Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சனிப்பெயர்ச்சி 2020: அர்த்தாஷ்டம சனி ஆட்டி வைக்குமா? கண்டச்சனி கலங்க வைக்குமா

சனிபகவான் 2020ஆம் ஆண்டில் இருந்து கடகம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனியாக சஞ்சரிக்கிறார். துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனியாக சஞ்சரிக்கிறார் இதனால் என்ன பாதிப்புகள் ஏற்படும் பரிகாரம் என்ன என்று

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி அடுத்த ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி நகர்கிறார். திருக்கணிதப்படி நிகழ உள்ள இந்த சனிப்பெயர்ச்சியால் கடகம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி காலமாகும். அதுவே துலாம் ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி காலமாகும். இந்த கால கட்டத்தில் இரண்டு ராசிக்காரர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

கடகம் ராசிக்கு சனி யோகமான கிரகம் இல்லை இருந்தாலும் சனி பெயர்ச்சியால் சிலருக்கு அலுவலகத்தில் தலைமை பதவியை தருவார். கடகம் ராசிக்காரர்களே உங்களுக்கு கண்டச்சனி காலம் என்றாலும் சனியின் ஏழாம் இட பார்வை உங்க ராசியில் மீது விழுகிறது. இந்த கால கட்டத்தில் பெரிய பாதிப்புகள் எதுவும் இல்லை என்றாலும் முக்கிய முடிவுகள் எதையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். அதிகமாக கடன் வாங்கவோ, பணத்தை யாருக்கும் கடனாக கொடுக்கவோ வேண்டாம்.

துலாம் ராசியில் சனிபகவான் உச்சமடைபவர் என்பதால் அர்த்தாஷ்டம சனியாக இருந்தாலும் எந்த கெடுதலும் செய்யமாட்டார். நான்காம் வீட்டு அதிபதி நான்கில் ஆட்சி பெற்று அமர்வதால் பாதிப்புகள் இருக்காது. சனியின் பத்தாவது பார்வை உங்க ராசி மீது விழுவதால் தொழில் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும்.

 கடகம் பாதிப்பு குறையும்

கடகம் பாதிப்பு குறையும்

சனி பார்வை கடகத்தின் மீது விழுவதால் பாதிப்பு குறையும். வேலை மாற்றம் இடமாற்றத்திற்கு காத்திருப்பவர்களுக்கு 2020ஆம் ஆண்டில் வேலை கிடைக்கும். வெளி நாடு செல்ல விசா கிடைக்கும். வேலையில் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உயர்வு கிடைக்கும். இந்த கால கட்டத்தில் எதிர்பார்ப்பை குறைத்துக்கொள்ளுங்கள் ஏமாற்றங்கள் வராது.

 கடன் கொடுக்காதீங்க

கடன் கொடுக்காதீங்க

கண்ட சனி கால கட்டத்தில் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள் இல்லாவிட்டால் மன அமைதி குறையும்.

 வீண் வம்பு வேண்டாம்

வீண் வம்பு வேண்டாம்

ஏழுக்கு உடையவன் ஏழில் இருப்பதால் திருமணம் தடைகளை தாண்டி நடைபெறும். ஒன்பதாம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் ஆரோக்கியத்தில் கவனம், தேவை. கடன் வாங்கி வீடு வாங்குவீர்கள். சிலருக்கு இடமாற்றம் ஏற்படும். கணவன் மனைவி உறவில் கவனமாக இருக்கவும். தேவையில்லாத பேச்சுக்களை பேச வேண்டாம் விட்டுக்கொடுத்து போங்கள்.

 துலாம் அர்த்தாஷ்டம சனி

துலாம் அர்த்தாஷ்டம சனி

நான்காம் வீடு என்பது சுக ஸ்தானம், இந்த இடத்தில் அமரும் சனிபகவான் உங்கள் ராசியை பத்தாம் பார்வையாக பார்க்கிறார். மூன்றாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை பார்க்கிறார், தனது ஏழாம் பார்வையால் உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்வையிடுகிறார். 4ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும் தொழிலில் நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தும்.

 கடன் தொந்தரவுகள்

கடன் தொந்தரவுகள்

துலாம் ராசிக்காரர்களுக்கு கணவன் மனைவி உறவு உற்சாகமாக அமையும். மகிழ்ச்சி நீடிக்கும். காதல் மலரும் சிலருக்கு திருமணத்தில் முடியும், தடைபட்டு வந்த குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.
இனம் தெரியாத நோய்கள் வந்து போகும் ஏதோ நோய் இருக்குமோ என்று நினைத்து அவதிப்பட நேரிடும். நேரத்திற்கு சாப்பிடுங்கள். இந்த கால கட்டத்தில்
கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். அதற்கான கடன்களை அள்ளிப்போட்டுக்கொள்ளாதீர்கள். கடன்கள் அதிகரித்து கொண்டே போகும். பங்குச்சந்தை முதலீடுகள் முதலில் லாபம் கொடுத்தாலும் பின்னர் நஷ்டத்தில் விட்டு விடும் எச்சரிக்கையாக இருங்கள்.

 சனி சாந்தி ஹோமங்கள்

சனி சாந்தி ஹோமங்கள்

வாலாஜாபேட்டையில் தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரர் ஆலயத்திற்கு சென்று சென்று சனி சாந்தி ஹோமங்களை செய்யலாம். பைரவர் சனி பகவானின் குரு. பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றி வணங்கலாம். சனி தோஷங்கள் நீங்கும். சனிக்கிழமைகளில் காலபைரவருக்கு வெள்ளைப் புதுத்துணியில் மிளகை முடிச்சிட்டு அகல் விளக்கில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருக்கலாம். ஆஞ்சநேயருக்கு நெய் தீபம் ஏற்றி வெற்றிலை மாலை சாற்றி வணங்க வேண்டும். சனியின் வாகனமான காகத்திற்கு சாதம் வைக்கலாம் சனியால் ஏற்படும் பாதிப்புகள் குறையும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+