மகாளய அமாவாசையில் 178 ஆண்டுகளுக்குப் பின் நிகழும் அபூர்வ சூரிய கிரகணம்.. யாருக்கெல்லாம் லக்?
சென்னை: 2023ஆம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் நாளை அக்டோபர் 14ஆம் தேதி நிகழ உள்ளது. நீல வானத்தில் நெருப்பு வளையமாக தெரியப்போகும் இந்த சூரிய கிரகணம் சனி அமாவாசை தினத்தில் ஏற்படுவது சிறப்பானது. மகாளய அமாவாசை தினத்தில் 178 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் இந்த சூரிய கிரகண நாளில் நாம் முன்னோர்களுக்கு தரும் தர்ப்பணம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னோர்களின் பசியை போக்குமாம்.
சூரிய கிரகணம்: அக்டோபர் 14 அன்று அரிய நெருப்பு வளைய சூரிய கிரகணம் வானில் தோன்ற உள்ளது. இந்தியாவில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்க முடியாது காரணம் இந்திய நேரப்படி, சனிக்கிழமை இரவு 08.34 மணி முதல் நள்ளிரவு 02.25 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளது. இந்த சூரிய கிரகணம் அமெரிக்காவின் சில பகுதிகள், மெக்சிகோ, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவின் பல நாடுகளில் நெருப்பு வளைய கிரகணமாக தெரியும், இந்த நாடுகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் இந்த அரிய நிகழ்வை காண முடியும். சூரிய கிரகணத்தை நாசா நேரடி ஒளிபரப்பு செய்வதால் உலகின் எந்த மூலையில் வசிப்பவர்களும் நாசா இணைய தளத்தில் காணலாம்.

ஜோதிடத்தில் கிரகணம்: கடந்த 2012ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக வடக்கு, மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் வானில் தோன்ற உள்ளது. இந்த அரிய சூரிய கிரகணம் அடுத்து 2046ஆம் ஆண்டில் தான் பார்க்க முடியும் என தி இன்டிபென்டன்ட் இணைய தளம் தெரிவித்துள்ளது.சூரிய கிரகணம் வானில் தோன்றும் அரிய நிகழ்வாக இருந்தாலும் ஜோதிட சாஸ்திரத்தில் கிரகணத்தை மனித வாழ்க்கையோடு தொடர்புபடுத்தி பலன்கள் கூறப்படுகிறது. இது பித்ரு அமாவாசை எனப்படும் மகாளய அமாவாசை நாளில் நிகழக்கூடிய அரிய சூரிய கிரகணம். 178 ஆண்டுகளுக்குப் பிறகு மகாளய அமாவாசை தினத்தில் இந்த கிரகணம் நிகழ்வதால் இந்த நாளில் நாம் முன்னோர்களுக்கு தரக்கூடிய தர்ப்பணம் பல ஆண்டுகாலத்திற்கு புண்ணியத்தையும் முன்னோர்களின் ஆசியையும் கொடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
மிதுனம்: கன்னி ராசியில் புதன் சூரியன் இணைந்து புதாத்ய யோகம் தரக்கூடியதாக உள்ள நேரத்தில் தாய் காரகமான சந்திரனும் இணைந்துள்ளது. புதன் பகவானை அதிபதியாகக் கொண்ட மிதுன ராசிக்காரர்களுக்கு நான்காம் வீட்டில் கிரகங்கள் இணைந்துள்ளன. இந்த நாளில் பண வருமானம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல செய்தி ஒன்று உங்களை தேடி வரும். பெரிய பொறுப்புகள் வரக்கூடிய நல்ல நாளாக மகாளய அமாவாசை நாள் அமைந்துள்ளது.
சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த சூரிய கிரகண நாளில் பெற்றோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும்.
உங்களின் வருமானம் அதிகரிக்கும். வேலையில் நிம்மதி கிடைக்கும் பாராட்டுகளும் பதவிகளும் தேடி வரும். எதிர்கால முன்னேற்றத்திற்காக திட்டமிடுவீர்கள்.
துலாம்: சனி பகவான் உச்சமடையும் ராசி துலாம். சுக்கிரனை ராசி அதிபதியாக கொண்ட இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு சூரிய கிரகண நாளில் கிரகங்களின் சேர்க்கை 12ஆம் வீடான விரைய ஸ்தானத்தில் கூடியுள்ளது. தொழில் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். நல்ல வருமானம் கிடைக்கும். புரமோசன் தொடர்பான நல்ல செய்திகள் தேடி வரும்.
விருச்சிகம்: இந்த சூரிய கிரகணமும் மகாளய அமாவாசை நாளும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு முன்னோர்களின் ஆசியை வாரி வழங்கப்போகிறது. பண வருமானம் அபரிமிதமாக இருக்கும். வாழ்க்கையில் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் உண்டாகும். உங்களுக்கு இந்த நாளில் நல்ல செய்திகள் தேடி வரப்போகிறது. இந்த நாளில் நீங்கள் செய்யும் பண முதலீடு உங்களுக்கு பல மடங்கு லாபத்தை தரப்போகிறது.
மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய கிரகணம் புதிய வழிகளை காட்டும். மன உளைச்சலில் இருந்தவர்களுக்கு தெளிவான பாதை தென்படும். சனி அமாவாசையில் மறைத்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் தர மறக்காதீர்கள். நிதி நெருக்கடிகளில் இருந்து விடுபடப்போகிறீர்கள்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications