சுக்கிரன் பெயர்ச்சி பலன்.. கடகத்திற்கு மாறும் காதல் நாயகன்.. சூரிய கூட்டணியால் யாருக்கு அதிர்ஷ்டம்
சென்னை: சுக்ரன் களத்திரகாரகன் இல்லற வாழ்வுக்குறியவர். சுக்கிரன் சிம்ம ராசியில் இருந்து வக்ர நிலையில் கடக ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். சூரியனுடன் கூட்டணி சேருகிறார் சுக்கிரன். இந்த கிரகங்களின் கூட்டணி, சஞ்சாரத்தை வைத்து ராசிக்காரர்களுக்கு நன்மையும் தீமையும் நடைபெறும். சுக்கிரன் பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.
காதல் நாயகன்: சுக்ரன் மனைவி யோகம் தருபவர் ஆணுக்கு மனைவியைப்பற்றியும், பெண்ணுக்கு மண வாழ்க்கையைப் பற்றியும் சொல்லுகின்றவர். ஆகையால் சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும். சுக்கிரன் சிற்றின்பம், திருமணம் முதலான சுகத்தை ஆணுக்கு அளிப்பவர். அதே போல் பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், மனத்துக்கிசைந்த கணவனை அடையும் தகுதியையும், சுக போகங்களில் திளைத்து மகிழும் ஆற்றலையும் வழங்குவார். சுக்ரன் என்றால் இன்பம். மனித வாழ்க்கையில் அன்பு, பாசம், காதல் ஆகிய மூன்று இன்பங்களை அளிக்கக் கூடியவர். சுக்கிரன் சுக போகங்களின் அதிபதி. இந்த சுக்கிர பெயர்ச்சி யாருக்கு எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 4வது வீட்டில் அமர்ந்து உள்ளதால் வீட்டுக்குத் தேவையான அலங்கார பொருட்களை வாங்குவீர்கள். சிலர் வீடுகளை பராமரிப்பு செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்கும் போது மட்டும் கவனமாக வாங்க வேண்டும் இல்லை எனில் செலவு இழுத்து விட்டு விடும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு மல்லிகை, முல்லை பூக்களை வாங்கித் தரலாம்.
ரிஷபம்: ராசி நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 3ஆம் இடமான முயற்சி ஸ்தானத்தில் சூரியனுடன் கூட்டணி சேருவதால் உங்களின் பேச்சுத்திறமையும், அழகியலும் அதிகரிக்கும். உங்கள் நட்பு வட்டம் அதிகரிக்கும். சிறு ஆன்மீகப் பயணம் செல்ல வேண்டியிருக்கும். உடல் நலனில் சின்னச் சின்ன பாதிப்பு ஏற்படும். எனவே அவ்வப்போது அக்கறையோடு சிறு பிரச்சினைகளையும் கவனியுங்கள். வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடக்கும்.

மிதுனம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 2வது வீட்டில் வக்ர நிலையில் அமர்கிறார். தன ஸ்தான சுக்கிரனால் பண வருமானம் அதிகாிக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கணவன் மனைவிக்கு இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். திருமண வயதில் இருப்பவா்களுக்கு திருமண பாக்கியம் கிடைக்கும். சிலருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று செந்தூரம் வாங்கி தந்து வழிபட மேலும் நன்மைகள் நடைபெறும்.
கடகம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசியில் சூரியன் உடன் இணையப்போகிறார். சிலருக்கு வயிற்றில் பிரச்சினைகள் வரலாம் என்பதால் ஆரோக்கியமான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். நல்ல வருமானம் வரும். பொன்னும் பொருளும் சேரும் நேரம் இது. தங்க நகைகள் வாங்கலாம். ஆடம்பரமான பொருட்களை வாங்குவதால் சுப செலவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு மேற்படிப்பு படிக்க வழி ஏற்படும். கணவன் மனைவி இடையே காதல் உணர்வுகள் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

சிம்மம்: உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான12வது வீட்டில் சுக்கிரன் உங்கள் ராசிநாதன் சூரியனுடன் குடியேறுகிறார். சுப விரைய செலவு ஏற்படும். டிவி பிாிட்ஜ் ஏசி பொருட்கள் வாங்கலாம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி கணவன் மனைவி மகிழ்ச்சியாய் இருப்பாா்கள். வாழ்க்கை துணையுடன் அந்நியோன்னியம் அதிகரிக்கும். பணவரவு சிலருக்கு உற்சாகத்தை தரும். பணம் வரும் போது பத்திரப்படுத்துங்கள். சிலருக்கு வெளிநாட்டு வாய்ப்பை எற்படுத்தி கொடுக்கும். படிப்புக்காக சிலர் வெளிநாடு செல்வார்கள்.
கன்னி: சுக்கிரன் உங்களுடைய ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். திருமண வாழ்க்கையில் உற்சாகமடையும் வகையில் பல செயல்கள் நடைபெறும் மாதம் இது. பண வருமானம் அதிகாிக்கும். அரசனுக்கு இணையான வாழ்க்கை கிடைக்கும் காலமாகும். வாகன வசதி மேம்படும். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். பிள்ளைகள் வழியில் சிறப்பான பலன்களை எதிா்பாா்க்கலாம். வீடு நிலம் வகையில் ஆதாயம் கிடைக்கும்.

