செப்டம்பர் மாத ராசிபலன் 2019: சிம்மம் ராசிக்கு வருமானம் கொட்டப்போகுது
சிம்மம் ராசிக்காரர்களே... செப்டம்பர் மாதம் வாழ்வின் துன்பத்தை தொலைத்து விட்டோம் என்று பாடப்போகிறீர்கள். காரணம் கிரகங்களின் சஞ்சாரம் கூட்டணி உங்களுக்கு அதி அற்புதமாக அமைந்துள்ளது.
Recommended Video
சென்னை: செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்ம மாதத்தில் பாதி நாட்களும் கன்னி மாதத்தில் பாதி நாட்களும் சஞ்சரிக்கிறார். மாத முற்பகுதியில் சிம்ம ராசியில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன், என நான்கு கிரகங்களின் கூட்டணி அமைந்துள்ளது. மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. மாத பிற்பகுதியில் கன்னியில் நான்கு கிரகங்கள் கூட்டணி அமைக்கின்றன. செப்டம்பர் பிற்பகுதியில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். நான்காம் வீட்டில் சஞ்சரிக்கும் குரு, ஐந்தாம் இடத்து சனியால் சிம்மம் ராசிக்கு செப்டம்பரில் என்ன பலன்கள் என்று பார்க்கலாம்.
கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் செப்டம்பர் 10,11 தேதிகளில் சுக்கிரன், புதன் கிரகங்கள் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. மாத பிற்பகுதியில் சூரியனும் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 25ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசிக்கு நகர்கிறார். சனிபகவானும் நேர்கதியில் சஞ்சரிப்பது சிம்ம ராசிக்கு சுமாரான பலன்களையே தரும்.
சிம்மம் ராசிக்காரர்களுக்கு மாத முற்பகுதியில் சொந்த ராசியில் இணைந்திருக்கும் நான்கு கிரகங்கள் மாத இறுதியில் இரண்டாம் வீடான முயற்சி வாக்கு, குடும்ப ஸ்தானமான கன்னி ராசியில் கூட்டணி சேருகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் மாற்றங்களினால் சிம்மம் ராசிக்காரர்களுக்கு என்னென்ன நடக்கும் பணவருமானம், கல்வி, வேலை வாய்ப்பு எப்படி என்று பார்க்கலாம்.

தைரியம் கூடும்
சிம்மம் ராசிக்கு செப்டம்பர் முதலில் சூரியன் ஆட்சி செவ்வாய் கூடவே புதன் சுக்கிரன் நான்கு ராசிகள் 4ல் குரு ஐந்தில் சனி கேது இருக்கின்றனர். உற்சாகம் சுறுசுறுப்பு கூடும். சிம்ம சூரியன் நினைத்தனை நிறைவேற்ற வைப்பார். திட்டங்களை செயல்படுத்த வைப்பார். சுக்கிரன் காரியங்களை செயல்படுத்துவார். புதன் அறிவை விரிவு படுத்துவார்.

திருமண பேச்சுவார்த்தை
சூரியன் சொந்த வீட்டில் 17 நாட்கள் ஆட்சி பெற்று அமர்வது அற்புதம். ராசி அதிபதி உடன் மூன்று முக்கிய கிரகங்கள் கூட்டணி அமைந்திருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் நல்ல நிலை ஏற்படும். காரணம் ஆரோக்கிய அதிபதி செவ்வாய் பலமான நிலையில் இருக்கிறார். செவ்வாய் தைரியத்தை தருவார். பூமி காரியங்களை வெற்றி பெற வைப்பார். திருமண பேச்சுவார்த்தை சுபமாக முடியும்.

பொருளாதாரம் உயரும்
10ஆம் தேதிக்கு மேல் கிரகங்கள் இரண்டாம் வீட்டிற்கு நகர்கின்றன. சுக்கிரன் கன்னி ராசியில் நீசமடைகிறார் கூடவே 11ஆம் தேதி புதன் ஆட்சி உச்சமடைகிறார். இதனால் சுக்கிரன் நீசபங்கமடைகிறார். வருமானம் அதிகரிக்கும். கடன்கள் கிடைக்கும். கொடுக்கல் வாங்கலில் சுபமாக இருக்கும். 17ஆம் தேதி சூரியன் 2 ஆம் வீட்டிற்கு நகர்கிறார். பொருளாதார ரீதியான வளர்ச்சிக்கு அதிகரிக்கும்.

சுறுசுறுப்பு கூடும்
25ஆம் தேதி செவ்வாயும் இரண்டாம் வீட்டிற்கு நகர்கிறார். நான்கு கிரகங்கள் இரண்டாம் வீட்டில் கூட்டணி அமைப்பது சூப்பர். உற்சாகமான மாதம். வெற்றிகரமான மாதம். நான்காம் வீட்டில் இருக்கும் குரு திருமண பேச்சுவார்த்தைகள் சுபமாக முடியும். மாணவர்களுக்கு உற்சாகமான மாதம், படித்தவை நினைவில் தங்கும், நன்றாக தேர்வு எழுதுவீர்கள். படிப்பில் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். இந்த மாதம் நினைத்ததை செய்யக்கூடிய ஆற்றலை தரும் மாதம்.

மதிப்பு மரியாதை கூடும்
விருச்சிகத்தில் இருக்கும் குருவை சிம்மத்தில் இருக்கும் செவ்வாய் பார்க்கிறார். வீடு கட்டுவது, சொத்து வாங்குவது என பல அற்புத பலன்களை தருவார். 11ல் லாப ஸ்தானத்தில் இருக்கும் ராகு வருமானத்தை பெருக்குவார். கேது பகவான் ஐந்தாம் வீட்டில் கேது வீட்டில் இருப்பதால். சுக்கிரனால் சாதகமில்லை என்றாலும் சூரியன், புதன் செவ்வாயால் மாத இறுதியில் வருமானம் பெருகும். பொருளாதார மேம்பாடு கிடைக்கும். உங்களின் பலம் அதிகரிக்கும். அதே நேரத்தில் உங்களின் கையிருப்பு கரையும். லாபங்கள் குறையும். செல்வாக்கு மட்டுமல்ல சொல்வாக்கும் அதிகரிக்கும்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications