சிம்ம ராசி அதிசார குரு பெயர்ச்சி பலன் 2021: குரு பார்வையால் குடும்பத்தில் குதூகலம் தேடி வரும்
அதிசார குரு பெயர்ச்சி சிம்ம ராசிக்காரர்களுக்கு யோகங்களைத் தரப்போகிறது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு குடும்பத்தில் குதூகலத்தை தரப்போகிறது.
சென்னை: குரு பார்வை கோடி புண்ணியம் என்பார்கள். அதிசார குரு பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்களுக்கு குருவின் பொன்னான பார்வை கிடைக்கப்போகிறது. குரு பார்வையால் குடும்பம் குதூகலம் அடையப்போகிறது. குருபகவான் ஏப்ரல் 5ஆம் தேதி அதிசாரமாக கும்ப ராசிக்கு பயணம் செய்யப்போகிறார். ஆறாம் வீட்டில் உள்ள குரு பகவான் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்யப் போகிறார். இந்த அதிசார குரு பெயர்ச்சி மற்றும் குருவின் பார்வையால் சிம்ம ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
குரு பகவான் ஒரு ராசியில் ஒராண்டு காலம் பயணிப்பார். சில நேரங்களில் வேகமாக முன்னோக்கி வேறு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். குருவின் இந்த வேகமான பயணமே அதிசார குரு பெயர்ச்சியாகும். காலபுருஷ தத்துவத்தின் படி குரு பகவான் தற்போது பத்தாம் வீடான மகர ராசியில் பயணம் செய்கிறார். அதிசாரமாக சஞ்சரிக்கும் குருபகவான் 11ஆம் வீடான கும்ப ராசியில் பயணம் செய்கிறார். சிம்ம குரு பகவான் 6ஆம் வீட்டில் உள்ள ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்து ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார்.
குருபகவான் பார்வை சிம்ம ராசிக்காரர்களுக்கு ராசியின் மீதும் லாப ஸ்தானம், முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீடுகளின் மீது விழுவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு சாதனைகளும் சந்தோஷங்களும் நிறைந்த அதிசார குரு பெயர்ச்சியாக அமையப்போகிறது.

வெற்றிகரமான குரு பெயர்ச்சி
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த அதிசார குரு பெயர்ச்சியால் சாதனைகள் நிகழப்போகிறது. சவால்களை சாதனைகளாக மாற்றப்போகிறது. எதிர்ப்புகளை பொடிப்பொடியாக்குவீர்கள். குரு பகவான் 161 நாள் உங்கள் ராசிக்கு ஏழாம் வீட்டில் பயணிப்பதால் நிறைய நல்ல காரியங்கள் நடைபெறும். சொந்த வீடு யோகம் கை கூடி வரப்போகிறது. நல்ல வேலை, தொழில் அமையும். பெரிய அளவில் முதலீடுகள் செய்யலாம்.

பண வருமானம்
ஏழாம் வீட்டில் உள்ள குரு உங்க ராசிக்கு லாப ஸ்தானத்தை பார்வையிடுவதால் பொருளாதார தடைகள் நீங்கும். தொழில் வியாபாரம், பங்குச்சந்தை முதலீடுகளில் லாபத்தை தரும். நோய்கள் நீங்கும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். எதிரிகள் தொல்லை நீங்கும்.

காதல் திருமணம்
திருமண தடைகளில் இருந்த தடைகள் நீங்கும். சுப காரியங்கள் நடைபெறும் இந்த மாதத்திற்குள் திருமணம் கை கூடி வரும். காதல் மலரும் வெற்றிகரமாக திருமணம் கை கூடி வரும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினை நீங்கும். ஒற்றுமை அதிகரிக்கும். வேலையில் இருந்த சிக்கல்கள் நீங்கும்.

சகோதரர்களால் சந்தோஷம்
குரு உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டினை பார்வையிடுவதால் உங்களின் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வழியில் சந்தோஷம் ஏற்படும். உங்களின் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும். பொருளாதாத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கும். சகோதரர்களிடம் இருந்த சந்தோஷம் அதிகரிக்கும்.

குரு பார்வையால் நன்மை
குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. கடந்த காலங்களில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சமூகத்தில் மதிப்பு மரியாதை உயரும். அந்தஸ்து அதிகரிக்கும். பெயர் புகழ் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த குறைகள் நீங்கி குதூகலம் அதிகரிக்கப் போகிறது.
-
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா?












Click it and Unblock the Notifications