• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கந்த சஷ்டி கவசம் படிங்க கொரோனாவில் இருந்து மக்களை முருகன் காப்பார்

|

சென்னை: நோய், பில்லி சூன்யம், வறுமை, வம்ச விருத்தி சிக்கல், மனநலம், தீரா கவலை உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து கந்தன் மக்களை காக்கும் பாடலாக கந்தசஷ்டி கவசம் பாடப்படுகிறது. கொரோனா அச்சம் மக்களை பீடித்துள்ள நிலையில் நாள்தோறும் கந்தசஷ்டி கவசம் படிங்க அது நோய் பாதிப்புகளில் இருந்து மக்களை காக்கும். கடந்த இரண்டு மாதங்களாக தமிழகத்தில் வாழும் கலை இயக்கம் சார்பில் , பள்ளிகளில் ஆரம்பித்து பல ஆயிரும் மக்கள் கந்த சஷ்டி கவசத்தை கூட்டு வழிபாட்டில் பாடியுள்ளனர். சஷ்டி கவசம் படிப்பதால் சங்கடங்கள் மட்டுமல்ல நோய்களும் நீங்கும் என்பது நம்பிக்கை.

  'கொரோனா... இன்று!' 'ஒன் இந்தியா' டெய்லி ஸ்பெஷல் அப்டேட்!

  திதிகளில் முருகப்பெருமானுக்கு உகந்தது சஷ்டி திதி. சஷ்டி என்பது அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஆறாம் நாள். ஜாதகத்தில் ஆறாம் இடம் ரோகம், கடன், விரோதம், சத்ரு, போன்றவைகளைக் குறிக்கும். செவ்வாய் ரோகக் காரகன். இந்த எல்லா தோஷத்தைப் போக்கும் பெருமான் திரு முருகப் பெருமான். கந்த சஷ்டி கவசம் நம்மைத் தீமைகளிலிருந்தும் கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றும். சஷ்டியை நோக்க எனத் தொடங்கும் இந்த சஷ்டி கவசத்தை தினம் காலையிலும் மாலையிலும் படிப்பதோடு வீடுகளிலும் ஒலிக்கச் செய்தால் அந்த முருகன் அருளினால் நோய் நொடிகள் நீங்கும்.

  உலகமே கொரோனா வைரஸ் பிடியில் சிக்கியுள்ளது. உயிரை காக்க மருத்துவர்களை கடவுளாக நம்பினாலும் கடவுளே கதி என்று சரணடைந்து விட்டனர். அமெரிக்கா, ஐரோப்பிய நாட்டு மக்களும் இறை நம்பிக்கைக்கு திரும்பியுள்ளனர். மருந்தில்லா நோய்க்கு அந்த தெய்வம்தான் துணை என்றாகி விட்டது.

  "முருகனைக் கூப்பிட்டு முறையிட்ட பேருக்கு முற்றிய வினை தீருமே! உடல் பற்றிய பிணி ஆறுமே! வாழ்க்கை முற்றிலுமே நலம் பெற்று இனிதுற

  மெத்த இன்பம் சேருமே.." என்று முருகனை நினைத்து பாடினால் தீரான நோய்களும் தீரும்.

  நோய் தீர்க்கும் சஷ்டி கவசம்

  நோய் தீர்க்கும் சஷ்டி கவசம்

  தமிழகம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு முன்பு இருந்தே பள்ளிகளில் சஷ்டி கவசம் ஒலிக்க ஆரம்பித்து விட்டது. என்றால் ஆறு, கவசம் என்றால் பாதுகாப்பு. நோய், பில்லி சூன்யம், வறுமை, வம்ச விருத்தி சிக்கல், மனநலம், தீரா கவலை உட்பட 6 வகையான கொடும் பிணிகளில் இருந்து கந்தன் மக்களை காக்கும் பாடலாக அது கொள்ளபட்டது. கந்தன் கருணைக்கடவுள். நோய் நீக்க அந்த கந்தனே வைத்தியம் செய்துள்ளார். அக்காலத்தில் நோய்கள் பரவும் காலத்தில் இல்லம் தோறும், ஆலயம் தோறும் அதை பாடுவார்களாம் கந்த சஷ்டி கவசத்தில் ஒவ்வொரு வரியும் அர்த்தம் கொண்டது.

  உச்சி முதல் உள்ளங்கால் வரை

  உச்சி முதல் உள்ளங்கால் வரை

  முருகன் ஆலயம் என்பது உடல் நலம் பெற வேண்டிய இடம் என்பது எக்காலமுமான நம்பிக்கை, அதனால் சூழலும் அப்படி இருக்குமாறு பார்த்து பார்த்து கட்டினார்கள். முருகனை வேண்டினால் உடல் நலம் பெறலாம் என்பதை எல்லா ஞானிகளும் மகான்களும் முருகன் அடியார்களும் சொல்லி வைத்தார்கள்

  வரலாற்றில் அது உண்மை, முருகனை தொழுதோர் பலர் நீண்ட நெடிய வாழ்வு வாழ்ந்தவர்களே கண்முன்னே சாட்சிகள் ஏராளம் ஒவ்வொரு உறுப்புக்கும் ஒவ்வொரு வேல் பெயரை சொல்லி காவல்தேடும் பாடல் அது. உச்சி முதல் பாதம் வரை ஒவ்வொன்றாக தியானித்து முருகனிடம் நலம்பெற சொல்லும் மருத்துவ தியான பாடல்தான் கந்த சஷ்டி கவசம்.

  ஆறுமுக கடவுள்

  ஆறுமுக கடவுள்

  சஷ்டி என்றால் ஆறு, முருகனுக்கோ ஆறு முகங்கள், சரவணபவ என்று ஆறு அட்சரம், ஆறு படை வீடுகள், ஆறு கார்த்திகைப் பெண்ணால் வளர்க்கப்பட்டவர். கந்தனின் திருவடியை விடாது பிடித்தால் அனைத்து தோஷங்களும் நீங்கும் ஒரு கெடுதலும் அண்டாது. வீட்டில் கடன், வியாதி, சத்ரு பயம் இல்லை என்ற நிலை ஏற்படும். கந்த சஷ்டி கவசம் பாடினால் மனதில் இருக்கும் பயம் அகலும், எதிரிகள் விலகுவர், வெற்றியை தேடித் தரும். இந்த பாடலை தினமும் பாடலாம். கந்த சஷ்டி கவசத்தை அருளியவர் ஸ்ரீதேவராய சுவாமிகள் இவர் பெரிய முருக பக்தர், ஒவ்வொரு மூச்சிலும் முருகனையே சுவாசித்தார். அவர் மிகவும் எளிய முறையாக நமக்கு கவசம் அளித்துள்ளார்.

  பில்லி, சூனியம் காக்கும்

  பில்லி, சூனியம் காக்கும்

  சஷ்டி கவசம் படித்தால் பில்லி, சூன்யம், பெரும் பகை, வல்லபூதம், பேய்கள், அடங்காமுனி, கொள்ளிவாய்ப் பிசாசு, குறளைப் பேய்கள், பிரும்ம ராட்சசன், இரிசி காட்டேரி, இவைகள் அத்தனையும் முருகன் பெயர் சொன்னாலே ஓடி ஒளிந்து விடும். மாயாஜால மந்திரம், இவைகள் எல்லாம் சஷ்டி கவசம் படித்தால் செயல் இழந்து விடும்.

  வியாதிகள் நீங்கும்

  வியாதிகள் நீங்கும்

  புலியும் நரியும், எலியும் கரடியும், தேளும் பாம்பும் செய்யான், பூரான், இவைகளால் எற்படும் விஷம் சஷ்டி கவச ஓசையிலேயே இறங்கி விடும் என்கிறார்.நோய்களை எடுத்துக்கொண்டால் வலிப்பு, சுரம், சுளுக்கு, ஒத்த தலைவலி, வாதம், பைத்தியம், பித்தம், சூலை, குடைச்சல், சிலந்தி, குடல் புண், பக்கப் பிளவை போன்ற வியாதிகள் இதனைப் படித்தால் உடனே சரியாகி விடும்.

  மக்களை காக்கும் கவசம்

  மக்களை காக்கும் கவசம்

  கொரோனா வைரஸ் என்னும் கொள்ளை நோயின் அச்சத்தில் மக்கள் இருக்கும் இந்த நேரத்தில் தினம், தினம் கந்த சஷ்டி கவசம் படித்து வேலனைப் போற்றுங்கள் வேதனைகள் எல்லாம் விலகி ஓடிவிடும். தீவினைகள் எல்லாம் மாயமாகி விடும். உலக மக்கள் அனைவரும் கை குலுக்குவதை விடுத்து கை கூப்பி வணக்கம் சொல்ல பழகிவிட்டனர். இனி உலகமெங்கும் தமிழ் கடவுள் முருகனின் சஷ்டி கவசம் ஒலிக்கட்டும்.

   
   
   
  English summary
  Kanda Shasti Kavasam is composed by Devaraya Swamigal. This is a rare and valuable treasure that helps one to be successful in day to day life. Above all, Skanda's grace brings eternal bliss and everlasting peace. Kantasashti Kavacham is not only a devotional literature but a divine gift to Murukan devotees cured of disease
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X