Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சுக்கிரன் பெயர்ச்சி பலன்.. உச்சம் பெறும் சுக்கிரன்.. ராகு உடன் கூட்டணி.. விபரீத ராஜயோகம் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சுக்கிரன் காதல் நாயகன்.. களத்திர காரகன் சுக போகங்களின் அதிபதி. மீன ராசியில் உச்சம் பெறும் சுக்கிரன் ராகு உடன் இணைவதுதான் சிறப்பம்சமே. 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீன ராசியில் பயணம் செய்யும் ராகு உடன் உச்சம் பெறும் சுக்கிரன் இணைவது சில ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை கொடுக்கப்போகிறது. சில ராசிக்காரர்கள் விபரீத ராஜயோகத்தால் பண மழையில் நனையப்போகிறார்கள்.

மேஷம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 12வது இடத்தில் அமரப்போகிறார் சுக்கிரபகவான். உங்கள் ராசியின் 2வது 7வது அதிபதியானவர் சுக்கிரன் 12வது வீட்டில் உச்சம் பெறுவதால் விபரீத ராஜயோகம் கிடைக்கப்போகிறது. சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். பணவருமானம் அதிகரித்தாலும் விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் அமரப்போவதால் வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள் பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். வாழ்க்கை துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். ராகுவும் சுக்கிரனும் கூட்டணி சேருவதால் விபரீத ராஜயோகமும் கோடீஸ்வர யோகமும் தேடி வரப்போகிறது.

Sukran Peyarchi Palan 2024 Who will get Vibareetha Rajyogam

ரிஷபம்: உங்கள் ராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு 11வது இடத்தில் லாப ஸ்தானத்தில் உச்சம் பெற்று பயணம் செய்யப்போகிறார். மனைவி வழியில் பண வருமானம் அதிகரிக்கும். லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் சுக்கிரனால் உங்களுக்கு பல வழிகளில் இருந்தும் பணம் வரும். விருந்து விஷேசம் என்று பங்கேற்பீர்கள். சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் பாயாசம் செய்து சிறு குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

சிம்மம்: உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் சுக்கிரன் உச்சம் பெற்று ராகு உடன் பயணம் செய்யப்போகிறார். ஏற்கனவே ராகு ஆட்சி பெற்ற குருவை போல செயல்படுவார். இப்போது சுக்கிரன் 8ஆம் வீட்டில் உச்சம் பெற்று பயணம் செய்வதால் விபரீத ராஜயோகம் தேடி வரப்போகிறது. பணம் பல வழிகளில் இருந்தும் வந்து சேரும். பணப்புழக்கம் தாராளமாக இருந்தாலும் பத்திரமாக பாதுகாப்பது அவசியம். சூரிய நமஸ்காரம் தினசரியும் தவறாறு செய்யவும்.

துலாம்: உங்கள் ராசி நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறையப் போகிறார். உங்கள் ராசி அதிபதியும் எட்டாம் வீட்டிற்கும் அதிபதியுமான சுக்கிரன் 6ஆம் வீட்டில் உச்சம் பெற்று பயணம் செய்யப்போவதால் விபரீத ராஜயோகம் கைகூடி வரப்போகிறது. எதிரிகள் தொல்லை நீங்கும். உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ள வேண்டிய காலமிது. பணத்தை சொத்துக்களில் முதலீடு செய்யுங்கள். வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வெள்ளை நிற மலர்களால் அர்ச்சனை செய்வதால் நன்மைகள் நடைபெறும். வெள்ளிக்கிழமையன்று சுக்கிரனை தரிசனம் செய்யுங்கள்.

மகரம்: உங்கள் ராசிக்கு 3வது வீடான மீனம் ராசியில் சுக்கிரன் குடியேரப்போகிறார். ராகு உடன் சுக்கிரன் கூட்டணி சேரப்போவதால் முயற்சி ஸ்தானத்தில் குடியேறும் சுக்கிரனால் பணியிடத்தில் நல்ல விசயங்கள் நடக்கும். விபரீத ராஜயோகம் கைகூட வரும். உங்களின் பேச்சுத்திறமையும், அழகியல் உணர்வும் அதிகரிக்கும். உடல் நலத்தில் சின்னச் சின்ன பாதிப்புகள் ஏற்படும் கவனம் தேவை. வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று வணங்கி வர நன்மைகள் நடைபெறும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+