சுக்கிரன் பெயர்ச்சி 2020: சுக்கிரனால் இந்த ராசிக்காரங்க வீட்ல ஒரே ரொமான்ஸ்தான்

மீனம் ராசியில் உச்சமடைந்திருக்கும் சுக்கிரன் மேஷம் ராசியில் இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். சுக்கிரனின் பயணம் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கு என்ன பலன்களை தரப்போகிறது என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் சுக்கிரன் அசுர குரு. சுக்கிரன் காதல் நாயகன் காம உணர்வுகளை தூண்டுபவர். செல்வத்தையும் செல்வாக்கையும் அருள்பவர். சுகங்களை தரக்கூடியவர் சுக்கிரன். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் ரிஷபம், துலாம் ராசியின் ஆட்சி நாயகன். கன்னி ராசியில் நீசமடையும் சுக்கிரன், மீனம் ராசியில் உச்சமடைகிறார். இதுநாள் வரை உச்சநிலையில் இருந்த சுக்கிரன் இனி மேஷம் ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். இந்த சுக்கிரப்பெயர்ச்சியால் சுகமடையப்போவது யார்? யாருடைய வீட்டில் காதலும் நெருக்கமும் அதிகமாகும் என்று பார்க்கலாம்.

சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. களத்திரகாரகன் சுக்கிரன் வாழ்க்கைத் துணையை அமைத்துக் கொடுப்பவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும்.

இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. ஒவ்வொரு மாதமும் சுக்கிரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு சுகபோகங்களை அள்ளித்தரும். சில ராசிக்காரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 2019ஆம் ஆண்டு ஜனவரி முதல் நாளில் நிகழ உள்ள சுக்கிர பெயர்ச்சி எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் குடியேறப்போகிறார். முகத்தில் பொலிவும் அழகும் கூடும். உற்சாகமாக இருப்பீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். காரணமான உணவுகளை சாப்பிடாதீங்க. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வணங்கலாம்.

ரிஷபம்

ரிஷபம்

சுக்கிரன் உங்க ராசி நாதன். உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமாக 12வது வீட்டில் சுக்கிரன் குடியேறியுள்ளார். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சுப விரைய செலவு ஏற்படும். வீட்டிற்குத் தேவையான டிவி பிாிட்ஜ் ஏசி உள்ளிட்ட ஆடம்பர பொருட்கள் வாங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடைபெறும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். காதல் வாழ்க்கையில் துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். மாணவர்கள் சிலர் படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள். வெள்ளிக்கிழமைகளில் சிவ ஆலயத்திற்கு தயிரும் சர்க்கரையும் வாங்கித்தர செல்வம் பெருகும்.

மிதுனம்

மிதுனம்

சுக்கிரன் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்கிறார். மண வாழ்க்கையில் மகிழ்ச்சி பொங்கும் மாதம் இது. அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். வசந்த கால துவக்கத்தில் உங்க வாழ்க்கையில் வசந்தம் வீசப்போகிறது. உங்களுக்கு இந்த மாதம் பண வருவாய் அதிகாிக்கும். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்க கவலைகள் மறையப்போகிறது. வெள்ளியால் செய்த கொலுசு மெட்டி போன்றவைகளை வாங்கி தானம் கொடுக்க நன்மைகள் அதிகமாகும்.

கடகம்

கடகம்

கடகம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். பத்தில் சுக்கிரன் சுகமான பதவியை கொடுப்பார். சிலருக்கு பதவி உயர்வை கொடுப்பார். தொழில் ஸ்தானத்தில் அமரும் சுக்கிரனால் உங்கள் வேலையில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் உடல் வேலை செய்பவர்களிடம் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு வெல்லம் வாங்கித்தரலாம்.

சிம்மம்

சிம்மம்

சிம்மம் ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். பாக்ய ஸ்தானத்தில் சுக்கிரன் நிறைய பாக்கியங்களை தரப்போகிறார். உங்க வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். குடும்பம், குழந்தைகள், நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான முயற்சி செய்யலாம். சிலருக்கு விசா கிடைக்கும். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தரலாம். பசுமரத்திற்கு தண்ணீர் ஊற்றலாம்.

கன்னி

கன்னி

கன்னி ராசிக்காரர்களே உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். செலவு வருதே என்று கவலை வேண்டாம் பரிகாரம் இருக்கிறது. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு வெள்ளிப்பொருட்கள் வாங்கி பரிசளித்து ஆசிர்வாதம் பெறலாம். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கா மந்திரம் கூறலாம். பசுவிற்கு அகத்திக்கீரை கொடுக்கலாம் பாதிப்புகள் நீங்கும்.

துலாம்

துலாம்

உங்க ராசி அதிபதி காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். காதலான மாதம் இது. வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் விசயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை வந்து விடும். சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம்.

விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களே சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. கவலைகள், சங்கடங்கள் சூழும் காலம் என்பதால் ஸ்படிக மாலை அணிந்து வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்கவும். பசுவிற்கு அரிசி மாவும், வெல்லமும் தானமாக அளிக்கலாம்.

தனுசு

தனுசு

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர்ந்து உள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வது அற்புதமான அம்சம். வருமானத்திற்கான மாதம் இது. காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என்று உற்சாகமாக பாடப்போகிறீர்கள். ஏழரை சனியால் பாதிக்கப்பட்டிருக்கும் நீங்கள் உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வாழ்க்கைத் துணையுடன் இதே வேகத்தோடு வெளிநாட்டிற்கு இன்ப சுற்றுலா சென்று வாருங்கள். வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் விளக்கேற்ற மேலும் நன்மைகள் நடக்கும்.

மகரம்

மகரம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை.வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு மல்லிகை, முல்லை பூக்களை வாங்கித் தரலாம். பெண்கள் வலது விரலில் வைர மோதிரம் அணியுங்கள் தம்பதியர் இடையே நெருக்கம் கூடும்.

கும்பம்

கும்பம்

கும்பம் ராசிக்காரர்களே சுக்கிரன் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உடல் நலனில் சின்னச் சின்ன ஏற்படும். எனவே அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள். சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

மீனம்

மீனம்

மீனம் ராசிக்காரர்களே இதுநாள் வரை உங்கள் ராசியில் உச்சம் பெற்று சஞ்சாரம் செய்து வந்த சுக்கிரன் இனி உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் குடும்பம் வாக்கு ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும் காலமிது. சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று செந்தூரம் வாங்கி தந்து வழிபட மேலும் நன்மைகள் நடைபெறும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+