Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சி? யாருக்கு சந்திராஷ்டமம் தெரியுமா? - ராசிபலன்

இன்றைக்கு ரிஷப ராசியில் சந்திரன் அமர்ந்துள்ளார். துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைக்கு சந்திராஷ்டமம். 12 ராசியில் பிறந்தவர்களுக்கும் இன்றைய நாள் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராசிபலன் தினசரியும் சந்திரன் நகர்வை வைத்து கணிக்கப்படுகிறது. இன்றைக்கு ரிஷப ராசியில் சந்திரன் அமர்ந்துள்ளார். 12 ராசியில் பிறந்தவர்களுக்கம் இன்றைய நாள் எப்படி இருக்கு என்று பார்க்கலாம்.

இன்றைய தினம் ரிஷபத்தில் சூரியன், சந்திரன், மிதுனத்தில் புதன், கடகத்தில் சுக்கிரன், ராகு, துலாமில் குருபகவான் தனுசு ராசியில் சனி, மகரத்தில் கேது மற்றும் செவ்வாய் என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

ரிஷபத்தில் சந்திரன் அமர்ந்துள்ளார். துலாம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் நீடிப்பதால் இந்த இரண்டு ராசிக்காரர்களும் அமைதி காப்பது நல்லது.

மேஷம்

மேஷம்

ராசிக்கு 2வது வீடான தன ஸ்தானத்தில் சந்திரன் நீடிப்பதால் இரண்டு நாட்களாக இருந்த மனக்கலக்கம் நீங்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். அலுவலகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். இன்று உங்களை பொறுத்தமட்டில் இனிமையான நாள். ராசியான நிறம் நீலம், மஞ்சள் ராசியான எண் 2, 3.

ரிஷபம்

ரிஷபம்

ராசியில் சந்திரன் இருப்பதால் கவனமாக செயல்படவும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். உங்கள் துணை இன்று ரொமான்ஸ் மூடில் இருக்கிறார். மாணவர்கள் மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். ராசியான நிறம் சிவப்பு, அடர் நீலம் ராசியான எண் 5, 6.

மிதுனம்

மிதுனம்

ராசிக்கு 12வது வீடான விரைய ஸ்தானத்தில் சந்திரன் நீடிப்பதால் சுப செலவுகள் ஏற்படும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழிவர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை.எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். செலவுக்கு ஏற்ப திடீர் பணப்புழக்கம் ஏற்படும். ராசியான நிறம் நீலம், பச்சை ராசியான எண்கள் 4, 5.

 கடகம்

கடகம்

ராசிக்கு 11வது வீடான லாப ஸ்தானத்தில் சந்திரன் இருப்பதால் உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை ஏற்படும். பழைய பாக்கிகள் வசூலாகும். தாராளமாக பணம் வரும். பரிசும், பாராட்டும் கிடைக்கும். ராசியான நிறம் ஆரஞ்சு ராசியான எண் 1, 7

சிம்மம்

சிம்மம்

ராசிக்கு 10வது வீடான தொழில் ஸ்தானத்தில் சந்திரன் நீடிப்பதால் உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலைதூக்கலாம். கணவன், மனைவிக் கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். கலவரத்திலும் குதூகலமாக காதல் உணர்வுகள் அதிகரிக்கும் ராசியான நிறம் ஆரஞ்சு, பச்சை ராசியான எண் 7, 9.

கன்னி

கன்னி

ராசிக்கு 9வது வீட்டில் சந்திரன் உள்ளதால் வெளிநாடு பயணம் செய்ய முயற்சி மேற்கொள்ளலாம். அப்பாவின் உடல் நலனில் அக்கறை தேவை. இன்று உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பத்திரமாக பாதுகாப்பது நல்லது. எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. உங்கள் வாழ்க்கைத்துணை உங்களுக்கு உறுதுணையாக இருப்பதால் மகிழ்ச்சி நீடிக்கும் ராசியான நிறம் வெள்ளை, வெளிர் நீலம் ராசியான எண் 5 9.

துலாம்

துலாம்

ராசிக்கு 8வது வீட்டில் சந்திரன் நீடிப்பதால் இன்று காரிய தடை, தாமதம் உண்டாகலாம். மனதில் கலக்கம் இருந்தாலும் செல்வ செழிப்பும், ஆரோக்கியமும் ஏற்படும். காதல் வாழ்க்கையில் கசப்புணர்வு எற்படும். திடீர் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. ராசியான நிறம் சிவப்பு, வெளிர் நீலம் ராசியான எண்கள் 4, 6.

விருச்சிகம்

விருச்சிகம்

ராசிக்கு 7வது வீட்டில் அமர்ந்துள்ள சந்திரன் உங்கள் ராசியை பார்ப்பதால் வாழ்க்கையில் நிம்மதி ஏற்படும். களத்திர ஸ்தானத்தில் உள்ள சந்திரனால் குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். 12வது வீட்டில் உள்ள குருவினால் சின்னச் சின்ன விரைய செலவுகள் ஏற்படும். இன்று பணதேவை ஏற்பட்டாலும் அதை திறமையாக சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக பணிகளில் அலட்சியம் காட்டாமல் செயல்படுவது நல்லது. தடைகளை தாண்டி வெற்றி பெறலாம். ரகசியமான தகவலை வெளியில் எங்கும் கூறாதீர்கள். ராசியான நிறம் சிவப்பு, நீலம் ராசியான எண் 2, 7.

தனுசு

தனுசு

ராசிக்கு 6வது வீட்டில் சந்திரன் மறைந்து உள்ளதால் குடும்ப உறுப்பினர்களுக்காக மருத்துவ செலவு செய்ய வேண்டி இருக்கலாம். கணவன் மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகளை அவர்களின் போக்கிலேயே விட்டு பிடிப்பது நன்மை தரும். இன்று உங்களுக்கு ரொமான்ஸ் ஆன நாள். ராசியான நிறம் மஞ்சள், வெள்ளை. ராசியான எண் 3, 7.

மகரம்

மகரம்

ராசிக்கு 5வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளதால் பிள்ளைகளிடம் அக்கறை செலுத்தவும். உங்கள் திருமண வாழ்வில் சிறந்த இனிமையான நாளாக அமையும். இன்று மற்றவர்களால் ஏற்படும் தொல்லைகளில் சிக்காமல் இருக்க கவனமாக செயல்படுவது நல்லது. மாணவர்கள் கவனமாக படிப்பது கல்வியில் முன்னேற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பார்த்த காரியம் தாமதமாக முடிந்தாலும் நல்ல பலனை தரும். ராசியான நிறம் நீலம் ராசியான எண் 4,8.

கும்பம்

கும்பம்

ராசிக்கு 4வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது அம்மாவின் உடல் நலனில் அக்கறை தேவை. வண்டி வாகனம் வாங்க இன்று முயற்சி செய்யலாம்.வீண்செலவு ஏற்பட்டாலும் அதற்கு ஏற்ப பண வரவும் இருக்கும். கனவுகளால் தொல்லை ஏற்படலாம். சரியான நேரத்தில் தூங்க முடியாத சூழ்நிலை உருவாகும். அவசரமாக முடிவெடுப்பது உங்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். கடுமையான வார்த்தைகள் அமைதியைக் கெடுக்கும். ராசியான நிறம் மஞ்சள், சிவப்பு, ராசியான எண் 6, 9.

மீனம்

மீனம்

ராசிக்கு 3வது வீட்டில் சந்திரன் சஞ்சாரம் உள்ளது. முயற்சிகள் வெற்றியை தரும். தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்பட வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம். நிறைய பணம் வந்தாலும் பத்திரப்படுத்துங்கள், ஊதாரித்தனமாக செலவு செய்ய வேண்டாம். ராசியான நிறம் மஞ்சள், பச்சை. ராசியான எண்கள் 3, 9.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+