சுக்கிரன் பெயர்ச்சி பலன் 2022: இன்னும் சில நாட்களில் சிலரின் வாழ்க்கை அடியோடு மாறப்போகிறது!
சென்னை:சிம்ம ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்துள்ள சூரியனுடன் சுக்கிரன் இணைகிறார். சூரியன்,சுக்கிரன் கிரகங்களின் கூட்டணியால் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும் திடீர் யோகமும் உண்டாகும். ஆகஸ்ட் 31 முதல் சிம்ம ராசியில் சூரியனுடன் கூட்டணி அமைத்து பயணிக்கும் சுக்கிரனால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சுக்கிரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். சுக்கிரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர்.
அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். தற்போது நெருப்பு ராசியான சிம்மத்தில் சூரியனுடன் சுக்கிரனும் இணைந்து சஞ்சரிப்பதால் யாருடைய வாழ்க்கையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்
பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உள்ள சூரியனுடன் சுக்கிரன் கூடவே இணைந்துள்ளதால் பணவரவு அதிகரிக்கும். மனதில் மகிழ்ச்சி கொப்பளிக்கும். உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். காதலிப்பவர்களுக்கு இது ஏற்ற கால கட்டமாகும்.

ரிஷபம்
உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் சுக ஸ்தானத்தில் சுக்கிரன் பயணம் செய்கிறார். திருமண வாழ்க்கையில் ஊடல் வரலாம் அதே நேத்தில் ஊடலுக்குப் பிறகு சந்தோஷ சம்பவங்கள் அரங்கேறும். பெண்கள் தங்க நகை வாங்கலாம். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். சுகமான நாட்களாக அமையப்போகிறது.

மிதுனம்
உங்கள் ராசிக்கு 3வது வீட்டில் சூரியன் உடன் சுக்கிரன் உடன் இணைந்துள்ளார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். உங்களின் உடல் நலம் மேம்படும். மிகவும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். பொருளாதாரம் மேம்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் உங்களுக்கு சாதகமான சூழல் நிலவும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறையும் கவனமும் தேவை.

கடகம்
உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் குடும்ப தன ஸ்தானத்தில் அமர்ந்துள்ள சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கை கூடி வரும்.

சிம்மம்
சுக்கிரன் உங்கள் ராசிக்குள் நுழையப்போகிறார். உங்களுக்கு ராஜயோகம் வரப்போகிறது. ஏழாம் பார்வையாக உங்கள் களத்திர ஸ்தானத்தை செவ்வாய் பார்ப்பதால் திருமணம் கைகூடி வரும் காலமாகும். காதல் வாழ்க்கையும் உற்சாகத்தை தரும். ராசிநாதன் சூரியன் உடன் சுக்கிரன் கூடவே பயணம் செய்வதால் வருமானம் அதிகரிக்கும். தங்க நகைகள் வாங்கலாம். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு புதிய காதல் மலரும்.

கன்னி
உங்கள் ராசிக்கு 12வது வீட்டில் சுக்கிரன் சூரியன் கூட்டணி அமைத்துள்ளதால் குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையும் கலகலப்பை ஏற்படுத்தும். விரைய ஸ்தானத்தில் பயணிக்கும் சுக்கிரனால் பணமழை பொழியப்போகிறது. கூடவே செலவுகளும் எட்டிப்பார்க்கும். மருத்துவ செலவுகள், வண்டி வாகனங்களினால் பராமரிப்பு செலவுகள் வரும்.

துலாம்
உங்கள் ராசிக்கு 11வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்வதால் சமூகத்தில் மதிப்பு உயரும். மனைவியுடன் வெளிநாடு செல்லும் வாய்ப்பு உண்டாகும். திருமண வாழ்க்கையில் உற்சாகம் அடைவீர்கள். தொழில் வியாபாரத்தில் பண வருமானம் அதிகாிக்கும். கணவன் மனைவிக்கு இடையே காதல் நினைவுகள் உற்சாகத்தைக் கொடுக்கும்.

விருச்சிகம்
உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சுக்கிரன் அமர்வது ராஜயோகம் வரும் காலம். பத்தில் சுக்கிரன் பதவியில் மாற்றத்தை ஏற்படுத்துவார். நல்ல நேரம் வந்து விட்டது. உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். வேலையில் முன்னேற்றம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வுக்கு வாய்ப்புள்ளது. குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். பேச்சில் நிதானமும் கவனமும் தேவை.

தனுசு
உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப்போகிறார். பாக்ய ஸ்தானத்தில் செவ்வாய் பகவான் அமர்வது நன்மைகள் நடைபெறும் காலமாகும். வேலையில் மாற்றம் ஏற்படலாம். கணவன் மனைவியின் அன்பான செயல்பாடுகள் அதிகரிக்கும். காதலிப்பவர்கள் உற்சாகமாக இருக்கும் காலம் இது. குதூகலமாக அனுபவிக்க தயாராகுங்கள்.

மகரம்
எட்டாம் வீட்டில் சுக்கிரன் அமர்வதால் பணம் வரும் வாய்ப்பு ஏற்படும். எட்டாம் வீட்டில் சுக்கிரன் இணைவதால் மனைவியின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தவும். இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் திடீர் மருத்துவ செலவுகள் எற்படும். பணம், பொருட்களை கவனமாக வைத்திருங்கள்.

கும்பம்
காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் சூரியனுடன் சஞ்சரிப்பதால் வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் உற்சாகம் அதிகரிக்கும். காதல் வாழ்க்கையும் உற்சாகத்தை தரும் சந்தோஷமாக அனுபவிக்க தயாராகுங்கள். சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது சந்தோஷமாக அனுபவியுங்கள்.

மீனம்
சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்படலாம். காதலிப்பவர்கள் பேச்சில் கவனமும் நிதானமும் தேவை. விட்டுக்கொடுத்து சென்றால் நீண்ட காலப் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்படும்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications