Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனி பெயர்ச்சி பலன் 2023: ஆட்டி வைக்கும் அஷ்டம சனி.. கடக ராசிக்காரர்களுக்கு விபரீதமா? ராஜயோகமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்கிறார். சனி பகவானின் பார்வை மேஷம், சிம்மம், விருச்சிகம் ராசிக்காரர்களின் மீது விழுகிறது. சனி பகவான் பயணம் பார்வையால் சில ராசிக்காரர்களுக்கு நன்மையும் சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பும் ஏற்படும் என்று ஜோதிடம் சொல்கிறது. கடக ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி விபரீதத்தை தருவாரா? ராஜயோகத்தை தரப்போகிறாரா பார்க்கலாம்.

சனி பார்க்கும் இடம் பாழ் என்பார்கள். சனிபகவான் பார்வை அத்தனை கொடூரமானது என்பார்கள். சனிபகவானால் சிவபெருமானும், ராவணனும் பாதிக்கப்பட்டிருப்பதாக புராணங்கள் கூறுகின்றன. நவகிரகங்களில் சனியைப் பார்த்து பயப்படாதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஒருகால் முடமான சனிபகவான் மெதுவாக நகர்ந்து செல்வார் ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு செல்ல இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. திருநள்ளாறு சனி பகவான் ஆலயத்தில் வரும் டிசம்பர் மாதம் சனி பெயர்ச்சி நிகழப்போகிறது.

Sani Peyarchi Palan 2023: Sani Peyarchi Palan Kadaga rasi Astama Sani effect and remedies

அஷ்டம சனி: கடக ராசிக்காரர்களுக்கு எட்டாம் வீட்டில் அஷ்டம சனியாக பயணம் செய்யப்போகிறார் சனி பகவான். அஷ்டமத்து சனி வரப்போகிறதே என்று அச்சமடையவேண்டாம். உங்க ராசிக்கு எட்டாம் வீட்டு அதிபதி சனி பகவான் எட்டாம் வீட்டில் ஆட்சி பெற்று அமர்ந்து யோகத்தையும் கொடுப்பார்.

பேராசை பெரு நஷ்டம்: அஷ்டம சனி ஆசைகளை தூண்டுவார். எனவே பெரிய அளவில் பணமுதலீடுகளை செய்ய வேண்டாம். பார்க்கும் வேலைகளை விடும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசிக்கவும். இந்த கால கட்டத்தில் புதிய தொழில் எதுவும் தொடங்கவேண்டாம். பேராசை படவேண்டாம். பங்குச்சந்தை முதலீடு தேவையே இல்லை. இருக்கிறதை வைத்துக்கொண்டு சிறப்புடன் வாழுங்கள். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

சனி பார்வை: சனி பகவான் எட்டாம் வீட்டில் அமர்ந்து உங்களுடைய குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார் எனவே குடும்பத்தில் கவனம் தேவை. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். யாராவது பணம் கடன் கேட்டு வந்தால் ஜாக்கிரதையாக இருங்கள் அவசரப்பட்டு கொடுத்து விட்டு அவதிப்பட வேண்டாம். சனிக்கிழமையன்று ஏழைகள் முதியவர்களுக்கு அன்னதானம் கொடுங்கள். புதன்கிழமை பெருமாள் ஆஞ்சநேயரை வணங்க நன்மைகள் நடைபெறும்.

எச்சரிக்கை தேவை: அரசாங்க வேலையில் இருப்பவர்கள் வேலையில் கவனம் தேவை. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. எதிலும் நிதானமாக கையாளுதல் வேண்டும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலைக்காக அவசரப்பட்டு வேலையை விடக்கூடாது. பங்கு சந்தை முதலீடுகளில் அதிக கவனம் தேவை. சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். பெண்கள் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.

சனி தரும் பாடம்: உங்கள் ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5வது வீட்டில் சனிபகவான் பயணம் செய்கிறார். பிள்ளைகள் விசயத்தில் கவனம் தேவை. டீன் ஏஜ் பிள்ளைகள் தடம்மாற வாய்ப்பு உள்ளது. குழந்தைகளை எச்சரிக்கையாக கண்காணியுங்கள். செலவுகளில் சிக்கனம் தேவைப்படும். பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும். அதிக கடன் வாங்க வேண்டாம்.

பொறுமை அவசியம்: பயணங்களில் நிதானம் தேவை. பெண்களே அஷ்டமத்து சனி காலத்தில் எதையும் பொறுமையாக கையாளுங்கள். கூர்மையான பொருட்களை கவனமாக கையாளுங்கள். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். லேசான உடல் நலப்பிரச்சினைகளையும் கண்காணித்து மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். பேசும் வார்த்தைகளில் கவனமும் நிதானமும் தேவை. கணவன் மனைவி இடையே பிரச்சினை வரலாம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

பரிகாரம்: சனி பகவானால் ஏற்படும் சங்கடங்கள் தீர சிவ ஆலயம் சென்று நவகிரக சனிபகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி வர அஷ்டம சனியின் தாக்குதலிருந்து எளிதில் மீண்டு வரலாம். பெற்றோர்களின் உடல்நலனில் அக்கறை காட்டுவது அவசியம். அமாவாசை நாளில் குல தெய்வத்தை வழிபட நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+