Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி 2022: மிதுன ராசியில் புதனுடன் இணைந்த சுக்கிரன்..இந்த ராசிக்காரர்களுக்கு யோகம்

ரிஷப ராசியில் பயணித்த சுக்கிரன் மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுக்கிரன் தனது ராசியான ரிஷபத்தில் இருந்து மிதுன ராசிக்கு இடம் பெயர்ச்சி அடைந்துள்ளார். இந்த மாத சுக்கிரன் ஜூலை 13ஆம் தேதி மிதுன ராசிக்கு இடம்பெயர்ச்சி அடைந்தார் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை மிதுனம் ராசியில் பயணம் செய்வார். இந்த சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. இல்லறத்தில் தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. காதல் கிரகம் சுக்கிரன் இன்பங்களை தரக்கூடியவர். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர் சுக்கிரன். இன்பம் என்கிற ஆனந்தத்தை அடைவதற்குரிய மனநிலையை உருவாக்குகிறவர்

சுக்கிரன் ரிஷபம், துலாம் ராசிகளின் ஆட்சி நாயகன். கன்னி ராசியில் நீசமடையும் சுக்கிரன், மீனம் ராசியில் உச்சமடைகிறார். இந்த மாத சுக்கிரன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்துள்ள சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன்கள் நடைபெறும் என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

காதல் நாயகன் சுக்கிரன் தன வாக்கு ஸ்தானத்தில் இருந்து 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் ஆட்சி பெற்ற புதனுடன் இணைந்து சஞ்சரிப்பதால் மகாலட்சுமி யோகம் தேடி வரப்போகிறது. உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். சின்னச் சின்ன பாதிப்புகள் உடல் நலத்தில் ஏற்படும். எனவே அவ்வப்போது கவனம் தேவை. வெள்ளிக்கிழமை பூஜை அறையில் மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

 ரிஷபம்

ரிஷபம்

இதுநாள் வரை உங்கள் ராசியில் ஆட்சி பெற்று பயணம் செய்து வந்த உங்கள் ராசி நாதன் சுக்கிரன் இனி உங்கள் 2வது வீட்டில் அமர்கிறார். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். தன ஸ்தான சுக்கிரனால் பண வருவாய் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தைபாக்கியம் கிடைக்கும்.

மிதுனம்

மிதுனம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் குடியேறியுள்ளார். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். சிலருக்கு உணவு மூலம் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். வெள்ளிக்கிழமை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபடுங்கள்.

கடகம்

கடகம்

சந்திரனை ராசி அதிபதியாகக் கொண்ட கடக ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12வது வீட்டில் சுக்கிரன் குடியேறியுள்ளார். சுப விரையம் ஏற்படும் ஆடம்பர செலவு ஏற்படும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பார்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். வெள்ளிக்கிழமைகளில் பூஜை அறையில் அம்மன் படத்தின் முன் விளக்கேற்றி வழிபடுங்கள்.

சிம்மம்

சிம்மம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் அமர்கிறார். பண வருவாய் அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பார்க்கலாம். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும்.

கன்னி

கன்னி

உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் சுக்கிரன் அமர்ந்துள்ளார். தொழில் ஸ்தானத்தில் பயணிக்கும் சுக்கிரனால் உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. குடும்பத்தில் மனைவியுடனோ அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள். அமைதியாக நிதானமாக பேசவும்.

துலாம்

துலாம்

ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் பயணிக்கிறார். வீட்டில் மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு செல்வதற்கு பாஸ்போர்ட் எடுப்பதற்கான முயற்சி செய்யலாம். வெள்ளிக்கிழமை சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்கு சந்தனம் வாங்கித்தர நன்மைகள் நடைபெறும்.

விருச்சிகம்

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் மறைவதால் பணம், விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வைத்திருக்கவும். பணவரவு அதிகரித்தாலும் செலவு வருதே என்று கவலை வேண்டாம் பரிகாரம் இருக்கிறது.வீட்டில் மனைவியின் உடல் நலத்தில் கவனம் வைக்கவும். இருவருமே கவனமாக இருந்தால் பாதிப்பை தவிர்க்கலாம். இல்லாவிட்டால் மருத்து செலவுகள் எற்படும். வெள்ளிக்கிழமைகளில் துர்க்கா மந்திரம் கூறி வணங்கலாம்.

தனுசு

தனுசு

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் பயணம் செய்கிறார். களத்திரத்தில் சுக்கிரன் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சுக்கிரன் பார்வை கிடைக்கிறது. வாழ்க்கை துணை உடனான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. சுக்கிரன் ஏழாவது வீட்டில் செவ்வாய் உட இணைந்துள்ளதால் பெண்கள் விஷயத்தில் சற்று கவனமாக இருக்கவும். சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம்.

மகரம்

மகரம்

சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வேலை பார்க்கும் இடத்தில் கடும் உழைப்பை கொடுக்க வேண்டிய காலமிது. பணம் நகைகளை பத்திரமாக வைத்திருக்கவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும்.

கும்பம்

கும்பம்

காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பயணம் செய்கிறார். உங்களின் உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் வருமானம் அதிகரிக்கும். காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது என உற்சாகத்துடன் பாடப்போகிறீர்கள். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது.

Recommended Video

    மிதுன ராசிக்கு இடம்பெயர்ந்த சுக்கிரன் | 12 ராசிகளுக்கான பலன்கள்
    மீனம்

    மீனம்

    சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை தேவை. வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களுக்கு சென்று விளக்கேற்றி வழிபடவும் நன்மைகள் நடைபெறும்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+