துலாம்: உங்கள் ராசிக்கு 10வது வீட்டில் தொழில் ஸ்தானத்தில் ராசிநாதன் சுக்கிரன் சூரியனுடன் அமரப்போகிறார். பத்தாம் வீட்டில் உள்ள சுக்கிரனும் சூரியனும் பதவி யோகத்தை தரப்போகின்றனர். உங்கள் வேலையில், தொழிலில் உற்சாகத்தை ஏற்படுத்தும். பணி செய்யும் இடத்தில் வார்த்தைகளில் கவனம் தேவை. அமைதியாக நிதானமாக பேசவும். குடும்பத்தில் மனைவியுடனே அல்லது காதலியுடனே சின்னச் சின்ன ஊடல் ஏற்படலாம் சமாளியுங்கள்.
விருச்சிகம்: உங்களுடைய ராசிக்கு 9ஆவது வீட்டில் சுக்கிரன் பயணம் செய்யப்போகிறார். உங்களுக்கு மனைவியின் அன்பான ஆதரவு கிடைக்கும். காதலி நண்பர்கள், உறவினர்களுடன் உற்சாகமாக இருக்கும் காலம் இது. காதலிப்பவர்களுக்கு இந்த மாதம் குதூகலமாக அமையும். வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வருகிறது. பாஸ்போர்ட் எடுத்தவர்கள் வெளிநாடு செல்ல விசாவிற்கு முயற்சி செய்யலாம். வெற்றிகள் தேடி வரும்.

தனுசு: சுக்கிரன் உங்களுடைய ராசிக்கு எட்டாவது வீட்டில் சூரியனுடன் இணைந்து மறைகிறார். கவனமாக இருந்தால் பொருள், நகை பாதிப்பை தவிர்க்கலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை இல்லாவிட்டால் மருத்துவ செலவுகள் எற்படும். பணத்தை பத்திரப்படுத்துங்கள் விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவல் கொடுக்க வேண்டாம். வெள்ளிக்கிழமை அம்மாவிற்கு வெள்ளிப்பொருட்கள் வாங்கி பரிசளித்து ஆசிர்வாதம் பெறலாம். வெள்ளிக்கிழமைகளில் பசுவிற்கு அகத்திக்கீரை தானம் செய்ய நன்மைகள் நடைபெறும்.
மகரம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 7 ஆவது களத்திர ஸ்தானத்தில் சூரியனுடன் பயணம் செய்கிறார். உங்கள் ராசிக்கு சுக்கிரன் பார்வை கிடைப்பதால் சிலருக்கு காதல் கணிந்து திருமணத்திலும் முடிய வாய்ப்பு உள்ளது. தொழில் செய்யும் இடத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். சிறிய அளவில் உடல்நலக்குறைவு ஏற்படும். பெண்கள் விசயத்தில் சற்று கவனமாக இருக்கவும். இல்லை எனில் மதிப்பு மரியாதைக்கு பிரச்சினை ஏற்பட்டு விடும். சுக்கிரனின் அருள் பார்வை கிடைக்க வெள்ளிக்கிழமைகளில் சுக்கிர ஓரையில் விளக்கேற்றி வழிபடலாம்.

கும்பம்: சுக்கிரன் உங்கள் ராசிக்கு 6வது இடத்தில் மறைவதால் உங்கள் உடல் நலனையும் பாக்கெட்டில் உள்ள பணத்தையும் பத்திரமாக பார்த்துக்கொள்ளவும். வீட்டில் வாழ்க்கைத்துணையினால் சின்னச்சின்ன சச்சரவுகள், ஊடல்கள் ஏற்பட்டு அதனால் சிலருக்கு மன அழுத்தம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். நினைத்த காரியம் நிறைவேறுவதற்கு வெள்ளிக்கிழமை அம்பிகையை வணங்கவும். பசுவிற்கு அரிசி மாவும், வெல்லமும் தானமாக அளிக்க நன்மைகள் நடைபெறும்.
மீனம்: காதல் நாயகன் சுக்கிரன் உங்கள் ராசிக்கு 5ஆம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியனுடன் அமரப்போகிறார். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சுக்கிரன் அமர்வதால் பணவரவு அதிகரிக்கும். வீட்டில் மனைவி, குழந்தைகள் மீது அன்பும் பாசமும் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவர் உங்கள் மீது காதல் மழை பொழியும் நேரமிது. குடும்பத்தோடு உல்லாச பயணம் செல்வீர்கள். உங்களுடைய கற்பனை வளமும் அழகுணர்ச்சியும் அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை அம்மன் கோவில்களில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications