Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செப்டம்பர் மாத ராசிபலன் 2019: துலாம் ராசிக்கு லாபமும் கூடவே செலவும் வரும்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    24-08-2019 இன்றைய ராசி பலன்- வீடியோ

    சென்னை: செப்டம்பர் மாதத்தில் சூரியன் சிம்ம மாதத்தில் பாதி நாட்களும் கன்னி மாதத்தில் பாதி நாட்களும் சஞ்சரிக்கிறார். மாத முற்பகுதியில் சிம்ம ராசியில் சூரியன், சுக்கிரன், செவ்வாய், புதன், என நான்கு கிரகங்களின் கூட்டணி அமைந்துள்ளது. மிதுனத்தில் ராகு, விருச்சிகத்தில் குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்கள் சஞ்சாரம் உள்ளது. மாத பிற்பகுதியில் கன்னி ராசியில் நான்கு கிரகங்கள் கூட்டணி அமைக்கின்றன. செப்டம்பர் பிற்பகுதியில் சனி வக்ர நிவர்த்தி அடைகிறார். லாப ஸ்தானத்திலும், விரைய ஸ்தானத்திலும் சஞ்சரிக்கும் கிரகங்களினால் துலாம் ராசிக்கு செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

    கிரகங்களின் இடப்பெயர்ச்சியை பார்த்தால் செப்டம்பர் 10,11 தேதிகளில் சுக்கிரன், புதன் கிரகங்கள் கன்னி ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. மாத பிற்பகுதியில் சூரியனும் கன்னி ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். 25ஆம் தேதி செவ்வாய் கன்னி ராசிக்கு நகர்கிறார். சனிபகவானும் நேர்கதியில் சஞ்சரிப்பது துலாம் ராசிக்கு யோகமான கால கட்டம்

    துலாம் ராசிக்காரர்களுக்கு மாத முற்பகுதியில் லாப ஸ்தானத்தில் இணைந்திருக்கும் நான்கு கிரகங்கள் மாத இறுதியில் விரைய ஸ்தானமான கன்னி ராசியில் கூட்டணி சேருகின்றன. இந்த கிரகங்களின் கூட்டணி மற்றும் மாற்றங்களினால் துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதம் என்னென்ன நடக்கும் பண வருமானம், கல்வி, வேலை வாய்ப்பு திருமண முயற்சி எப்படி என்று பார்க்கலாம்.

    லாபம் அதிகரிக்கும்

    லாபம் அதிகரிக்கும்

    துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி வரை லாப ஸ்தானத்தில் சூரியன், சுக்கிரன், புதன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் உள்ளன.
    தன ஸ்தானத்தில் குரு இருப்பதால் வருமானமும் முதலீட்டில் லாபமும் அதிகம் நடக்கும். நல்லதொரு மாற்றம் நடக்கும். இந்த மாதம் அற்புதமான மாதம் யோகங்கள், லாபங்களை தரும் மாதம் முன்னேற்றம் இருந்தாலும் செலவுகளும் வரும். 10ஆம் தேதி வரை சாதகமான சூழ்நிலை உள்ளது.

    அற்புதமான மாதம்

    அற்புதமான மாதம்

    மூத்த சகோதர சகோதரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். பதவி உயர்வு, இடமாற்றத்தை கொடுக்கும். கல்வியில் முக்கிய சக்தியை கொடுப்பார் புதன். வீடு மாற்ற, இடம் வாங்க நல்ல நேரம்.ராசி அதிபதி லாப ஸ்தானத்தில் அமர்ந்துள்ளார். 10ஆம் தேதிக்கு மேல் செலவுகள் கூடும். தேவையில்லாத விசயங்களில் தலையிட வேண்டாம். வாக்கு ஸ்தானத்தில் குரு நேர்கதியில் செல்கிறார். கொடுக்க வாக்கை காப்பாற்றுவீர்கள். சேமிப்பு கூடவே தன வரவு அதிகரிக்கும். செலவுகளை கட்டுப்படுத்தினால் அற்புதமான மாதமாக அமையும்.

    திருமண பேச்சுவார்த்தை

    திருமண பேச்சுவார்த்தை

    தடைகள் நீங்கும் தடுமாற்றங்கள் சரியாகும். குரு 2 ஆம் இடத்தில் இருப்பதால் ஏதாவது ஒரு வகையில் பணம் வந்து கொண்டே இருக்கும். குரு குடும்பத்தில் இருப்பதால் திருமண பேச்சுவார்த்தை நன்மையை தரும். பிரச்சினைகள் தீரும். வீட்டு செலவிற்குத் தேவையான கடனை வாங்குவீர்கள். சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கும். எந்த செயல் செய்வதென்றாலும் 10ஆம் தேதிக்கு முன்பாக முடிவு செய்து விடுங்கள்.

    செலவுகள் கூடும்

    செலவுகள் கூடும்

    10ஆம் தேதி ராசிநாதன் சுக்கிரன் நீசமடைகிறார். 11ஆம் தேதி புதன் ஆட்சி உச்சம் அடைகிறார். 17ஆம் தேதிக்கு மேல் கன்னி ராசியில் சூரியன் இணைகிறார். விரைய ஸ்தானத்தில் கோள்கள் இணைவது செலவுகளையும் விரையத்தையும் தரும். செலவுகளை செய்வீர்கள். சனி ராசிக்கு மூன்றாம் வீட்டில் வக்ர நிவர்த்தி அடைகிறார். 18ஆம் தேதிக்கு மேல் உறவினர்கள் சகோதரர்களிடம் இடைவெளி விட்டு பழகுகள்.

    வழக்குகள் சாதகமாகும்

    வழக்குகள் சாதகமாகும்

    மாணவ மாணவிகளுக்கு மறதிகள் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். இதுவரை உங்களுக்கு இருந்த பிரச்சினைகள் விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். பிள்ளைகள் ஒத்துழைப்பு தருவார்கள். குருவின் சுபப்பார்வையால் நன்மைகள் அதிகரிக்கும். வம்பு வழக்குகள் சாதகமாக மாறும்.
    கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவுக்கு வரும். 25ஆம்ஆம் தேதிக்கு மேல் செவ்வாய் ராசி மாறி விரைய ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் கவனம் தேவை.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+