சனி பெயர்ச்சி 2022: அர்த்தாஷ்டம சனியால் கஷ்டங்கள் நீங்குமா - விருச்சிக ராசிக்கு என்ன தருவார்?
விருச்சிக ராசி மற்றும் லக்னத்திற்கு சனிபகவான் மூன்று மற்றும் நான்காம் வீட்டிற்கு அதிபதி. நான்காம் அதிபதி நான்கில் அமர்கிறார். சனிபகவான் அர்த்தாஷ்டம சனியாக அமர்ந்தாலும் உங்களுக்கு நன்மைகளையே செய்வார்.
சென்னை: சனிபகவான் மகர ராசியில் இருந்து தனது வீடான கும்ப ராசிக்கு இன்னும் இரு தினங்களில் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். விருச்சிக ராசி மற்றும் லக்னகாரர்களுக்கு சனிபகவான் நான்காம் வீட்டில் அமரப்போகிறார். அர்தாஷ்டம சனியாக இருந்து இரண்டரை ஆண்டுகாலம் சஞ்சரிக்கும் சனியால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கிடைக்கப் போகும் பலன்கள், பரிகாரங்களைப் பார்க்கலாம்.
விருச்சிக ராசி லக்னத்திற்கு சனி மூன்று மற்றும் நான்காம் பாவகத்திற்கு அதிபதி. நான்காம் இடம் தாய், வண்டி வாகனம் வித்தை, குழந்தை வளர்ப்பு, பூர்வீக குணங்கள் ஆகியவற்றிற்கு பொறுப்போடு கவனிக்க வேண்டும். இந்த விசயங்களில் கவனமாக இருப்பது நல்லது. பூர்வீகம், பித்ருக்கள், காதல், குழந்தைகள் ஆகிய விசயங்களில் கவனமாக இருப்பது நல்லது.
சனிபகவான் தனது பத்தாம் பார்வையாக உங்களுடைய ராசியை பார்க்கிறார். அதை தவிர உங்க லக்னத்திற்கு ருண ரோக சத்ரு ஸ்தானமான ஆறு, தொழில் ஸ்தானமான பத்தாம் வீடுகளை பார்வையிடுகிறார். சனிபகவானின் சஞ்சாரம் மற்றும் பார்வையால் விருச்சிக ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

அர்த்தாஷ்டம சனி
சனிபகவான் இதுநாள்வரை சங்கடங்களைக் கொடுத்திருப்பார். இந்த முறை சனி நான்காம் பாவத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். வீடு, கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். வண்டி வாகனங்களில் கவனமாக இருங்க. அம்மா உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். சுப விரையம் ஏற்படும். குழந்தைகள் குணநலன்கள், உடம்பில் கவனமாக இருங்கள். இளைய சகோதரர்களின் வீட்டு விஷேசங்களில் பங்கேற்பீர்கள்.

நினைத்தது நிறைவேறும்
சனிபகவான் மூன்றாம் வீட்டு அதிபதி நான்காம் வீட்டில் அதிபதியும் நான்காம் வீட்டில் அமர்ந்து சசமாக யோகம் தருவார். தீர்க்கப்பபடாத பிரச்சினைகள் தீரும். நினைத்தது நிறைவேறும். சத்ருக்கள் எதிரிகள் விலகும் காலம். சுபமான காலம். உடல் ரீதியான உபாதைகள் இருந்தாலும் நிவர்த்தியை தருவார். வேலையில் மட்டுமல்லாது சொந்த வாழ்க்கையில் நிம்மதியைத் தருவார்.

கடல் கடந்து செல்லும் யோகம்
ஆட்சி பெற்ற சனி உங்க லக்னத்திற்கு பத்தாம் இடமான சிம்மத்தை பார்க்கும் காலத்தில் உங்க தொழிலில் லாபம், வேலையில் இடமாற்றம் ஏற்படும். அரசியல் அரசாங்க துறையில் உள்ளவர்களுக்கு பதவியில் இடமாற்றம் கிடைக்கும். கடல் கடந்து வெளிநாடு செல்லும் யோகத்தை தருவார். சபாக்கியங்களைத் தருவார். மாணவர்களுக்கு நன்மை செய்வார் சனி.

நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்
திருமணத்தடைகள் நீங்கும். சனி குழந்தை பாக்கியத்திற்கு இருந்த தடைகள் நீங்கும். சொத்துக்களை வாங்கலாம். இதுநாள்வரை சொத்துக்கள் வாங்கும் பிரச்சினைகளில் இருந்த தடைகள் நீங்கும். மனதில் நிம்மதி ஏற்படும். தனவரவு அதிகரிக்கும் கூடவே செலவுகளைத் தரும். மன நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும்.

நோய்களால் கவனம்
இந்த சனி பெயர்ச்சியால் உங்களின் பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும். அர்த்தாஷ்டம சனி உங்க உடம்பில் உள்ள நோய்களை வெளிப்படுத்தி நிவர்த்தி ஏற்படுத்த வழிவகுப்பார். பொறுப்புகளை சுமக்க வைப்பார். வண்டி வாகனம் பழுது பார்க்கும் செலவுகளைத் தருவார் சனி. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. எல்லை காவல் தெய்வங்களை வழிபடுங்கள் பாதிப்புகள் குறையும்.












Click it and Unblock the Notifications