மற்றும் ஹனுமானை வழிபட வேண்டும். பூஜையின் முடிவில் சனி காயத்திரி மந்திரத்தை 21முறை பாராயணம் செய்ய வேண்டும். பிரசாதம் படைத்து ஆரத்தி காட்ட வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருந்து மாலையில் இதே பூஜையை செய்ய வேண்டும். விரதத்தை மாலையில் முடிக்கும் போது அரிசி சாதத்துடன் உளுந்து அல்லது எள் சாதம் சமைத்து சாப்பிட வேண்டும். சனி பூஜை அன்று ஒரு பிராமணருக்கு இரும்பை தானமாக வழங்கினால் மிகவும் நல்லது. பூஜையின் இறுதி நாளில் அனுமான்,சிவன் மற்றும் சனி பகவான் கோயிலுக்கு சென்று வணங்கி வழிபட்டு வர சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

ஏழை மாணவர்களின் கல்வி கட்டணம், படிப்பு செலவுக்கு உதவலாம். சனி பிரதோஷ வழிபாடு செய்வது சிறந்தது. அன்னதானத்திற்கு உதவி செய்யலாம்.சித்தர்களின் பீடங்கள், ஜீவ சமாதி பீடங்களுக்கு சென்று வணங்கி வழிபடலாம். உடல் ஊனமுற்றவர்களுக்கு, விதவைகளுக்கு உதவி செய்யுங்கள். தினமும் ராம நாமம் ஜெபித்து வந்தால் சனிபகவானின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். அனுமாரை வழிபட சனி பகவானால் ஏற்படும் தொல்லைகள் குறையும். ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால வேளையில் கால பைரவரை வணங்கலாம். தேய்விறை அஷ்டமி நாளில் கால பைரவரை வணங்கலாம். அனாதை இல்லங்கள், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளைச் செய்யலாம்.

சனிக்கிழமை அசைவ உணவு கண்டிப்பாக சாப்பிடக் கூடாது. தினமும் காகத்திற்கு எள் கலந்த சாதம் வைக்கவும். சனிக்கிழமை தோறும் பகவானுக்கு இரும்பு அகல் விளக்கில் நல்லெண்ணையில் தீபம் ஏற்றி வழிபடவும். கருங்குவளை மலர்களால் சனி பகவானுக்கு அர்ச்சனை செய்து வரலாம். வன்னி மர இலைகளை மாலைகளாகத் தொடுத்து சிவபெருமானுக்கு சனிக்கிழமை தோறும் சாற்றி வணங்கி வழிபடவும். சனிக்கிழமை தோறும் நல்லெண்ணை குளியல் செய்தால் கெடுதல் குறையும். விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+