சுக்கிரன் பெயர்ச்சி பலன் 2024: காதல் கிரகங்கள் கூட்டணி.. பிப்ரவரியில் காதலில் விழும் ராசிக்காரர்கள்
சென்னை: காதலர் தினம் கொண்டாடப்படும் இந்த நேரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி நிகழ்ந்துள்ளது. சனி வீடான மகர ராசியில் செவ்வாய் உச்சம் பெற்று அமர்ந்திருக்க சுக்கிரன் கூட்டணி சேர்ந்துள்ளார். காதல் கிரகங்களின் கூட்டணியால் சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளில் பிறந்த எந்த ராசிக்காரர்களுக்கு இந்த காதலர் தினத்தில் காதல் மலரும் என்று பார்க்கலாம்.
சிம்மம்: சுக்கிரனும் செவ்வாயும் இணைந்து உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். காதல் துணையுடனும் வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். இனிமையான பேச்சுக்களால் மனைவியை குளுமைப்படுத்துங்கள். காதல் துணையோடு மகிழ்ச்சியான நேரத்தை செலவு செய்யுங்கள்.

கன்னி: உங்க ராசிக்கு தன ஸ்தான அதிபதி சுக்கிரன் செவ்வாயுடன் இணைந்து ஐந்தாம் வீட்டில் பயணம் செய்வது சாதகமான அம்சம். கணவன் மனைவி, காதலர்கள் இடையேயான பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வாழ்க்கை துணையுடனும் காதல் துணையுடனும் அதிக நேரத்தை செலவு செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் அன்பும் நெருக்கமும் அதிகரிக்கும். வெற்றிகரமான கால கட்டம் இது. நேசமும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது.
துலாம்: ராசிநாதன் சுக்கிரன் நான்காம் வீடான சுகஸ்தானத்தில் உச்சம் பெற்ற செவ்வாயுடன் இணைந்து திக் பலம் பெறுவதால் தடைபட்ட காரியம் நிறைவேறும். எதையும் காதலோடு அணுகுவீர்கள். அன்பான வார்த்தைகளால் காதல் துணையை உற்சாகப்படுத்துவீர்கள். பழைய கசப்புகள் மறைந்து காதல் உணர்வுகள் அதிகரிக்கும். நெருக்கமும் அன்பும் கூடும்.
விருச்சிகம்: செவ்வாய் சுக்கிரன் இணைந்து உங்கள் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். காதல் ஜோடிகள் கவனமாக இருக்கவும். பேசும் விசயங்களில் கவனம் தேவை தூக்கமின்மை பிரச்சினை ஏற்படும். புதிய காதல் முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். காதலோடு கசிந்து உருகுவீர்கள். குடும்பத்தின் வாழ்க்கை துணை உடனான காதல் அதிகரிக்கும்.












Click it and Unblock the Notifications