Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யாருக்கு பணம் வரும்... செலவு யாருக்கு தெரியுமா? - இன்றைய ராசிபலன்

தனுசு ராசியில் இருக்கும் சந்திரன் மகரம் ராசிக்கு நுழைகிறார். சிம்மத்தில் சூரியன், கடகத்தில் புதன்,ராகு, கன்னியில் சுக்கிரன், துலாம் ராசியில் குரு பகவான், தனுசு ராசியில் சனி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆவணி 07, வியாழக்கிழமை, துவாதசி திதி காலை 10.15 வரை பின்பு வளர்பிறை திரியோதசி. நாள் முழுவதும் உத்திராடம் நட்சத்திரம். நாள் முழுவதும் சித்தயோகம். இன்று மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

தனுசு ராசியில் இருக்கும் சந்திரன் மகரம் ராசிக்கு நுழைகிறார். சிம்மத்தில் சூரியன், கடகத்தில் புதன்,ராகு, கன்னியில் சுக்கிரன், துலாம் ராசியில் குரு பகவான், தனுசு ராசியில் சனி, சந்திரன் மகரம் ராசியில் கேது செவ்வாய் என இன்றைய கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

இன்று சந்திரன் மகரம் ராசியில் நுழைகிறார். மிதுனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் இந்த இரண்டு ராசிக்காரர்களும் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம்

மேஷம்:

மேஷம்:

ராசிக்கு 10வது வீட்டில் சந்திரன் நுழைவதால் தொழில் செய்யும் இடத்தில் கவனமாக இருக்கவும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் ஒத்துழைப்பார்கள் என்றாலும் இன்றைக்கு ஜாக்கிரதையாக இருக்கவும். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 5.

ரிஷபம்:

ரிஷபம்:

ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் நுழையப்போகிறார். சந்திராஷ்டமம் முடியப்போகிறது. கடந்த 2 நாட்களாக இருந்த சிக்கல்கள் முடிவிற்கு வரும் என்றாலும் பிற்பகல் வரை அநாவசிய பேச்சை தவிர்க்கப் பாருங்கள். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. தொழில் வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். ராசியான எண் 4, ராசியான நிறம் சிவப்பு.

மிதுனம்:

மிதுனம்:

இன்று சந்திராஷ்டமம் தொடங்க இருப்பதால் பொறுமையுடன் இருப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றும். புதிய முயற்சிகளை தவிர்க்கவும். வெளிப் பயணங்களில் கவனம் தேவை. பொது இடத்திலும் வீட்டிலும் கவனமாக இருப்பது அவசியம். ஒரு செயலை செய்யும் முன்பு யோசித்து செய்வது நல்லது. ராசியான நிறம் பச்சை, ராசியான எண் 7.

கடகம்:

கடகம்:

ராசிக்கு 7வது வீட்டில் களத்திர எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர், நண்பர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். இன்று பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும். வீட்டிற்கு புதிய பொருள் வந்து சேரும். பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றியை தரும். இன்று உங்களுக்கு அமோகமான நாள். ராசியான நிறம் அடர் சிவப்பு, ராசியான எண் 5.

சிம்மம்:

சிம்மம்:

ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருப்பதால் குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் பெருகும். பெரிய மனிதர்களின் நட்பு நல்ல முன்னேற்றத்தை தரும். ராசியான நிறம் மஞ்சள், ராசியான எண் 4.

கன்னி:

கன்னி:

ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். எதிர்ப்புகள் அடங்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை இன்று நீங்கள் சந்திப்பீர்கள். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் வெற்றி வாய்ப்பு உண்டாகும்.வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டவும். கடினமாக உழைக்க வேண்டிய நாள். ராசியான நிறம் நீலம், ராசியான எண் 5.

துலாம்:

துலாம்:

ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் இருக்கிறார். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். குடும்பத்தில் பெற்றோரிடம் வீண் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு மனஅமைதி குறையும். விட்டு கொடுத்து சென்றால் பிரச்சனைகள் குறையும். ராசியான நிறம் வெள்ளை, ராசியான எண் 3.

விருச்சிகம்:

விருச்சிகம்:

ராசிக்கு 3வது வீட்டில் சந்திரன் இருக்கிறார் முயற்சி ஸ்தானத்தில் இருக்கும் சந்திரனால் செய்யும் செயலில் வெற்றி கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

தனுசு:

தனுசு:

ராசிக்குள் இருந்த சந்திரன் இரண்டாம் வீட்டிற்குள் நுழைகிறார். பணவரவு அதிகரிக்கும். கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் தீரும். கொடுத்த கடன்கள் வசூலாகும். மனஉறுதியோடு பிரச்சனைகளை எதிர்கொள்வீர்கள். உறவினர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கடன் பிரச்சனைகள் தீரும்.

மகரம்:

மகரம்:

ராசிக்குள் சந்திரன் நுழைவதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். முன் கோபத்தால் நல்லவர் களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

கும்பம்:

கும்பம்:

ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருக்கிறார். கவனமாக இருக்க வேண்டும். அலுவலகத்தில் பைல்களை கையாளும் போது கவனம் தேவை. உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். சிலருக்கு உத்தியோக உயர்வு கிட்டும். வருமானம் அதிகரிக்கும் நாள்.

மீனம்:

மீனம்:

தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன்பிறந்தவர்கள் அன்பாக இருப்பார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுப்பாட்டிற்குள் வரும். வியாபாரத்தை பெருக்குவீர்கள். இன்று உங்களுக்கு தனவரவு தாராளமாக இருக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். கொடுத்த கடன்கள் வசூலாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+