சுக்கிரன் பெயர்ச்சி 2024: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கு கிடைக்கும் பலன்கள்.. முழு விவரம் இதோ

Subscribe to Oneindia Tamil

சுக்கிரன் பெயர்ச்சி: புத்தாண்டு பிறக்கப் போகிறது. டிசம்பர் 28 ஆம் தேதியான இன்று கும்ப ராசிக்குள் சுக்கிர பகவான் நுழைவதால் 12 ராசிக்காரர்களுக்கும் என்னென்ன பலன்களை கொடுக்கப் போகிறார் என்று இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்... (Sukiran peyarchi 12 zodiac signs benefits)

உலகத்தில் உள்ள அனைத்து இன்பங்களுக்கும், செல்வத்துக்கும் செழிப்புக்கும் அதிபதியாக திகழ்பவர் சுக்கிரன். ராசியில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால்தான் செல்வம் பொருகும். ராகு நல்ல நிலையில் இருந்தால் தான் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அந்த வகையில், 2025 ஆம் ஆண்டில் பல்வேறு முக்கிய கிரகங்கள் பெயர்ச்சியாக உள்ளன. கிரக பெயர்ச்சி பலன்கள் கணிப்பின் அடிப்படையில், கும்ப ராசிக்குள் நுழைகிறார் சுக்கிர பகவான்.

astrology

சுக்கிரன் கிரகம் 23 அல்லது 25 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து இன்னொரு ராசிக்கு மாறுகிறார். சுக்கிரன் கிரகம் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு மாறுவதால் 12 ராசிக்காரர்களும் அதன் தாக்கத்தைப் பெறுவார்கள். இந்த ராசியில் ஏற்கனவே சனி அமைந்துள்ளது. சனியும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் எந்த ராசிக்கு என்ன பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்...

மேஷம்: மேஷ ராசிக்காரர்களின் அதிபதி செவ்வாய். சுக்கிரன் கும்ப ராசிக்குள் நுழைவதால் சுப பலன்களை தரப் போகிறார். பண வரவு உண்டாகும். பெரிய பெரிய வேலைகளைச் செய்து அதில் வெற்றியைக் காண்பீர்கள். சமுதாயத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும்.

ரிஷபம்: ரிஷப ராசியின் அதிபதியான சுக்கிரனின் ராசி மாற்றத்தால் சாதனை படைக்கும் வாய்ப்புள்ளது. முக்கியமான வேலைகளைச் செய்து முடிப்பீர்கள். அலுவலகம், தொழில், வியாபாரத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்திலும், வீட்டிலும் ஏதேனும் ஒருவகையான உதவி கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும்.

கடகம்: கடக ராசிக்காரர்களின் ராசியதிபதி சந்திரன். சுக்கிரனின் இடப்பெயர்ச்சியால் நீங்கள் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டம் இது. திடீர் திடீரென புதுப்புது பிரச்னைகள் உண்டாகும். இதனால், மிகுந்த கவலைகள் உண்டாகும். இனம்புரியாத பயம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. உடல் நலம் குறித்த கவலை ஏற்படும்.

கன்னி ராசி: கன்னி ராசிக்காரர்களின் அதிபதி புதன். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. கடினமான, பிரச்னைகள் நிறைந்த வேலைகளைச் செய்வதை தவிர்ப்பது நல்ல பலன்களைத் தரும். எதிரிகள் தொந்தரவு கொடுக்க முயற்சி செய்வார்கள். முக்கியமாக செய்து முடிக்க வேண்டிய வேலைகளில் தாமதம் உண்டாகும்.

மிதுனம்: மிதுன ராசிக்காரர்களின் அதிபதி புதன். சமுதாயத்தில் மிதுன ராசிக்காரர்களின் வெற்றியும், மரியாதையும் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகள் அனைத்தையும் வேகமாகச் செய்து முடிப்பீர்கள். தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள்.

விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்களின் அதிபதி செவ்வாய். சுக்கிரனின் ராசி மாற்றம் உங்களுக்கு நற்பலன்களைத் தரும். பணிச்சுமை அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. உங்களுடைய அம்மாவிடம் இருந்து சில நன்மைகள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த பிரசனைகள் அனைத்தும் தீரும். கணவன், மனைவிக்கிடையே அன்பு பெருகும்.

சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களின் அதிபதி சூரியன். சுக்கிரனின் ராசி மாற்றத்தால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். காதலிப்பவர்களுக்கு சாதகமான காலமாக இருக்கும். கணவனால் மனைவிக்கும், மனைவியால் கணவனுக்கும் கிடைக்கும் உதவியால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பண வரவு கணிசமாக உயரும்.

துலாம்: துலாம் ராசிக்காரர்களின் அதிபதி சுக்கிரன். துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் இடப்பெயர்ச்சியால் ராஜயோகம் உண்டாகும். குடும்பம், நண்பர்கள், அலுவலகங்கள் என எதிர்பாராத உதவிகள் உங்களை வந்து சேரும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

தனுசு: தனுசு ராசிக்காரர்களின் ராசியாதிபதி குரு. சுக்கிரனின் ராசி மாற்றத்தால் தனுசு ராசிக்காரர்களுக்கு பண வரவு கிடைக்கும். உங்களது வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும் வாய்ப்பு ஏற்படும். அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட இலக்குகளை சரியான நேரத்தில் முடித்து நற்பெயரைச் சம்பாதிப்பீர்கள்.

மகரம்: மகர ராசிக்காரர்களின் அதிபதி சனி. உங்களுக்கு சுக்கிரனின் இடப்பெயர்ச்சியால் நல்ல நேரம் ஆரம்பமாகப் போகிறது. வேலை, தொழில், வியாபாரத்தில் நீங்கள் நிர்ணியித்த பெரிய இலக்குகளை அடைவீர்கள். பழைய பிரச்னைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். மன நிம்மதி அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்: கும்ப ராசிக்காரர்களின் ராசியாதிபதி சனி. சுக்கிரனின் ராசி மாற்றம் கும்ப ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அள்ளித் தரப் போகிறது. சமுதாயத்தில் மதிப்பு, மரியாதை கிடைக்கும். குடும்பத்துடன், நண்பர்களுடன் சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் ஏற்படும்.

மீனம்: மீன ராசிக்காரர்களின் ராசியாதிபதி குரு. சுக்கிரனின் இடப்பெயர்ச்சியால் உங்களுக்கு திடீர் செலவுகள் ஏற்படும். ஏதாவது ஒரு வகையான இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. வேலைகளில் கவனமாக இருப்பது நல்லது. கவனக் குறைவால் பிரச்னைகளைச் சந்திக்கும் வாய்ப்புள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+