சுக்கிரன் உச்சம்.. கடகத்தில் உதயமான சுக்கிரன்.. சுக்கிர திசையில் யாருக்கு கோடீஸ்வர யோகம்
சென்னை: காதல் கிரகங்களின் கூட்டணியில் பிரிவு ஏற்பட்ட பிறகு ரொமான்ஸ் நேரங்கள் குறைந்து வருவதாக பலர் குறைபட்டுக்கொண்டிருக்கின்றனர். கடக ராசியில் வக்ர நிலையில் அஸ்தமன நிலையில் பயணப்பட்ட சுக்கிரன் ஆவணி 1ஆம் தேதி ஆகஸ்ட் 18 முதல் உதயமாகியுள்ளார். உதயமான சுக்கிரன் விரைவில் நேர்கதியில் பயணத்தை தொடங்குவார். சுக்கிரன் உதயத்தால் சுக்கிர திசையில் யாருக்கு கோடீஸ்வர யோகம் தேடி வரும் என்று பார்க்கலாம்.

களத்திர தோஷம்: சுக்கிரன் மேஷ லக்னத்தவருக்கு குடும்பம் மற்றும் களத்திர வீடுகள் எனப்படும் இரண்டு ஏழுக்குடையவரான சுக்கிரன் ஏழாமிடத்தில் ஆட்சி மற்றும் மூலத் திரிகோண பலம் அடைவதன் மூலம் இந்த யோகம் உண்டாகும். சுக்கிரன் ஒரு இயற்கைச் சுபர் என்பதால் சுப கிரகங்கள் கேந்திரத்தில் இருப்பதால் கேந்திராதிபத்திய தோஷம் உண்டாகும் என்பதன் அடிப்படையில் இந்த இடத்தில் சுக்கிரன் தனித்திருப்பது சிறப்பல்ல. யோகத்தை விட இந்த இடத்தில் தோஷமே முன் நிற்கும் என்பதால் மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் ஏழில் தனித்து அமைவது சரியான அமைப்பாகாது.
மேலும் சுக்கிரன் ஏழில் இருப்பதினால் உண்டாகும் களத்திர தோஷ நிலையும் கூடுதலாக இணையும். எனவே மேஷத்திற்கு சுக்கிரன் ஏழாமிடத்தில் தனித்திருப்பதை விட வேறு கிரகங்களுடன் இணைந்திருப்பது கேந்திராதிபத்திய தோஷத்தை குறைத்து நன்மைகளை அதிகரிக்கும். அதேநேரத்தில் ஏழில் இருக்கும் சுக்கிரன் லக்னத்தைப் பார்ப்பார் என்பதால் ஒரு சுப கிரகம் லக்னத்தைப் பார்ப்பது சிறப்பான நிலை என்பதன் அடிப்படையில் ஜாதகர் நல்ல குணங்களுடன் இருப்பார். கலா ரசிகனாகவும், பெண் சுகத்தில் விருப்பம் உள்ளவராகவும் இருப்பார். சுக்கிர தசையில் பெண்கள் மூலமான அமைப்புகளில் நன்மைகளைப் பெறுவார்.
சுக்கிர திசையில் கோடீஸ்வர யோகம்: ரிஷபத்திற்கு சுக்கிரன் லக்னாதிபதியாகி, லக்னத்தில் ஆட்சி பெற்று மாளவியா யோகத்தைத் தருவார். இந்த அமைப்பு ரிஷப லக்னத்திற்கு மிகவும் சிறப்பான ஒரு நிலையாகும். இங்கிருக்கும் சுக்கிரன் கிருத்திகை நட்சத்திரத்தில் அமர்ந்திருந்தால் யோகம் கூடுதலான சிறப்பை அளிக்கும். கிருத்திகை நான்காம் பாவத்தில் சுக்கிரன் அமர்ந்தால் நவாம்சத்தில் உச்சம் பெறுவார் என்பதால் இந்த அமைப்பில் பிறந்த ரிஷப லக்னக்காரர்கள் சுக்கிர தசையில் சிறந்த நன்மைகளை அடைவார்கள். முப்பது வயதிற்கு மேல் இவர்களுக்கு சுக்கிர தசை நடப்பில் வருமாயின் நல்ல வீடு, உயர்தர வாகனம், புரிந்து கொண்ட வாழ்க்கைத் துணை, கலைத்துறை, பெண்களால் லாபம், அதிகமான பெண்கள் வேலை செய்யும் நிறுவனங்கள், பெண்கள் சம்பந்தப்பட்ட ஆடைகள் விற்கும் கடை, ஹோட்டல் போன்றவற்றில் ஜாதகரை ஈடுபடுத்தி லாபங்களைத் தருவார்.
யோகம் தரும் சுக்கிரன்: மிதுன லக்னத்திற்கு சுக்கிரன் பத்தாம் வீட்டில் உச்சமாகி அவரது தசையில் சிறந்த யோகங்களைத் தருவார். இங்கிருந்து தசை நடத்தும் சுக்கிரனால் ஜாதகருக்கு இளமையிலேயே அனைத்துப் பாக்கியங்களும் கிடைக்கும். கலைத்துறையில் ஈடுபாடு, ரெஸ்ட்டாரண்ட், டெக்ஸ்டைல்ஸ் போன்றவற்றில் ஜாதகரை ஈடுபடுத்தி லாபங்களைத் தருவார் சுக்கிரன். நல்ல அழகிய வாழ்க்கைத் துணை, அருமையான வீடு, சொகுசு வாகனம் ஆகியவைகள் சுக்கிர தசையிலோ சுக்கிரனின் வீடுகளில் இருக்கும் கிரகங்களின் தசைகளிலோ கிடைக்கும்.
சுக்கிரன் உச்சம் நீச பங்க ராஜயோகம்: துலாமிற்கு சுக்கிரன் நீசபங்கம் அடையாத நிலையில் கூட சுக்கிர தசையில் பெரிய கெடுதல்கள் நடப்பதில்லை. இன்னும் சொல்லப் போனால் நீச சுக்கிர தசையில் ஜாதகருக்கு தன்னுடைய செயல்பாட்டு நன்மைகளான நல்ல வீடு, அருமையான வாகனம், அழகான மனைவி, பெண்களால் நன்மை, ஹோட்டல், துணிக்கடை போன்றவற்றில் லாபம் ஆகியவற்றை குறைவின்றிச் செய்வார். சுக்கிரனுக்கு மட்டும் பனிரெண்டாமிடம் நல்ல இடம் என்பதற்கு காரணம் என்னவெனில், கால புருஷனாக உருவகப்படுத்தப்படும் நமது ராசிச் சக்கரத்தின் படுக்கையறை ஸ்தானமான பனிரெண்டாம் வீட்டில் சுக்கிரன் உச்சம் பெறுவதுதான், அதேபோல தன்னுடைய லக்னமான துலாமிற்கு ஆறில் அவர் உச்சம் பெறுவதும் சிறப்பானது.
மேஷம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் உதயமாகி உள்ளதால் சிறப்பான யோகம் தேடி வரும். பெண்களுக்கு சிறப்பான யோகம் உள்ளதால் வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்குவீர்கள். ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும்.
மிதுனம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் உதயமாகியுள்ளார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
கடகம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் உதயமாகியுள்ளார். நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும்.
கன்னி: சுக்கிரன் உங்களுடைய ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் உதயமாகியுள்ளார். பண வருமானம் அதிகாிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் கூடும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் தேடி வரும்.
துலாம்: உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரன் உதயமாகியுள்ளார். பத்தாம் வீட்டில் உள்ள பதவி யோகத்தை தரப்போகின்றனர். உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். காதல் மலரும் காலம் என்பதால் வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவைப்படும்.
மகரம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7 ஆவது வீடான களத்திர ஸ்தானத்தில் உதயமாகியுள்ளார். உங்கள் ராசிக்கு சுக்கிரன் பார்வை கிடைப்பதால் சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் செய்யும் இடத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும்.
மீனம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உதயமாகியுள்ளார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் பயணம் செய்வது சிறப்பு பணவரவு அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. குடும்பத்தோடு உல்லாச பயணம் செல்வீர்கள். உங்களுடைய கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications