இளைஞரணி செயலாளர், தலைவர், முதல்வர்... படிப்படியாக முன்னேறும் உதயநிதி - கை கொடுக்கும் யோகங்கள்

உதயநிதி ஸ்டாலின் ஜாதகத்தில் கிரகமாலிக யோகம் என்ற அமைப்பு இருக்கிறது. இந்த யோகம் கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும் என்றும் இந்த அமைப்பு தலைவராகும் தகுதியை பெற்றுத்தரும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முதல் கூட்டம்-வீடியோ

    மதுரை: உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்டிருப்பது சமூக வலைத்தளங்களில் விவாதப்பொருளாகியுள்ளது. ஆனால் அவரது ஜாதகத்தில் தலைவராகும் தகுதி இருப்பதாலேயே உதயநிதியை தேடி பதவியும் பொறுப்புகளும் வந்துள்ளதாக ஜோதிடர்கள் கூறியுள்ளனர். உதயநிதி ஸ்டாலின் ஜாதகத்தில் கோடி மக்களில் ஒரு சிலருக்கு மட்டுமே இருக்கக் கூடிய கிரகமாலிகா என்ற யோக அமைப்பு இருப்பதால்தான் அவருக்கு தலைவராகும் தகுதியும் முதல்வராகும் தகுதியும் தேடி வரும் என்றும் ஜோதிடர்கள் கூறியுள்ளனர்.

    ஒரு ஜாதகத்தில் கிரகங்கள் மாலை போன்ற அமைப்பில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து அமைந்திருப்பது கிரக மாலிகா யோகம் என்று சொல்லப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் 1977ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி பிறந்திருந்திருக்கிறார். மேஷ லக்னம் ரிஷப ராசி. மேஷம் லக்னம் ரிஷபம் முதல் தனுசு வரை எட்டு கிரகங்கள் வரிசையாக அமர்ந்துள்ளன. இந்த யோகம் ஒரு கோடியில் ஒருவருக்குத்தான் இருக்கும். ரிஷபம் சந்திரன், மிதுனம் குரு கடகம் செவ்வாய் சிம்மத்தில் சனி கன்னியில் ராகு துலாமில் ஆட்சி பெற்ற சுக்கிரன் விருச்சிகத்தில் சூரியன் தனுசு ராசி புதன் என கிரகங்கள் ராசிகளில் வரிசையாக அமர்ந்துள்ளன.

    நவ கிரகங்களும் தனித்தன்மையானவை. ஒவ்வொரு கிரகத்திற்கும் தனித்துவமான இயல்புகள் இருக்கின்றன. கிரகங்கள் அனைத்தும் மற்றவற்றுடன் இணையாமல், சுயத் தன்மையுடன் செயல்படும்போது, கூட்டுபலன்கள் எதுவுமின்றி அந்த ஜாதகமே ஒரு உயரிய தனித்தன்மையுடன் இயங்க ஆரம்பிக்கும். இது கிரகமாலிகா யோகத்தில் மட்டுமே சாத்தியமாகும். ராகு, கேதுவைத் தவிர மற்ற ஏழு கிரகங்களும் வரிசையாக ஏழு வீடுகளில் இருந்தால் அது கிரகமாலிகா யோகம் எனப்படும். இந்த யோக அமைப்பில் பிறந்தவர்களுக்குப் நாற்பது வயதிற்கு மேல் பேரும் புகழும் வசதியும், உயர் அந்தஸ்தும் பெருகும்.

    வளமான எதிர்காலம்

    வளமான எதிர்காலம்

    உதயநிதியின் ஜாதகத்தை கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த பிரபல ஜோதிடர் ஒருவர் இவருக்கு வளமான பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்றும். இவர் அதிர்ஷ்டகரமானவர் நடிகராகவும் அரசியல்வாதியாகவும் அப்பாவை விட புகழ்பெறுவார். தாத்தாவைப் போல சிறந்த வெற்றி பெறுவார் என்றும் கூறியிருக்கிறார். அதன்படியே இப்போது நடந்து வருகிறது. 1982ஆம் ஆண்டு முதல் 2017 வரை தன் வசம் வைத்திருந்த இளைஞரணி செயலாளர் பதவியை தற்போது தனது மகனுக்கு அளித்திருக்கிறார் ஸ்டாலின்.

    அரசியலில் வெற்றி

    அரசியலில் வெற்றி

    வாரிசுகள் சினிமாவிலோ அரசியலிலோ நுழைவது எளிது. அதே நேரத்தில் அவர்களை மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே ஜெயிக்க முடியும். அதேபோலத்தான் உதயநிதி ஸ்டாலின் சினிமாவில் ஓராளவு ஜெயித்த பின்னர் அரசியலில் அடி எடுத்து வைத்திருக்கிறார். இவருக்கும் இருக்கும் யோகத்தினால் உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியலில் வெற்றி பெறும் அதிர்ஷ்டமும் தலைவருக்கான தகுதியும் இருக்கிறது என்கிறார் அந்த ஜோதிடர்.

    வசிய சக்தி

    வசிய சக்தி

    நாற்பது வயதிற்கு மேல் உதயநிதி ஸ்டாலினுக்கு பதவி கிடைத்துள்ளது. உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவதற்கு அவரது பெற்றோர் ஆதரவு மட்டுமல்ல கருணாநிதி குடும்பத்தினர் அனைவரின் ஆதரவும் கிடைக்கும். அழகிரி குடும்பம், கனிமொழி குடும்பத்தினரும் ஒத்துக்கொள்வார்கள். அந்த அளவிற்கு ஜாதகத்தில் அதற்கான அமைப்பு இருக்கிறது என்கிறார் பிரபல ஜோதிடர்.

    நல்ல நாளில் பதவியேற்பு

    நல்ல நாளில் பதவியேற்பு

    பிறந்த ஜாதகத்தில் யோகங்கள் உள்ளது போல உதயநிதி ஸ்டாலின் இளைஞரணி செயலாளராக பதவியேற்ற நாளும் நல்ல நாள். ஜூலை 4, 2019 மாலை 3 மணி 11 நிமிடம். மேஷ லக்னம், மிதுனத்தில் சூரியன், ராகு, சுக்கிரன், கடகத்தில் சந்திரன், செவ்வாய், புதன் விருச்சிக குரு, தனுசு ராசியில் சனி கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

    சிவப்பு நிறம்

    சிவப்பு நிறம்

    உதயநிதிக்கு சிவப்பு நிற பொன்னாடை போர்த்தி வாழ்த்தியிருக்கிறார் ஸ்டாலின். உதயநிதி பொறுப்பேற்கும்போது சிகப்பு நிறம் துண்டு சிகப்பு நிறம் கர்சீப், சிகப்பு நிற பேனாவும் வைத்திருந்திருக்கிறார். காரணம் உதயநிதி ஜாதகத்தில் செவ்வாய் நீசமாகியிருக்கிறார். இப்போது செவ்வாய் நீசமடைந்திருந்தாலும் கடக ராசியில் சந்திரன் ஆட்சி பெற்று செவ்வாய் உடன் இணைந்து நீச பங்கமாகியிருக்கிறார். செவ்வாயின் சக்தியை அதிகரிக்க சிவப்பு நிறத்தை கையில் வைத்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

    சனி திசை புதன் புத்தி

    சனி திசை புதன் புத்தி

    உதயநிதி ஸ்டாலினுக்கு சனி மகாதிசை தற்போது நடைபெறுகிறது. ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ளாமல் பிரிந்த குடும்பம் உதயநிதியை ஒத்துக்கொள்வார்கள். குடும்பத்தை ஒற்றுமைப்படுத்தி கட்சியை வலுப்படுத்துவார் உதயநிதி. திமுகவிற்கு தலைவராகும் தகுதி உதயநிதி ஸ்டாலினுக்கு இருக்கிறது. ஸ்டாலினை விட உதயநிதி சிறப்பாகவே கட்சியை வழிநடத்தி செல்வார். அனைவரையும் அரவணைத்துச் செல்வார் என்றும் அந்த ஜோதிடர் கூறியுள்ளார்.

