Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தை மாத ராசி பலன்கள் 2020 : தனுசு மகரம் ராசிக்காரர்களுக்கு முன்னேற்றமான மாதம்

தை மாதம் மகர மாதம். சூரியன்,புதன் மகரம் ராசியில் சஞ்சரிக்கின்றனர். தனுசு ராசியில் இருந்து சனி மகர ராசிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார். மிதுனத்தில் ராகு, தனுசு ராசியில் கேத

Subscribe to Oneindia Tamil

சென்னை: தை மாதம் சூரியன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். வடக்கு திசை நோக்கி தனது பயணத்தை இந்த மாதத்தில் இருந்துதான் சூரியன் தொடங்குகிறார்.

உத்தராயண புண்ணிய காலம் தை முதல் தேதி முதல் தொடங்குகிறது. தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகியஆறு மாதங்களும் உத்தராயண புண்ணிய காலம் என்றும் தேவர்களின் பகல் காலம் ஆகும். இந்த மாதங்களில் நிறைய சுப காரியங்களை செய்யலாம். ரத சப்தமி என்பது தை மாதத்தின் வளர் பிறையில் வரும் சப்தமி திதி. இந்த நாளில்தான் சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறார். இந்நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி தீபம் ஏற்றி சூரிய வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் தங்களால் இயன்ற தானங்களைச் செய்யலாம். இந்தநாளில் விரதம் இருந்து சூரியனை வழிபட ஆரோக்கியம் அதிகமாகும். செல்வம் செல்வாக்கு அதிகமாகும். பகைவர்களை வெல்லும் சக்தி கிடைக்கும். நவகிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

தை மாத தொடக்கத்தில் கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால், சூரியன்,புதன் மகரம் ராசியில் சஞ்சரிக்கின்றனர். மிதுன ராசியில் ராகு, தனுசு ராசியில் சனி, கேது, குரு, விருச்சிகத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய், கும்பத்தில் சுக்கிரன்,என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. தை மாதம் கிரகங்களின் பெயர்ச்சியை பார்த்தால், தை பத்தாம் தேதி சனிபகவான் மகரம் ராசிக்கு இடம் மாறுகிறார், 16ஆம் தேதி கும்பத்திற்கு இடம்மாறுகிறார். தை 19ஆம் தேதி மீனம் ராசிக்கு சுக்கிரன் இடம் மாறுகிறார். தை 24ஆம் தேதி செவ்வாய் தனுசு ராசிக்கு இடம் மாறி அங்கு சஞ்சரிக்கும் குரு, கேது உடன் கூட்டணி சேருகிறார்.

தை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சி ஆகியவற்றை பொறுத்து தனுசு மற்றும் மகரம் ராசிக்காரர்களுக்கும் பண வருமானம் எப்படி இருக்கும், வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் அரசு வேலை கிடைக்குமா? இடமாற்றம் பதவி உயர்வு வருமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாகும் திருமணம் கை கூடி வருமா? சுப நிகழ்ச்சிகள் நடைபெறுமா என்ற கேள்விகளுக்கு இந்த ராசி பலன்கள் மூலம் பதில் கிடைக்கும்.

வெற்றிகள் தேடி வரும்

வெற்றிகள் தேடி வரும்

தை மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு நன்மைகள் அதிகம் நடைபெறும் மாதமாகும் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் தை மாதத்தில் சூரியன் புதன் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டிலும் உங்க ராசியில் கேது, குரு, சனி இணைந்திருக்கிறார்கள். மூன்றாம் வீட்டில் சுக்கிரன், ஏழாம் வீட்டில் ராகு சஞ்சரிக்கிறார். பத்தாம் தேதியன்று ஏழரை சனியின் ஜென்ம சனி முடிகிறது பாத சனி ஆரம்பமாகிறது. சனிபகவான் இரண்டாம் வீட்டில் உள்ள சூரியனோடு இணைகிறார். புதன் 16 ஆம் தேதி மூன்றாம் வீட்டிற்கு நகர்கிறார், 19ஆம் தேதி சுக்கிரன் சுக ஸ்தானமான நான்காம் வீட்டிற்கு செல்வது சிறப்பு. விரைய ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் மாத இறுதியில் உங்க ராசிக்கு வந்து குரு கேது உடன் இணைகிறார். குரு மங்கல யோகம் உங்க ராசிக்கு ஏற்படுகிறது. புதிய வெற்றிகளை ருசிக்கப் போகிறீர்கள்.

சனியால் பாதிப்பு நீங்கும்

சனியால் பாதிப்பு நீங்கும்

இந்த மாதம் உங்களுக்கு ஏழரை சனியால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கப்போகிறது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துங்கள் தேர்வு நேரம் நெருங்குகிறது. மனதளவில் வெறுப்போடு இருந்த உங்களுக்கு மன அழுத்தம் நீங்கப்போகிறது. திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் கை கூடி வரும், காரணம் குரு பகவான் உங்க ராசியில் இருந்து ஏழாம் வீட்டினை பார்க்கிறார். சனிபகவானின் நகர்வும் அற்புதங்களை ஏற்படுத்தும். ஜென்ம சனியில் பாதிப்பு உங்களுக்கு நீங்கப்போகிறது.

தொழில் வாய்ப்பு பெருகும்

தொழில் வாய்ப்பு பெருகும்

காதல் விவகாரங்களில் சிக்கிக்கொள்ள வேண்டாம். கடன் வாங்க வேண்டாம் குடும்பத்தில் பிரச்சினைகள் வரலாம். கூட்டு முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்கும். உங்களுக்கு ஏற்பட்டிருந்த ஆரோக்கிய குறைபாடுகள் நீங்கும். நிறைய மாற்றங்களும் முன்னேற்றங்களும் நிறைந்த மாதம். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தொழில் வாய்ப்பு பெருகும். தொழிலை மேம்படுத்தும் அளவிற்கு பணம் கிடைக்கும். தொழிலில் இருந்த கஷ்டங்கள் நீங்கும். ராகுவின் பார்வை உங்க ராசியின் மீது விழுகிறது. ராகுவை உங்க ராசியில் இருந்து குரு கிடைக்கிறது. கஷ்டங்கள் நீங்கும் காலம் வந்து விட்டது.

திடீர் அதிர்ஷ்டங்கள்

திடீர் அதிர்ஷ்டங்கள்

மகரம் ராசியில் சூரியன்,புதன், விரைய ஸ்தானத்தில் கேது, குரு, சனி, இரண்டாம் வீட்டில் சுக்கிரன், ஆறாம் வீட்டில் ராகு, லாப ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. சனிபகவான் 10ஆம் தேதிக்கு மேல் உங்க ராசியில் உள்ள சூரியனோடு இணைகிறார். புதன் 16 ஆம் தேதி இரண்டாம் வீட்டிற்கு நகர்கிறார், 19ஆம் தேதி சுக்கிரன் மூன்றாம் வீட்டிற்கு செல்வது சிறப்பு. லாப ஸ்தானத்தில் உள்ள செவ்வாய் மாத இறுதியில் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்திற்கு வந்து குரு கேது உடன் இணைகிறார். உங்க ராசியில் சஞ்சரிக்கும் சூரியன், புதனால் புத ஆதிபத்ய யோகம் கிடைக்கிறது. குடும்பத்தில் இருந்து வந்த கஷ்டங்கள் நீங்கி வெளிச்சம் பிறக்கும். முன்னேற்றங்கள் நிறைந்த மாற்றமாக அமைந்துள்ளது. திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். அக்கம் பக்கத்தினரிடம் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

எதிர்பாராத பணவரவு

எதிர்பாராத பணவரவு

மாணவர்களுக்கு இரண்டாம் வீட்டில் உள்ள சுக்கிரனால் முன்னேற்றங்கள் கிடைக்கும். வீடு மாற்றம் ஏற்படும். வேலையில் இடமாற்றம் ஏற்படும். சனியும் உங்க ராசியில் சூரியனுடன் இணைவதால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பணக்கஷ்டம், குழந்தைகளினால் ஏற்பட்ட மனக்கஷ்டம் நீங்கும். இந்த மாதம் உங்களுக்கு வரும் நல்ல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

நகை வாங்குவீர்கள்

நகை வாங்குவீர்கள்

தொழில் மாற்றம் இடமாற்றம் நல்லதாகவே அமையும். நட்பு வட்டாரத்தில் கொஞ்சம் கவனமாக இருங்க வார்த்தைகளை விட வேண்டாம். தொழில் சிறப்பாக இருக்கும். தொழிலில் ஏற்பட்ட நஷ்டங்கள் நீங்கும். மாணவர்களுக்கு படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்ப ஸ்தானத்தில் உள்ள சுக்கிரன் பணவரவை தருவார். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். பெண்களுக்கு நகைகள், ஆடை ஆபரணங்கள் சேரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+