மேஷத்திற்கு நல்ல செய்தி... மிதுனத்திற்கு சந்திராஷ்டமம் - இன்று பலன்கள் எப்படி?

மகர ராசியில் சந்திரன் கேது மற்றும் செவ்வாய் கிரகங்களுடன் சேர்ந்து அமர்ந்துள்ளார். மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டமம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: சனிக்கிழமை மகர ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மிதுன ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம். மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் இன்றைய பலன்களை பார்க்கலாம்.

ரிஷபத்தில் சூரியன், புதன், மிதுனத்தில் சுக்கிரன், கடகத்தில் ராகு துலாமில் குரு இருக்க தனுசு ராசியில் சனி மகரத்தில் செவ்வாய் கேது மற்றும் உடன் சந்திரன் இணைந்து அமர்ந்துள்ளார்.

இன்றைய தினம் மகரம் ராசிக்காரர்களும், மிதுனம் ராசிக்காரர்களும் அமைதி காப்பது நல்லது. இல்லை எனில் சந்திரன் தனது வேலையை காட்டிவிடுவார்.

மேஷம்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்றைக்கு 10வது வீட்டில் சந்திரன் இருப்பதால் பணியிடத்தில் வேலை பளு அதிகரிக்கும். கவனமாக இருக்கவும்.

குடும்பத்தில் சுப காரியம் நடக்கும். உறவினர்கள் வருகையால் குதூகலமாக இருக்கலாம். கணவன் மனைவிக்கிடையே ரொமான்ஸ் அதிகரிக்கும். குழந்தைகளிடத்தில் கவனம் தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்கள் சேரும். ராசியான நிறம்: வெள்ளை, பச்சை ராசியான எண்கள்: 1,3

ரிஷபம்

ரிஷபம்

ராசிக்கு 9வது இடத்தில் சந்திரன் இருப்பதால் அப்பாவின் உடல் நலத்தில் கவனம் தேவை. மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைப்பதில் கவனம் தேவை. செய்யும் காரியத்தில் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். மற்றவர்களின் பாராட்டைப் பெறுவீர்கள். பணம் கைக்கு கிடைக்கும். இன்றைக்கு ராசியான நிறம்: இளஞ்சிவப்பு, ராசியான எண்கள்: 3,6

மிதுனம்

மிதுனம்

இன்று ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் இருப்பதால் எல்லாவற்றிலும் ஒரு பயம் ஏற்படும். பணியிடத்தில் வீட்டில் அமைதியாக இருக்கவும். வீடு வாகனம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான பயணங்களை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாத நிலை உண்டாகும். ராசியான நிறம்: ஆரஞ்சு ராசியான எண்கள்: 3,9

கடகம்

கடகம்

ராசிக்கு 7வது வீட்டில் சந்திரன் இருக்கிறார். வீட்டில் சின்னச் சின்ன சண்டைகள் ஏற்படும். இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலைகளால் டென்ஷன் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதன் மூலம் முக்கியமான காரியங்களில் நல்ல முடிவு எடுக்க முடியும். குழந்தைகளின் நலனுக்காக பாடுபட வேண்டும். ராசியான நிறம்: மஞ்சள், ராசியான எண்கள்: 1, 9

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்திருப்பதால் வாக்குவாதங்கள் மற்றும் அடுத்தவர் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பணவரவு அதிகரிக்கும் கூடவே செலவுகள் கூடும். பொது இடத்தில் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனகவலை நீங்கி உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். ராசியான நிறம் மஞ்சள், வெள்ளை. ராசியான எண்கள்: 3, 6,

கன்னி

கன்னி

ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் இருப்பதால் பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. இன்று தொழில் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களை விற்பது தொடர்பாக பேசலாம். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். ராசியான நிறம் நீலம், ராசியான அதிர்ஷ்ட எண்கள்: 6, 8

துலாம்

துலாம்

ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் இருப்பதால் தாயாரின் உடல் நலனில் அக்கறை தேவை. குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த சண்டைகள், சச்சரவுகள் தீரும். குழந்தைகள் மூலம் பெருமை ஏற்படும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். மனக்கவலை நீங்கி நிம்மதி உற்சாகம் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. ராசியான நிறம் நீலம், பச்சை ராசியான எண்கள்: 1 மற்றும் 7

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 3வது வீடான முயற்சி ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை தீரும். மனகஷ்டம் உண்டாகும் என்பதால் கவனம் தேவை. உடல் சோர்வு ஏற்படும் மருத்துவ செலவும் வரும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். ராசியான நிறம்: மஞ்சள், நீலம் ராசியான எண்கள்: 3, 5

தனுசு

தனுசு

ராசிக்கு 2வது வீடான குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதால் பணவரவு கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். அதிக ஆர்டர்கள் வரலாம். வேலையை முடித்து விட்டு சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி நிமித்தமாக அலைச்சல் அதிகரிக்கும். ராசியான நிறம்: மஞ்சள், வெள்ளை ராசியான எண்கள்: 5,8

மகரம்

மகரம்

ராசியில் சந்திரன் அமர்ந்திருப்பதால் மனக்குழப்பம் ஏற்படும். அமைதியாக இருப்பது நல்லது. குடும்பத்தில் நிம்மதி குறையும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வது அவர்களின் வெற்றிக்கு உதவும். ராசியான நிறம்: மஞ்சள், நீலம், ராசியான எண்கள்: 4, 6

கும்பம்

கும்பம்

ராசிக்கு 12வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் மனோ தைரியம் அதிகரிக்கும். வெளிநாடு செல்வது தொடர்பான பணியில் இன்று ஈடுபடலாம். பணவரவு அதிகரிக்கும். மனகவலை நீங்கும். லாப ஸ்தானத்தில் இருக்கும் சனி பகவான இக்கட்டான நேரங்களில் கைகொடுப்பார். ராசியான நிறம்: மஞ்சள், பச்சை ராசியான எண்கள்: 3, 5

மீனம்

மீனம்

ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் பணவரவு அதிகரிக்கும். இன்று புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகள் தடையின்றி நடக்கும். வியாபார போட்டிகள் குறையும். அலுவலகத்தில் இருப்பவர்களால் பணிசுமை குறையும். ராசியான நிறம்: வெள்ளை, பிரவுன் ராசியான எண்கள்: 2, 6.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+