    ஒற்றுமைப்படுத்துவார்

    ஒற்றுமைப்படுத்துவார்

    அழகிரி, கனிமொழி முரசொலி மாறன் குடும்பத்தினரும் உதயநிதி தலைமையை ஏற்றுக்கொள்வார்கள். திமுகவின் எதிர்காலம் உதயநிதி ஸ்டாலினை நம்பித்தான் இருக்கிறது என்றும் அந்த ஜோதிடர். திமுகவில் பெரிய தலைவர்கள் பலரும் இருக்கின்றனர். உதயநிதியின் வயதை விட அனுபவசாலி தலைவர்கள் திமுகவில் இருக்கின்றனர். எனவேதான் நிதானமாக காய் நகர்த்தி 41 வயது வயதில் சனி மகா திசையில் புதன் புத்தியில் பதவியை அளித்துள்ளனர்.

    மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்

    மக்கள் ஆதரவு பெற்ற தலைவர்

    ஒருவரிடம் மனிதநேயம், ஆளுமைத்திறன், திறமை, மக்கள்செல்வாக்கு, வசியம், ராஜ தந்திரம், முற்போக்குச் சிந்தனை, தொண்டர்கள் இவையெல்லாம் சேர்ந்தால்தான் தலைவனுக்கு உரிய தகுதியைப் பெறமுடியும். சூரியன் ஆளுமைத்திறனுக்கும், செவ்வாய் மனிதநேயத்திற்கும், குரு சந்திரன் மக்கள் செல்வாக்கிற்கும் புதன் ராஜ தந்திரத்திற்கும் சனி தொண்டர்களின் ஆதரவையும் பெற்றுத்தரும்.

    உற்சாகமடைந்த ஆதரவாளர்கள்

    உற்சாகமடைந்த ஆதரவாளர்கள்

    சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சந்திரன், புதன், சனி ஆகிய கிரகங்களை அரசு கிரகங்கள் என்பார்கள். இந்த கிரகங்கள் அனைத்தும் ஜாதகத்தில் முழுமையான பலம் பெற்று இருந்தால், உலகம் போற்றும் உத்தமத் தலைவன் என்ற பெயர் எடுத்து ஆட்சி அதிகாரத்தைப் பெற முடியும்.நாலாம் பாவம் நாலாம் அதிபதி குரு சூரியன் செவ்வாய் பதவி பற்றி சொல்லும். நாலாம் பாவத்தில் சூரியன் இருந்தால் 40 வயதுக்கு மேல் ஜாதகர் நல்ல வளர்ச்சி அடைவார் என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். உதயநிதி ஸ்டாலினுக்கு குடும்பத்தினர் ஆதரவு இருப்பதைப் போல மக்கள் ஆதரவும் இருந்தால்தான் வெற்றி பெற முடியும். தாத்தா கருணாநிதியைப் போலவும் எம்ஜிஆர், ஜெயலலிதா, கட்சித்தொண்டர்களையும் மக்களையும் வசீகரிப்பாரா என்பதை காலம்தான் சொல்ல வேண்டும்.

    யோக காலத்தில் பதவி

    யோக காலத்தில் பதவி

    ஒருவரின் ஜாதகம் எத்தனை யோகமானதாக இருந்தாலும் அவருக்கு தசா புத்தி சரியானதாக இருக்க வேண்டும். ரிஷப ராசியில் பிறந்த உதயநிதிக்கு தற்போது அஷ்டமத்து சனி காலம் நடைபெறுகிறது. ஜனவரி மாதம் சனி பெயர்ச்சியாகி ஒன்பதாம் வீட்டிற்கு செல்கிறார். குரு பெயர்ச்சி எட்டாம் வீட்டிற்கு வருகிறார். சனி தசையில் சனி பகவான் நன்மையே செய்வார் என்பதால் இந்த கால கட்டத்தில் பதவியை கொடுத்திருக்கின்றனர். இன்று இளைஞரணி செயலாளராக இருக்கும் உதயநிதி ஸ்டாலின் எதிர்காலத்தில் திமுக கட்சியின் தலைவராகவும் தமிழக முதல்வராகவும் வாய்ப்பு உள்ளது என்று ஜோதிடர்கள் கணித்துள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+