சுபகிருது தமிழ் வருட பலன்கள் 2022: ரிஷப ராசிக்காரர்களுக்கு தமிழ் புத்தாண்டு பலன்கள், பரிகாரங்கள்
சுபகிருது தமிழ் புத்தாண்டு பிறக்கப் போகிறது. நவகிரகங்களின் சஞ்சார கூட்டணியால் தமிழ் புதுவருடத்தில் ரிஷப ராசிக்காரர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சென்னை: தமிழ் புத்தாண்டு சுபகிருது புது வருடம் ஏப்ரல் 14ஆம் தேதி பிறக்க உள்ள நிலையில் நவகிரகங்களின் சஞ்சார இடப்பெயர்ச்சியால் ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும், பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
தமிழ் புத்தாண்டு சுபகிருது வருடம் பிறக்கப் போகிறது. 60 தமிழ் வருடங்களில் சுபகிருது வருடம் 36வது ஆண்டாகும்.
தமிழ் புத்தாண்டில் ஆண்டு கோள்களின் சுப கிரகமான குரு பகவான் மீன ராசியில் பயணம் செய்வார். சனிபகவான் மகரம் மற்றும் கும்ப ராசியிலும் பயணம் செய்கிறார். ராகு மேஷ ராசியிலும் கேது துலாம் ராசியிலும் பயணம் செய்வார். சனிபகவான் சித்திரை மாதம் 16ஆம் தேதி ஏப்ரல் 29ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று காலை 7.54 மணிக்கு அதிசாரமாக மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பயணம் செய்கிறார். ஆனி 28ஆம் தேதி ஜூலை 27ஆம் தேதியன்று செவ்வாய்க்கிழமை வக்ர கதியில் மீண்டும் மகர ராசிக்கு திரும்புகிறார். திருக்கணித பஞ்சாங்கப்படி 2023ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி நேர்கதியில் சனிபகவான் கும்ப ராசிக்கு செல்கிறார்.
மாத கோள்களின் சஞ்சாரத்தை பார்த்தால் ஏப்ரல் 14ஆம் தேதி சூரியன் மேஷ ராசியில் தனது பயணத்தை தொடங்க, கூடவே, புதன், ராகு இணைந்திருக்கின்றனர். சிம்ம ராசியில் சந்திரன், செவ்வாய் சுக்கிரன் கும்ப ராசியிலும் பயணம் செய்கின்றனர். இந்த கிரகங்களின் பயணத்தால் மேஷம் ராசியில் உள்ள கார்த்திகை,ரோகிணி, மிருகஷீரிடம் 1,2 ஆம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

ரிஷப ராசி
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு குரு லாப வீட்டிலும் சனி பத்தாம் வீட்டிலும் ராகு விரைய ஸ்தானத்திலும், கேது ஆறாம் வீட்டிலும் பயணம் செய்யப் போகிறார். குருவின் பயணத்தால் நிறைய லாபங்கள் கிடைக்கப்போகிறது. புதிய தொழில் தொடங்கலாம். நீண்ட காலமாக தடைப்பட்ட சுபகாரியம் நடைபெறும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்கள் வாங்கலாம்.

வீடு மனை வாகனம் வாங்கலாம்
குருபகவானின் பார்வை உங்கள் ராசிக்கு மூன்று, ஐந்து, ஏழாம் வீடுகளின் மீது படுவதால் புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர்களின் உதவி கிடைக்கும்.லாபம் கை கூடி வரும். புதிய தொழில் தொடங்கவும் நல்ல நேரம் கை கூடி வந்துள்ளது. புது வீடு கட்டலாம், வீடு கட்டி முடித்தவர்கள் கிரகப்பிரவேசம் செய்யலாம். திருமணம் ஆகி குழந்தைக்காக காத்திருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் கை கூடி வரும். சிலருக்கு திருமணம் பேசி முடிவு செய்யலாம்.

சனியால் சந்தோஷம்
சனிபகவான் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் இருந்து பத்தாம் வீடான தொழில் ஸ்தானத்திற்கு வருகிறார். புதிய வேலை கிடைக்கும். காவல்துறை, தீயணைப்புத்துறை, அரசுத்துறையில் இருப்பவர்களுக்கு பதவியும் பாராட்டும் கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு இது நல்ல காலமாக உள்ளது. படிப்பில் முன்னேற்றம் ஏற்படும் தேர்வில் வெற்றி பெற்று நல்ல மதிப்பெண் பெறலாம். நீண்ட காலமாக பிரிந்திருந்த தம்பதியர் ஒன்று சேருவார்கள். வெளிநாடு வேலை வாய்ப்பு தேடி வரும்.

பேச்சில் கவனம் தேவை
ஏப்ரல் மாதத்தில் வேலையில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம். வங்கியில் கடன் கிடைக்க வாய்ப்பு உள்ளது. சிலருக்கு திடீர் திருமணங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. வண்டி வாகனங்களில் போகும் போது கவனமும் நிதானமும் தேவைப்படும். வீண் பழியில் சிக்க வேண்டியிருக்கும் என்பதால் எதையும் பேசும் முன்பு யோசித்து பேசுவது நல்லது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications