சனி பெயர்ச்சி பலன் 2023: அஷ்டமத்து சனியால் அவமானம்..சனியின் பார்வைக்கு பரிகாரம் என்ன?
சென்னை: சனி பகவான் இருக்கும் இடத்தை விட பார்க்கும் இடம் பாழ் என்று சொல்வார்கள். சுத்தம் இல்லாத குப்பைகள் நிறைந்த இடம் சனி பகவானுக்கு அதிகம் பிடிக்கும். அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி பகவான் நீங்காமல் நிரந்தரமாக இருப்பார். சனி பகவானின் தீய பார்வையில் இருந்து தப்பிக்க வேண்டும் என்று பலரும் நினைப்பார்கள். சனிபகவான் யாரை அசிங்கப்படுத்தி அவமானப்படுத்தி தண்டனை தருவார் என்று பார்க்கலாம். அஷ்டமத்துசனி, ஏழரை சனியால் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்.
நவ கிரகங்களில் சனி கிரகம் மிக மெதுவாக நகரும் கிரகம். இரண்டரை ஆண்டுகாலம் ஒருவரின் ராசியில் தங்கியிருந்து நல்லதும் கெட்டதுமாக பலன்களை கொடுப்பார் சனிபகவான். சனி பெயர்ச்சியை எல்லோரும் ஒருவித அச்சத்தோடும் ஆர்வத்தோடும் எதிர்பார்த்துக்கொண்டிருப்பார்கள். சனியின் பார்வை படும் இடம் பாழ் என்று சொல்வார்கள். அதே நேரத்தில் நல்ல மனம் படைத்தவர்கள், உதவி செய்யும் குணம் கொண்டவர்களை சனிபகவான் தண்டிக்க மாட்டார்.

கடகம்:
உங்களை அஷ்டமத்து சனி ஆட்டிப்படைக்கிறார். தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும் கணவன் - மனைவி இடையே பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். வழக்குகள் சாதகமாகும். எடுக்கும் முயற்சிகள் ஆரம்பத்தில் தடையேற்பட்டாலும் இறுதியில் எதிர்பாராத வெற்றிகள் கிடைக்கும். கொடுத்த பணம், பொருட்கள் சற்று தாமதமானாலும் வந்து சேரும். தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்பது நல்லது, புதிய முயற்சிகளில் இறங்கி வெற்றி பெற பாடுபட வேண்டி இருக்கும். உடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு வேலை மாற்றம், திருமணம் போன்ற சுப காரியங்கள் இனிதே நடக்கும். புதிய தொழில்கள் தொடங்குவதற்கு முன் நன்கு ஆலோசிக்க வேண்டும். கிடைத்த வேலையை திருப்திகரமாக செய்து வரவும். வேறு வேலை மாறும் முன் நன்கு ஆலோசித்து செய்யவும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்களும் வேதனைகளும் ஏற்படும். பெண்கள் தங்கள் உடல் நலனில் அக்கறை காட்டவும். கடன் பிரச்னை தீரும். சளித்தொந்தரவு, காய்ச்சல், பல் வலி, கண்ணில் குறைபாடுகள் வந்து நீங்கும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.
சிம்மம்:
சனிபகவான் கண்டச்சனியாக கவலைக்கு ஆளாக்கி வருகிறார். உங்கள் செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். சகோதரர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். தாயாரின் உடல் நிலை சீராகும். ஒரு சிலருக்கு வீடு, மனை, வண்டி, வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க சந்தர்ப்பம் அமையும். சிலர் வேலை விசயமாக குழந்தைகளை விட்டு பிரிய நேரிடும் அல்லது அவர்கள் உங்களை விட்டு பிரிவார்கள். பொறுப்பும் குடும்ப பாரமும். தானாகவே வந்து உங்கள் தலையில் உட்கார்ந்து கொள்ளும். சுபகாரியங்கள் நடக்க சற்று போராட வேண்டி இருக்கும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. அடிவயிற்றில் பிரச்சனை, நரம்பு சம்பந்தமான பிரச்சனை ஏற்படாமல் பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். சிலருக்கு காதல் மலரும் திருமணம் நடைபெறும்.
விருச்சிகம்:
சனி தற்போது அர்த்தாஷ்டம சனியாக இருக்கிறார். ஏப்ரல் மாதத்திற்கு மேல் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக இருக்கும். புதிய விஷயங்களைக் கற்க சந்தர்ப்பம் அமையும். எதிர்பார்த்த செய்திகள் சாதகமாக வந்து சேரும். புதிய ஆடை, ஆபரணங்கள், வண்டி வாகனங்கள் வந்து சேரும். வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கவும். வேலைக்கு ஏற்ற ஊதிய உயர்வும் கிடைக்கும். கையில் பணப்புழக்கம் சரளமாக இருக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பும், லாபமும் கிடைக்கும். ஏற்றுமதி இறக்குமதி, தகவல் தொடர்பு துறைகளில் லாபம் அதிகரிக்கும். தங்க நகைகளை கவனமாகக் கையாளுங்கள். குழந்தைகளின் வருங்காலம் குறித்து ஒரு வித பயம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களைக் ஆலோசிக்காமல் எந்த ஒரு முக்கிய முடிவும் எடுக்க வேண்டாம். பாதிப்புகள் குறைய ஆஞ்சனேயரை வணங்க நன்மைகள் நடைபெறும்.
மகரம்:
ஏழரை சனியில் பாத சனி காலமாகும். தற்போது சனி பகவான் இரண்டாவது வீட்டில் பயணம் செய்கிறார். வக்ர மடைந்து பின்னோக்கி செல்லும் போது எதிர்பாராத தனவரவும் பொருள் வரவும் கிடைக்கும். முன்னோர்கள் சொத்து கணவன் அல்லது மனைவி மூலம் வருமானம் வந்து சேரும். கொடுத்த பணம் வட்டியுடன் வந்து சேரும். வீடு, மனை, வண்டி வாகனங்களை முதலில் கொடுத்து விட்டுப் பின்னர் புதிதாக வாங்க சந்தர்ப்பம் அமையும். சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெற சந்தர்ப்பம் அமையும். திடீர் திருப்பங்கள் ஏற்படும். குடும்பத்தோடு புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். பணியிடங்களில் வேலைப்பளு ஏற்படும். திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்திற்கு சென்று வணங்கி வர பாதிப்புகள் தீரும்.
கும்பம்:
ஜென்ம ராசியில் சனி பகவான் சஞ்சரிக்கிறார். வக்ரமடைந்து சனிபகவான் பின்னோக்கி செல்வதால் ஒரு சிலருக்கு கூட்டுத் தொழில் செய்ய வாய்ப்பு அமையும். உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். ஏற்றுமதி இறக்குமதி நல்ல லாபம் கிட்டும். முதலாளி என்ற அந்தஸ்தை ஒரு சிலருக்கு கொடுக்கும். வெளிநாடு செய்திகள் சாதகமாக இருந்து வரும். தாய்மாமன்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். வெளி வட்டாரப் பழக்க வழக்கங்கள் சாதகமாகவும் அவர்களால் நன்மையும் ஏற்படும். திருமணம் நடைபெறாதவர்களுக்கு திருமணம் கைகூடி வரும். விலையுயர்ந்த பொருள்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளவும். யாரையும் நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
மீனம்:
சனி உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானத்தில் இருக்கிறார். வக்ரமடைந்து பின்னோக்கி செல்வதால் இதுவரை வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். விரும்பிய இடத்தில் வேலை கிடைக்கும். இடம், வீடு, வண்டி, வாகனங்கள் வாங்க வாய்ப்புகள் தாமகவே அமையும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். வெளிநாடு சென்று வர விசா கிடைக்கும். முக்கிய விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் தீர்ப்பு தள்ளிப் போகும். செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களுடன் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி தினத்தில் விளக்கு ஏற்றி வழிபடவும்.
சனிபகவானுக்கு பிடித்த இடம்: உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனி பகவானுக்கு கொள்ளை பிரியம். உடனே பற்றிக் கொள்வார்.
ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனி பகவான்க்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார்.
முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி பகவான் மிகவும் பிடிக்கும். குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனி பகவானுக்கு பிடிக்கும். அவர்களை பிடித்துக்கொள்வார்.
அவமானம்:
மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனி பகவானுக்கு பிடிக்கும். மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சன்டாளர்களை முதலில் ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனி பகவானுக்கு நிகர் சனியே. தாய்க்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார். பொய், களவு, சூது, வாது செய்பவர்களை ஊக்குவித்து, போகாத ஊருக்கு வழிச் சொல்லி, கடைசியில் தனக்கே உரிய பாணியில் தண்டனைத்தர சனி பகவானுக்கு பிடிக்கும்.
பரிகாரம்:
நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பகவான் பாதிப்பதில்லை. பிரதோஷ வழிபாடு செய்பவர்களை சனி பிடிப்பதில்லை. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி பகவான் கருணையுடன் பார்ப்பார். ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி பகவான் நேசிப்பார். ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பகவான் பீடிப்பதில்லை. காகத்திற்கு எள் கலந்த வைத்து வழிபடுபவர்களை சனி பகவான் நெருங்குவதே இல்லை. வலம்புரி சங்குள்ள வீடு சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி பகவான் எதுவும் செய்ய மாட்டார். உடல் சுத்தம் மட்டுமல்லாது மனது சுத்தத்தோடு இருப்பவர்களை சனி தண்டிக்க மாட்டார்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications