கல்வி வளம் தரும் சரஸ்வதி - விஜயதசமி நாளில் வாணி சரஸ்வதிக்கு மகா அபிஷேகம்
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவராத்திரி, மஹா நவமி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு குழந்தைகள் கல்வி செல்வம் பெறவும், சகல கலைகளிலும் சிறந்து விளங்கவும் கலைமகள்
வேலூர்: பத்மாசனம் எனப்படும் தாமரை மலரில் அமர்ந்து கையில் வீணை ஏந்தியிருக்கும் சரஸ்வதி தேவி, கல்வி அனைத்துக்கும் சொந்தமானவள். ஒலி, இசை, பாடல், ஞானம், மொழி ஆகியவற்றின் வடிவாக இருப்பவள். புத்தி கூர்மை, ஞாபக சக்தி, கல்வியில் வெற்றி போன்ற பலவகை நன்மைகளை தருபவள். ஆய கலைகளுக்கு அதிபதியாகவும், ஞானத்தின் வடிவமாகவும் விளங்குபவள். கலைமகள் ஸ்ரீ சரஸ்வதி தேவியை குறித்து நடைபெறும் ஹோமம் சரஸ்வதி ஹோமம் ஆகும்.

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நவராத்ரி, மஹா நவமி மற்றும் விஜயதசமியை முன்னிட்டு குழந்தகள் கல்வி செல்வம் பெறவும், சகல கலைகளிலும் சிறந்து விளங்கவும் கலைமகள் ஸ்ரீ வாணிசரஸ்வதி தேவியை வேண்டி வருகிற 07.10.2019 திங்கள்கிழமை மஹாநவமியன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை சரஸ்வதி ஹோமமும் ஸ்ரீ வாணி சரஸ்வதிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற உள்ளது. தொடர்ந்து 08.10.2019 செவ்வாய்கிழமை விஜயதசமியன்று காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை அக்ஷராப்யாசமும் விசேஷ பூஜைகளும் நடைபெற உள்ளது.
சரஸ்வதி பூஜை நாளில் ஸ்ரீ சரஸ்வதி தேவியை வழிபடுவதின் மூலம் சிறந்த புத்தி கூர்மை, ஞாபக சக்தி, கலை, கல்வி மற்றும் பிற துறைகளில் சிறந்து விளங்கலாம். மேலும் திறமை மற்றும் நம்பிக்கையை அளிக்கும். இதனால் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியை பெற்று வாழ்க்கையில் முன்னேறத்தையும், பல நன்மைகளையும் அடையலாம். மேலும் நினைவாற்றல் அதிகரிக்கும், அறிவாற்றல் மற்றும் உரையாடல் திறன் பெருகும், வெற்றிக்கான நம்பிக்கை மேம்படும், இலக்குகளை அடைவதற்கான சக்தி பிறக்கும், கல்விப் பயணம் மேன்மையுறும், மாணவர்கள் சிறந்த முறையில் கல்வி பயின்று, தேர்வில் வெற்றி பெற இயலும், இலக்கிய முயற்சிகள் முன்னேற்றம் பெறும், பெருமையும், புகழும் சேரும்.
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த ஹோம பூஜைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு பீடாதிபதி யக்ஞஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் அருளாசிகளை வழங்கி இறை பிரசாதம் வழங்க உள்ளார். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர். தொடர்புக்கு : ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம் அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை - 632 513. வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 - 230033, செல் - 9443330203
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications