தை மாத ராசி பலன்கள் 2020 : துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு ராஜயோகம்
தை மாதம் மகர மாதம். சூரியன்,புதன் மகரம் ராசியில் சஞ்சரிக்கின்றனர். தனுசு ராசியில் இருந்து சனி மகர ராசிக்கு திருக்கணிதப் பஞ்சாங்கப்படி இடப்பெயர்ச்சி அடைகிறார். மிதுனத்தில் ராகு, தனுசு ராசியில் கேது, க
சென்னை: தை மாதம் சூரியன் மகரம் ராசியில் சஞ்சரிக்கிறார். வடக்கு திசை நோக்கி தனது பயணத்தை இந்த மாதத்தில் இருந்துதான் சூரியன் தொடங்குகிறார்.
உத்தராயண புண்ணிய காலம் தை முதல் தேதி முதல் தொடங்குகிறது. தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகியஆறு மாதங்களும் உத்தராயண புண்ணிய காலம் என்றும் தேவர்களின் பகல் காலம் ஆகும். இந்த மாதங்களில் நிறைய சுப காரியங்களை செய்யலாம். ரத சப்தமி என்பது தை மாதத்தின் வளர் பிறையில் வரும் சப்தமி திதி. இந்த நாளில்தான் சூரியன் தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குகிறார். இந்நாளில் அதிகாலையில் எழுந்து நீராடி தீபம் ஏற்றி சூரிய வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினத்தில் தங்களால் இயன்ற தானங்களைச் செய்யலாம். இந்தநாளில் விரதம் இருந்து சூரியனை வழிபட ஆரோக்கியம் அதிகமாகும். செல்வம் செல்வாக்கு அதிகமாகும். பகைவர்களை வெல்லும் சக்தி கிடைக்கும்.
கிரகங்களின் சஞ்சாரத்தை வைத்து துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
தை மாத தொடக்கத்தில் கிரகங்கள் சஞ்சாரத்தை பார்த்தால், சூரியன்,புதன் மகரம் ராசியில் சஞ்சரிக்கின்றனர். மிதுன ராசியில் ராகு, தனுசு ராசியில் சனி, கேது, குரு, விருச்சிகத்தில் ஆட்சி பெற்ற செவ்வாய், கும்பத்தில் சுக்கிரன்,என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது. தை மாதம் கிரகங்களின் பெயர்ச்சியை பார்த்தால், தை பத்தாம் தேதி சனிபகவான் மகரம் ராசிக்கு இடம் மாறுகிறார், 16ஆம் தேதி கும்பத்திற்கு இடம்மாறுகிறார். தை 19ஆம் தேதி மீனம் ராசிக்கு சுக்கிரன் இடம் மாறுகிறார். தை 24ஆம் தேதி செவ்வாய் தனுசு ராசிக்கு இடம் மாறி அங்கு சஞ்சரிக்கும் குரு, கேது உடன் கூட்டணி சேருகிறார்.
தை மாதத்தில் கிரகங்களின் சஞ்சாரம் இடப்பெயர்ச்சி ஆகியவற்றை பொறுத்து துலாம், விருச்சிகம் ராசிக்காரர்களுக்கும் பண வருமானம் எப்படி இருக்கும், வேலை வாய்ப்புகள் எப்படி இருக்கும் அரசு வேலை கிடைக்குமா? இடமாற்றம் பதவி உயர்வு வருமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகமாகும் திருமணம் கை கூடி வருமா? சுப நிகழ்ச்சிகள் நடைபெறுமா என்ற கேள்விகளுக்கு இந்த ராசி பலன்கள் மூலம் பதில் கிடைக்கும்.

கிரகங்கள் எப்படி
தை மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு அற்புதமான மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் தை மாதத்தில் சூரியன் புதன் நான்காம் வீட்டிலும் முயற்சி ஸ்தானமான மூன்றாம் வீட்டில் கேது, குரு, சனி இணைந்திருக்கிறார்கள். இரண்டாம் வீட்டில் செவ்வாய், ஐந்தாம் வீட்டில் சுக்கிரன், பாக்ய ஸ்தானமான ஒன்பதாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. பத்தாம் தேதிக்கு மேல் சனி நான்காம் வீட்டிற்கு சென்று சூரியனோடு இணைகிறார். புதன் 16ஆம் தேதி ஐந்தாம் வீட்டிற்கு நகர்கிறார், 19ஆம் தேதி சுக்கிரன் ருண ரோக ஸ்தானமான ஆறாம் வீட்டிற்கு மாறுகிறார். செவ்வாய் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டிற்கு 24ஆம் தேதி நகர்கிறார். இந்த கிரகங்களின் சஞ்சாரம் உங்களுக்கு நன்மைகள் அதிகம் நடக்கும்.

பாராட்டுக்கள் கிடைக்கும்
சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே உங்களுக்கு இந்த மாதம் உங்க ராசிநாதன் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிப்பது சிறப்பு. தன ஸ்தானத்தில் உள்ள ஆட்சி பெற்ற செவ்வாய் அற்புதமான பலன்களை தருவார். சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்டிருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். தாயார் வழி சொத்துக்கள் கிடைக்கும். பெற்றோர்களுக்கு மதிப்பு கொடுங்கள். அரசு மூலமான பாராட்டுக்கள் கிடைக்கும். சனி நான்காம் வீட்டிற்கு மாறுகிறார்.

படிப்பில் கவம் தேவை
அர்தாஷ்டம சனியால் பாதிப்புகள் எதுவும் இல்லை நல்லதே நடக்கும். காரணம் உங்க ராசியில் சனி உச்சமடைகிறார். இந்த மாதம் சின்னச் சின்ன சந்தோஷங்கள் வரும். வீட்டில் உறவினர்களின் வருகையால் உற்சாகம் பிறக்கும். தேர்வு காலம் நெருங்குகிறது படிப்பில் கவனமும் அக்கறையும் தேவை. மறதிகள் ஏற்படலாம் நினைவாற்றலை வளர்த்துக்கொள்ள நீங்க எல்லாம் சரஸ்வதி தேவியை வணங்குங்கள். பெற்றவர்கள் பிள்ளைகள் மீது தனி கவனம் செலுத்துங்கள்.

கிரகங்களினால் நன்மை
தை மாதம் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு சந்தோஷம் தரக்கூடிய மாதம் கிரகங்களின் சஞ்சாரத்தைப் பார்த்தால் தை மாதத்தில் சூரியன் புதன் மூன்றாம் வீட்டிலும் குடும்ப ஸ்தானமான இரண்டாம் வீட்டில் கேது, குரு, சனி இணைந்திருக்கிறார்கள். உங்க ராசிநாதன் செவ்வாய் உங்க ராசியில் சஞ்சரிக்கிறார். நான்காம் வீட்டில் சுக்கிரன், எட்டாம் வீட்டில் ராகு என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன. பத்தாம் தேதிக்கு மேல் ஏழரை சனி முடிகிறது. மூன்றாம் வீட்டிற்கு சென்று சூரியனோடு இணைகிறார் சனிபகவான். புதன் 16ஆம் தேதி நான்காம் வீட்டிற்கு நகர்கிறார், 19ஆம் தேதி சுக்கிரன் பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் வீட்டிற்கு செல்வது சிறப்பு. 24ஆம் தேதி செவ்வாய் உங்க ராசியில் இருந்து இரண்டாம் வீட்டிற்கு நகர்கிறார்.

தொழில் சிறப்பு
விசாகம், அனுசம் கேட்டை நட்சத்திரகாரர்கள் விருச்சிகத்தில் பிறந்தவர்கள். ராசிநாதன் செவ்வாய் உங்க ராசியில் ஆட்சி பெற்று அமர்ந்திருக்கிறார். செவ்வாயினால் உங்களுக்கு எடுத்த காரியம் வெற்றியில் முடியும். மாத இறுதியில் இரண்டாம் வீட்டிற்கு நகர்கிறார். ரியல் எஸ்டேட் தொழில் சிறப்பாக நடக்கும். வீடு வாங்கலாம். குடும்ப ஸ்தானத்தில் குரு சஞ்சரிப்பது சிறப்பு வருமானம் அதிகமாகும். நீங்க எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வார்கள். வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும் வண்டி வாகன பழுதுகள் நீங்கும். தடைபட்ட திருமணங்கள் முடிவுக்கு வரும். அரசியல்வாதிகளுக்கு நல்ல யோகம் வரும்.

யோகமான மாதம்
மாணவர்களுக்கு நல்ல யோகம் வரப்போகுது. இத்தனை நாட்களாக படித்தது மறந்து போய்விட்டதே என்ற கவலை இருந்தது. இனி அந்த பிரச்சினையில்லை நன்றாக படித்து முன்னேறுவீர்கள் வெற்றிகள் தேடி வரும். கணவன் மனைவி உறவில் இருந்த சிக்கல்கள் தீரும். ஏழரை சனி முடிந்து விட்டதால் உங்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் வருகிறது. நீங்க பட்ட கடன்களை அடைக்கும் அளவிற்கு வருமானம் அதிகமாகும். தை மாதம் பிறந்தால் உங்களுக்கும் வழி பிறக்கும் என்பது நிச்சயமான உண்மை.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications