சனி பெயர்ச்சி பலன் 2023: கண்டச்சனி காலம்.. தேடி வரும் சச மகா யோகம்.. சனி கொடுக்கும் ஜாக்பாட்
சென்னை: சனிபகவான் சிம்ம ராசிக்கு நேர் எதிரே ஏழாம் வீட்டில் கண்டச்சனியாக பயணம் செய்கிறார். சனிபகவானின் பார்வையும் கிடைக்கிறது. சச மகா யோகம் தேடி வரப்போகிறது. வரும் டிசம்பர் மாதம் திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் சனி பெயர்ச்சி விழா நடைபெற உள்ள நிலையில் கண்டச்சனியால் பாதிக்கப்பட்டுள்ள சிம்ம ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சிம்மம்: சனி பகவான் சிம்ம ராசிக்கு ஆறு மற்றும் ஏழாம் வீட்டிற்கு அதிபதி என்பதால் கண்டச்சனி காலத்தில் பாதிப்புகளை விட அதிக நன்மையே நடைபெறும். ஒருவருடைய ஜனன கால ஜாதகத்தில் சனி, துலாம், மகரம் மற்றும் கும்பம் ஆகிய வீடுகளில் அமர்ந்துள்ள நிலையில், அந்த வீடுகள் லக்னம் அல்லது ராசி ஆகியவற்றுக்கு 1,4,7,10 என்ற கேந்திர ஸ்தானங்களாக அமைந்திருந்தால் இந்த யோகம் ஏற்படுகிறது.

கண்டச்சனி: சனி பகவான் சிம்ம ராசிக்காரர்களுக்கு கண்டச்சனியாக 30 மாதங்கள் சஞ்சரிக்கிறார். சனி யோகமான கிரகம் இல்லை என்றாலும் இந்த சனி பெயர்ச்சியால் வேலை செய்யும் இடத்தில் தலைமை பதவியை தருவார். சனி பகவான் அவிட்டம், சதயம், உத்திராடம் நட்சத்திரங்களில் பயணிக்கும் போது அதற்கேற்ப நன்மைகளை தருவார்.
பதவி உயர்வு: வேலையில் புரமோசன் கிடைக்கும். இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். விசா கிடைக்கும். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உயர்வு கிடைக்கும். சனியின் பார்வை சிம்ம ராசியின் மீது விழுவதால் பாதிப்பு குறையும். ஏழுக்கு உடையவன் ஏழில் இருப்பதால் திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும். வீட்டிலோ வெளியிடங்களிலோ தேவையில்லாத பேச்சுக்களை பேச வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
தலைமைப் பதவி: கண்டச்சனியாக இருந்தாலும் சச மகா யோகம் தேடி வருகிறது. அரசியல் அரசாங்க துறையில் உள்ளவர்களுக்கு யோகம். தலைமைப்பதவி தேடி வரும் தொழில் அற்புதமாக இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் சனி பயணம் செய்யும் போது தொழில் வேலையில் இடமாற்றம் ஏற்படும். யோகங்கள் அதிகரிக்கும் காரணம் சனியின் பார்வை உங்கள் மீது விழுவதால் பாதிப்புகள் அதிகம் இருக்காது.
ஆரோக்கியத்தில் அக்கறை: ஒன்பதாம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் ஆரோக்கியத்தில் கவனம், தேவை. கடன் வாங்கி வீடு வாங்குவீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். கணவன் மனைவி உறவில் கவனமாக இருக்கவும். உடல் நலனில் அக்கறை தேவை. பயணங்களிலும் கவனம் தேவை. வண்டி வாகனம் வாங்குவீர்கள். இருக்கும் இடத்தை மாற்றுவீர்கள். எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ளுங்கள் ஏமாற்றங்கள் வராது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications