Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி 2023: கடகத்தில் காதல் கிரகங்கள் கூட்டணி..கல்யாண வைபோகம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுக்ரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். சுப கிரகமான சுக்கிரன் மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடப்பெயர்ச்சியாகி செவ்வாய் உடன் கூட்டணி சேரப்போகிறார். கடக ராசி சந்திரனின் வீடு. மனதை ஆளும் சந்திரன் வீட்டில் காதல் கிரகங்கள் கூட்டணி சேர்ந்துள்ளதால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு யாருக்கு ஜாக்பாட் அடிக்கும்? கல்யாண வைபோகம் யாருக்கு கூடி வரும் என்று பார்க்கலாம்.

Sukran Peyarchi Palan 2023: Venus transit to Kadagam conjunction with Mars effects on 12 Zodiac Sign

சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். இந்த சுக்கிர பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் சுக்கிர திசை அடிக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: சுக ஸ்தானமான 4வது வீட்டில் சுக்கிரன் செவ்வாய் உடன் அமர்ந்து உள்ளதால் வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் சிறப்படையும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று அபிஷேகத்தில் பால் வாங்கி கொடுக்கலாம். சுக்கிரன் பார்வை தொழில் ஸ்தானத்தின் மீது விழுவதால் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு வேலையில் புரமோசன் கிடைக்கும். சுக்கிரதிசையும் கைகூடி வரும்.

Sukran Peyarchi Palan 2023: Venus transit to Kadagam conjunction with Mars effects on 12 Zodiac Sign

ரிஷபம்: உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் செவ்வாய் உடன் பயணம் செய்யப்போகிறார். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். உடல் நலனில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். வேலைக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மிதுனம்: உங்கள் ராசியில் பயணம் செய்து வந்த சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் செவ்வாயுடன் பயணம் செய்யப்போகிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையேயான காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கைகூடி வரும். வெள்ளிக்கிழமைகளில் அனுமன் கோவிலுக்கு சென்று வெண்ணெய் வாங்கி தந்து வழிபட பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.

கடகம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் செவ்வாய் உடன் இணையப்போகிறார். நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று மல்லிகை, முல்லை பூக்களை வைத்து வணங்கி வர நன்மைகள் அதிகரிக்கும்.

Sukran Peyarchi Palan 2023: Venus transit to Kadagam conjunction with Mars effects on 12 Zodiac Sign

சிம்மம்: உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான12வது வீட்டில் சுக்கிரன் செவ்வாய் உடன் பயணம் செய்யப்போகிறார். உங்களுக்கு பண வருமானம் அதிகரிக்கும் கூடவே சுப விரைய செலவுகளும் ஏற்படும். வீட்டிற்குத் தேவையான அத்தியாவசிய டிவி, பிரிட்ஜ், ஏசி பொருட்கள் வாங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பார்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள்.

கன்னி: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் செவ்வாய் உடன் பயணம் செய்யப்போகிறார். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருமானம் அதிகரிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பார்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும்.

துலாம்: உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் உடன் சுக்கிரன் இணையப்போகிறார். இது உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி செய்யும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. உயரதிகாரிகளிடம் பேசும் போது அமைதியாகவும் நிதானமாகவும் பேசவும். குடும்பத்தில் மனைவியுடனோ அல்லது காதலியுடனோ சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள்.

Sukran Peyarchi Palan 2023: Venus transit to Kadagam conjunction with Mars effects on 12 Zodiac Sign

விருச்சிகம்: பாக்ய ஸ்தானமான 9ஆவது வீட்டில் சுக்கிரன் செவ்வாய் உடன் பயணம் செய்யப்போகிறார். காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். உங்களுக்கு மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. வேலையில் இருப்பவர்கள் வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வருகிறது. பாஸ்போர்ட் எடுத்தவர்கள் வெளிநாடு செல்ல விசாவிற்கு முயற்சி செய்யலாம்.

தனுசு: உங்கள் ராசிநாதன் சுக்கிரன் எட்டாவது வீட்டில் செவ்வாய் உடன் மறைகிறார். குடும்பத்தில் இருவருமே கவனமாக இருந்தால் பொருள், நகை இழப்பை தவிர்க்கலாம். பணத்தை பத்திரப்படுத்துங்கள் விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு வெள்ளிப்பொருட்கள் வாங்கி பரிசளித்து ஆசிர்வாதம் பெறலாம். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம் வாகன பயணங்களில் கவனம் தேவை. வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு அகத்திக்கீரையை தானம் கொடுக்கலாம்.

மகரம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7ஆம் இடத்தில் களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். செவ்வாய் பகவானும் அங்கே இருப்பதால் சிலருக்கு காதல் கனிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் செய்யும் இடத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டியது அவசியம். வாழ்க்கை துணைக்கு சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். இல்லை எனில் சுக்கிரனின் அருட் பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

Sukran Peyarchi Palan 2023: Venus transit to Kadagam conjunction with Mars effects on 12 Zodiac Sign

கும்பம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். கவலைகள், சங்கடங்கள் சூழும் காலம் என்பதால் ஸ்படிக மாலை அணிந்து கொள்வது நல்லது. வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்கவும். பசுவிற்கு அரிசி மாவும், வெல்லமும் தானமாக அளிக்க நன்மைகள் நடைபெறும்.

மீனம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் செவ்வாய் உடன்இணையப்போவதால் பணவரவு அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. இதே வேகத்தோடு ஒரு ஜாலி பயணம் சென்று வாருங்கள் உங்களுக்கு கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் விளக்கேற்றி வர நன்மைகள் அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+