சனி பெயர்ச்சி.. நளனுக்கு சனி செய்து கொடுத்த சத்தியம்.. நள தமயந்தி கதை படிங்க.. சனி தோஷம் நீங்கும்
சென்னை: நள சரித்திரம் யாரெல்லாம் கேட்கிறார்களோ நளனின் சரித்திரத்தை படிக்கிறார்களோ அவர்களை சனிபகவான் பாதிக்க மாட்டார். ஏழரை சனி காலத்தில் சங்கடங்களைத் தரமாட்டார் சனி பகவான். அதற்கான காரணத்தை தெரிந்து கொள்ள சனி பெயர்ச்சி நாளில் நளன் தமயந்தி கதையை படியுங்கள்.
சனி கிரகம்: நவகிரகங்களின் சனிபகவான் மெதுவாக நகர்பவர். ஒரு ராசியில் இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சரிப்பவர். சனீஸ்வரன் என்று சொல்வதை விடவே சனைச்சரன் என்று கூறுவதே பொருத்தமானது. இவர் 12 ராசிகளையும் கடக்க 30 ஆண்டுகாலம் எடுத்துக்கொள்கிறார்.

சனி பகவான்:சனிபகவான் என்றாலே பலருக்கும் பயம்தான் காரணம் ஒரு ராசிக்காரரை ஏழரை ஆண்டுகாலம் பாடாய் படுத்தி விடுவார். அதிலிருந்து மீண்டு மூச்சு விட்டால் அர்த்தாஷ்டம சனியாகவும், அப்புறம் கண்டச்சனி, அஷ்டமசனியாகவும் அசத்தி எடுத்து விடுவார். எனவேதான் சனியால் ஏற்படும் சங்கடங்கள் தீர நாம் நள சரித்திரம் படிக்க வேண்டும் என்று ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
நள சரித்திரம்: சனிபகவான் பிடித்தபோது ராமர் வனவாசம் சென்றார். நாடு இழந்து ஒரு சமயம் மனைவியையும் இழந்தார். அதேபோல பாண்டவர்களும் சூதாடி நாடு இழந்து சகோதரர்களுடன் வனவாசம் சென்றார் தர்மராஜா. தாங்கள் பட்ட கஷ்டத்தை கூறி பரத்வாஜா முனிவரிடம் வருந்திய போது சனியால் நளமகாராஜா பட்ட கஷ்டத்தை கூறி அவர்களை ஆறுதல்படுத்தினார்.
சனிக்கு என்ன பிடிக்கும்: சனிபகவான் சூரிய புத்திரன். வாரத்தில் வரும் முதல்நாள் சூரியனுக்கும், கடைசி நாள் சனிக்கும் என்று வகுத்தார்கள். சனிக்கு கருமை உடல். எனவே, காக்கை வாகனம். கறுப்பு வஸ்திரம். கருப்பு தான்யமாக எள். எள் எண்ணெய் அவர் விரும்புவது. நீலக் குவளை மலர், வன்னி இலை, புளு சபையர் என்ற நீலக்கல் என அனைத்தும் சனீஸ்வரனுக்கு பிடித்தமானது.
சனி பகவான் மனைவிகள்: இவருக்கு நீளாதேவி, மந்தாதேவி, சேஷ்டாதேவி என மூன்று மனைவியர். குளிகன் என்றொரு மகன். இவர் இரும்பு, எண்ணெய், கருப்பு தானியம், பூமியில் புதைந்த புதையல் முதலியவற்றுக்குக் காரகர். அவரவர் கர்மவினைப்படி வறுமை, கலகம், நோய், அவமதிப்பு ஆகியவற்றை உண்டாக்குகிறவர். ஒருவருடைய ஜாதகத்தில் இவர் நல்ல இடத்தில் தங்கி வலுவும் பெற்றிருப்பாரானால் அளவற்ற நலன்களை வாரி வழங்குவார்.
திருநள்ளாறு: மகரம், கும்பம் ராசிகளில் அதிபதி. மேஷம் ராசியில் நீசமடையும் சனிபகவான், துலாம் ராசியில் உச்சமடைகிறார். சனிபகவானுக்கு நவகிரக தலங்களில் திருநள்ளாறு பிரசித்தி பெற்றது. நீதி அரசராக கலியுகத்தில் சனி ஆட்சி செய்யும் இடம் இந்த தர்ப்பைக் காடு என்ற திருநள்ளாறு. இங்கே தர்ப்பராண்யேஸ்வரர் சந்நதியின் கிழக்கு கோபுரத்தின் வடக்கு திசையில் காக்கை வாகனத்தோடு, நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். திருநள்ளாறு நாயகனை தரிசனம் செய்தால் சனி தோஷத்தால் வந்த நோய், பொருள் விரயம், பேராபத்து, சஞ்சலம், துக்கம், விரக்தி, சோம்பல், தொழில் இடையூறு என அனைத்து சோதனைகளும் நீங்கும்.
நள தமயந்தி: நிடத நாட்டை ஆண்ட நளனும் விதர்ப்ப நாட்டு இளவரசியும் ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே காதல் கொண்டனர்.இருவரின் காதலுக்கும் அன்னப்பறவை தூது போனது. தமயத்தின் அழகில் தேவர்களும் மயங்கினர். மகளுக்கு திருமணம் செய்ய சுயம்வரம் அறிவித்தார் விதர்ப்ப நாட்டு மன்னன். அந்த சுயம்வரத்தில் பங்கேற்க நளன் சென்றான். கூடவே தேவர்களும் போக, சனிபகவானும் வந்தார். ஆனால் தமயந்தி மாலையிட்டதோ நளனுக்குத்தான்.
நளனை பிடித்த சனி: சனிபகவானுக்கு நளன் மீது பொறாமை ஏற்பட்டது. பழிவாங்க சமயம் பார்த்து காத்திருந்தார். நளனுக்கு ஏழரை சனி பிடிக்கும் காலம் வந்தது. கூடவே புத்தியும் மாறியது. பூஜை செய்ய போகும் போது கால்களை சரியாக கழுவாமல் போனார். அதுதான் சமயம் என்று பின்னங்காலில் பிடித்தார் சனிபகவான். அதுவரை புத்தியோடு இருந்த நளனுக்கு மாறியது புத்தி. புட்கரன் என்ற அரசன் சூதாட அழைத்தான். நளன் சூதாடி நாடு நகரங்களை தோற்றான். மனைவி மக்களோடு அரண்மனையை விட்டு வெளியேறினான்.
விளையாடிய விதி: தம் பிள்ளைகளை மாமானார் வீட்டிற்கு அனுப்பினான். மனைவியோடு காட்டுக்கு சென்றான். அங்கேயும் விதி விளையாடியது. உடுத்திய துணியை கூட உருவிக்கொண்டு விட்டார் சனிபகவான். மனைவியாவது சந்தோஷமாக இருக்கட்டும் என்று கூறி காட்டில் தனியாக விட்டு விட்டு சென்றார் நளன். விடிந்ததும் கணவனை காணாமல் தவித்த தமயந்தியை அவரது அப்பாவின் வீட்டிற்கு கொண்டு போய் சேர்த்தனர்.
உருவம் மாறிய நளன்: காட்டில் சுற்றித்திருந்த நளனை கார்கோடன் என்ற கருநாகம் தீண்டியது. இதில் அழகாய் இருந்த நளன் அசிங்கமாக மாறினான். விகாரமாக இருந்த நளன் தனது பெயரை வாகுனன் என்று மாற்றி வைத்துக்கொண்டு இருதுபன்னன் என்ற மன்னனிடம் தேர்ப்பாகனாக வேலை செய்தான். காணமல் போன கணவன் எங்கிருக்கிறான் என்று கண்டு பிடிக்க மீண்டும் தமயந்திக்கு சுயம்வரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த சுயம்வரத்திற்கு மன்னன் இருதுபன்னன் தனது தேரோட்டியை அழைத்து வந்தார்.
சுய உருவம் பெற்ற நளன்: அரண்மனை சமயற்கூடத்தில் சமையல் செய்து கொண்டிருந்த போது தன் பிள்ளைகளிடம் வாகுனன் பாசமாக பேசியதை கேட்டு அவரே தனது கணவன் என்று அடையாளம் கண்டு கொண்டாள் தமயந்தி. உடனே தமயந்தியின் அப்பாவும் வாகுனனை அழைத்து கேட்டார். சனி விலகும் நேரம் நெருங்கிவிட்டது என்பதை உணர்ந்தார் நளன். கார்கோடகன் கொடுத்த ஆடையை எடுத்து அணிந்து சுய உருவத்தை அடைந்தார். மனைவி மக்களுடன் இணைந்த நளன், தான் சூதாடி இழந்த தேசத்தை போரிட்டு வென்றார்.
தர்பாரண்யேஸ்வரர்: நாடு மனைவி மக்கள் அனைவரையும் அடைந்தாலும் நளன் மனதில் அமைதி இல்லை. அப்போது நாரதர் நளனின் கனவில் தோன்றினார். நளனின் மன அமைதி இல்லாமைக்குக் காரணம் சனியே என்றும் சனி விலக ஆலயங்களுக்கு பயணம் செய்யுமாறு கூறினார். நளன் மனைவி மக்களோடு திருத்தலப் பயணம் மேற்கொண்டான். வழியில் பரத்வாஜ முனிவரைக் கண்டு வணங்கினான். பரத்வாஜர் நளனிடம் திருநள்ளாறு சென்று தர்ப்பாரண்யேஸ்வரரை வழிபட்டால் சனிபகவான் விலகி சாந்தி நிலவும் என்று கூறினார்.
திருநள்ளாறில் அபிஷேகம்: நளச் சக்ரவர்த்தியும் திருநள்ளாறு ஈசனுக்கு, பால், தயிர், பழரசம், சந்தனக் குழம்பு, பன்னீர், இளநீர், நல்லெண்ணெய் போன்றவற்றால் அபிஷேகம் செய்து சாதத்தில் நல்லெண்ணெயும், எள் பொடியும் கலந்து நைவேத்யம் செய்தார். இவற்றை எல்லாம் சனி பகவான் ஒரு தூணில் மறைந்து நின்று கண்டு ரசித்துக்கொண்டிருந்தார்.
சனீஸ்வரன்: போகமார்த்த பூண்முலையாள் நாயகனாம் சிவன், பிரசன்னமாகி, நளனுக்கு ஏற்பட்ட பிரச்சினையை போக்கினார். பின் சனி பகவானை நோக்கி இங்கே நில். இன்று தொட்டு உனக்கும் ஈஸ்வரன் என்ற பெயர் சேரட்டும் என்றார். அன்று முதல் சனி பகவான், சனீஸ்வரன் ஆனார். நளசரித்திரம் படிப்பவர்களுக்கு சனிபகவான் சங்கடம் தரமாட்டார். ஏனென்றால் நளனுக்கு சத்தியம் செய்து கொடுத்தாராம் சனிபகவான்.
தோஷம் நீக்கும் நள தீர்த்தம்: சனிபகவானை வணங்கும் முன், நளமகாராஜன் ஒரு குளத்தை வெட்டினார். இதுவே நள தீர்த்தம் என இன்றும் போற்றப்படுகிறது. நள தீர்த்தத்தில் எள் எண்ணெய் தேய்த்து நீராடிய பின், பழைய ஆடைகளை அங்கேயே விட்டுவிட வேண்டும் என்பது வழிபாட்டு முறைகளில் ஒன்று. இதை சனீஸ்வரர் நேசிக்கிறார். இப்படி செய்வதினால் எப்படிப்பட்ட தோஷமும், நவகிரஹ கோளாறும் நீங்கும்.
மங்கள சனீஸ்வரர்: இங்குள்ள கலிதீர்த்த விநாயகரைத்தான் முதலில் வணங்க வேண்டும். சனி பகவானின் பிரசாதத்தையோ, சிவபெருமானின் பிரசாதத்தையோ வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டாம் என்று ஆலோசனை சொல்லப்பட்டாலும், திருநள்ளாறு சனீஸ்வர பிரசாதத்தை வீட்டிற்கு கண்டிப்பாக கொண்டு செல்ல வேண்டும் என்கின்றனர் சித்தர்களும் ரிஷிகளும். புரட்டாசி மாத பௌர்ணமி பூஜையும், மகாசிவராத்திரி பூஜையும், சனி பெயர்ச்சி பூஜையும் சிறந்தவை. இந்த காலங்களில் திருநள்ளாற்றில் தங்கி வழிபட வேண்டும். நள மகாராஜாவை விடவா? நாமெல்லாம் கஷ்டப்படுகிறோம். எனவே எந்த சனி என்றாலும் கவலைப்பட வேண்டாம்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications